ஆப்பிள் 18 ப்ரோ ஸ்மார்ட்போன்.. என்ன என்ன அம்சங்கள்.. வெளியான முக்கிய தகவல்கள்!
Apple Planning To Launch Apple 18 Pro Smartphone | ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த அட்டகாசமான படைப்பான ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் என்ன என்ன அம்சங்கள் இடம்பெறும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் அதிக மக்களால் விரும்பி பயன்படுத்தப்படும் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் (Smartphone) நிறுவனமாக ஆப்பிள் (Apple) உள்ளது. இந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், ஆப்பிள் நிறுவனம் தற்போது தனது ஆப்பிள் 18 ப்ரோ ஸ்மார்ட்போனை (Apple 18 Pro Smartphone) அறிமுகம் செய்வதற்கான பணிகளில் இறங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை 2027, செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆப்பிள் 18 ப்ரோ ஸ்மார்ட்போன் குறித்து வெளியாகியுள்ள முக்கிய தகவல்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
விரைவில் அறிமுகமாக உள்ள ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ ஸ்மார்ட்போன்
ஆப்பிள் நிறுவனம் கடைசியாக தனது ஆப்பிள் 17 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அதில் அதிக தரம் கொண்ட ஆரஞ்சு நிற அப்பிள் ஐபோன் 17 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. அது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தான், தற்போது ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதையும் பைங்க : படித்ததும் குறுஞ்செய்திகள் மறைந்துவிடும்.. புதிய அம்சத்தை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப்!
ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
இந்த ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஏ20 ப்ரோ சிப் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மிக அதிக பேட்டரி திறன் உடன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. அதாவது 5,200 mAh பேட்டரி அம்சத்தை இது கொண்டு இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன. தற்போது அறிமுகம் செய்யப்பட்டு வரும் புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை போலவே இந்த ஸ்மார்ட்போனிலும் மேம்படுத்தப்பட்ட கேமரா அம்சங்கள் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ரூ.399க்கு 3டிபி டேட்டா! பிஎஸ்என்எல் வழங்கும் அதிரடி ஆஃபர் – அப்படி என்ன ஸ்பெஷல்?
இந்த ஸ்மார்ட்போன் 24 எம்பி முன்பக்க கேமராவை கொண்டு இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை ஆப்பிள் நிறுவனம் 2027 செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.