அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமானது ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போன்.. விலை என்ன?
Redmi Introduced New Redmi 15 C 5G Smartphone | ரெட்மி நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போனான ரெட்மி 15 சி 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரெட்மி 15 சி 5ஜி
இந்திய பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன்கள் தான் ரெட்மி ஸ்மார்ட்போன்கள் (Redmi Smartphones). இந்த நிறுவனம் தொடர்ந்து பல அசத்தல் அப்டேட்டுகளுடன் மிக குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதாவது ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போனை (Redmi 15C 5G Smartphone) அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் அறிமுகமானது ரெட்மி 15 சி 5ஜி ஸ்மார்ட்போன்
2025, ஜனவரி மாதத்தில் ரெட்மி 14 சி 5ஜி ஸ்மார்ட்போன் (Redmi 14C 5G Smartphone) அறிமுகமானது. இந்த நிலையில், ரெட்மி 15 சி 5ஜி ஸ்மார்ட்போனும், 14 சி ஸ்மார்ட்போனை போலவே பட்ஜெட் விலையில் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தான் பல அட்டகாசமான அம்சங்களுடன் ரெட்மி 15 சி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.
இதையும் படிங்க : சிம் கார்டு ஆக்டிவாக இல்லை என்றால் இந்த செயலிகளை பயன்படுத்த முடியாது.. அரசு போட்ட முக்கிய ரூல்ஸ்!
ரெட்மி 15 சி 5ஜி ஸ்மார்ட்போன் – சிறப்பு அம்சங்கள்
Bold. Powerful. Unstoppable.
The #REDMI15C 5G is pure #2026KaBigBoss energy!
✅ 6000mAh Battery + 33W Fast Charging
✅ 50MP AI Dual Camera
✅ 120Hz Smooth Display
✅ Royale DesignSale starts 11th Dec, 12 Noon, starting at ₹12,499!
Know More: https://t.co/97CmQRpFhC pic.twitter.com/j9X9ZwMC7F— Redmi India (@RedmiIndia) December 3, 2025
இந்த ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியேடெக் டைமன்சிட்டி 6300 பிராசசர் அம்சத்தை கொண்டுள்ள நிலையில், 6,000 mAh பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேம்ரா மற்றும் 8 எம்பி முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஐயப்ப பக்தர்களை குறி வைத்து நடக்கும் மோசடி.. கேரளா போலீசார் எச்சரிக்கை!
விலை மற்றும் இதர அம்சங்கள்
இந்த ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போன் வெறும் ரூ.12,499-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் மூன்று நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிட்நைட் பிளாக், மிண்ட் கிரீம் மற்றும் டஸ்க் பர்பில் ஆகிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.