AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆப்பிள் CEO பதவியில் இருந்து விலகும் டிம் குக்.. அடுத்த CEO யார்?

New Apple CEO After Tim Cook | ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள டிம் குக் பதவி விலக உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக, ஜான் டெர்னஸ் என்பவர் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக பதவி ஏற்ப உள்ளார்.

ஆப்பிள் CEO பதவியில் இருந்து விலகும் டிம் குக்.. அடுத்த CEO யார்?
ஆப்பிள் சிஇஓ டிம் குக்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 21 Apr 2026 16:52 PM IST

யவாஷிங்டன், ஏப்ரல் 21 : ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO – Chief Executive Officer) பதவியில் இருந்து டிம் குக் (Tim Cook) விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிம் குக்கின் பதவி விலகல் குறித்த தகவல் வெளியான நிலையில், உலகின் மிக முக்கிய நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தலைமை செயல் அதிகாரி யார் என்பது குறித்து எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆப்பிள் சிஇஓ பதவியில் இருந்து விலகும் டிம் குக்

உலகின் மிக முக்கிய டெக் நிறுவனங்களில் ஒன்றாக ஆப்பிள் உள்ளது. ஸ்மார்ட்போன்கள்,  ஐபேட்கள், லேப்டாப்கள் உள்ளிட்ட ஏராளமான டெக் கேட்ஜெட்ஸ்களை இந்த நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. உலக டெக் சந்தையில் மிக முக்கிய நிறுவனமாக விளங்குகிறது. 2011 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த ஸ்டீவ் ஜாப்ஸ் பதவி விலகிய நிலையில், அவருக்கு அடுத்ததாக டிம் குக் பதவி ஏற்றார்.

இதையும் படிங்க : ஆப்பிள் 18 ப்ரோ ஸ்மார்ட்போன்.. என்ன என்ன அம்சங்கள்.. வெளியான முக்கிய தகவல்கள்!

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக பதவி ஏற்ற அவர், அதன் வளர்ச்சிக்காக ஏராளமான பணிகளை மேற்கொண்டார். குறிப்பாக ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபத்தை இரண்டு மடங்கு உயர்த்தும் வகையில் செயல்பட்டார். டிம் குக்கின் கடின உழைப்பின் காரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு பல மடங்கு உயர்வை சந்தித்தது.

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய சிஇஓ யார்?

டிம் குக், ஆப்பிள் நிறுவனத்தை அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்வதற்கான தொடர் பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், அவர் சிஇஓ பதவியில் இருந்து விலக உள்ளார். செப்டம்பர் 01, 2026 அன்று ஆப்பிள் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக ஜான் டெர்னஸ் பதவி ஏற்பார் என்று ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : ஏஐ மனிதர்களின் சிந்திக்கும் திறனை குறைத்துவிடும்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இந்த நிலையில் தான், ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ பதவியில் இருந்து விலகுவது குறித்து டிம் குக், ஆப்பிள் நிறுவன ஊழியர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஆப்பிள் சிஇஓ பணி தன் வாழ்வில் சிறப்பு சேர்த்ததாக கூறியுள்ளார். இந்த நிலையில், புதிய சிஇஓ பொறுப்பேற்றதும் ஆப்பிள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்ற உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Follow Us