அமலுக்கு வந்தததா வாட்ஸ்அப் பிரீமியம் பிளஸ்?.. வெளியான முக்கிய தகவல்!

WhatsApp Premium Plus Feature | மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் உள்ள ஏராளமான மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், அதில் அறிமுகமாக உள்ளதாக கூறப்படும் வாட்ஸ்அப் பிரீமியம் பிளஸ் என்ற அம்சம் குறித்து வெளியான முக்கிய தகவல் குறித்து விரிவாக பார்க்கலாம்.

அமலுக்கு வந்தததா வாட்ஸ்அப் பிரீமியம் பிளஸ்?.. வெளியான முக்கிய தகவல்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

11 May 2026 19:59 PM

 IST

மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) செயலி, உலக அளவில் உள்ள மில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்படுகிறது. தகவல் பரிமாற்றம், ஆவணங்களை பரிமாறுதல், புகைப்படங்கள், வீடியோ கால், ஆடியோ கால் என ஏராளமான அம்சங்கள் இந்த செயலியில் உள்ளன. ஏற்கனவே இத்தகைய அட்டகாசமான அம்சங்களை வாட்ஸ்அப் கொண்டுள்ள நிலையில், கூடுதல் அம்சங்களை வழங்கக்கூடிய வாட்ஸ்அப் பிரீமியம் பிளஸ் (WhatsApp Premium Plus) அம்சத்தை அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் சாதாரன வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்படுவதை விடவும் கூடுதல் அம்சங்கள் வழங்கப்படும். இந்த புதிய அம்சம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ்அப்பின் புதிய பிரீமியம் அம்சம்

வாட்ஸ்அப் நிறுவனம் தனது புதிய பிரீமியம் அம்சம் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இந்த பிரீமியம் அம்சத்தில் வாட்ஸ்அப்பில் ஏற்கனவே இருக்ககூடிய அம்சங்களை விடவும் பல அட்வான்ஸ்டு அம்சங்கள் வழங்கப்படும். உதாரணமாக இந்த அம்சத்தை பயன்படுத்தும் பயனர்கள் தங்களளுக்கு பிடித்த மாதிரி தங்களது செயலியை வடிவமைத்துக்கொள்ளலாம். இந்த அம்சம் தற்போது குறிப்பிட்ட ஐபோன் பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், பயனர்கள் பிரீமியம் அம்சத்தில் சைன் இன் செய்ய வேண்டும் என்றால் காத்திருக்க வேண்டும்.

இதையும் படிங்க : பொது இடங்களில் இருக்கும் வைஃபை பயன்படுத்துகிறீர்களா?.. உஷார்.. இந்த சிக்கல்களை நினைவில் கொள்ளுங்கள்!

குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டும் வாட்ஸ்அப் பிளஸ்

வாபீட்டாவின் அறிக்கையின் படி, வாட்ஸ்அப் பிளஸ் அம்சம் தற்போது சமீபத்திய வர்ஷன் கொண்ட செயலிகளை பதிவிறக்கம் செய்த பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. எக்ஸ் செயலியை போல இந்த பிரீமியம் அம்சத்தை பயன்படுத்தும் பயனர்களுக்கு பெரிய மாற்றம் எதுவும் இருக்காது. செயலியின் செயல்பாடுகள் அனைத்தும் வழக்கம் போலவே இருக்கும். ஆனால், சில கூடுதல் அம்சங்கள் இதில் வழங்கப்படும்.

இதையும் படிங்க : கோடையில் அடிக்கடி பழுதாகும் ஏசி.. நீங்களே சரிசெய்யலாம்.. எப்படி தெரியுமா?

வாட்ஸ்அப் பிளஸில் என்ன என்ன சிறப்பு அம்சங்கள்?

இந்த வாட்ஸ்அப் பிளஸில் பிரீமியம் ஸ்டிக்கர் பேக், 18 நிறங்களில் இண்டர்பேஸ், 14 வகையான வித்தியாசமான ஐகான்கள் ஆகியவை இதில் வழங்கப்படும். வாட்ஸ்அப் பிளஸில் இந்த அம்சங்களை பெற வேண்டும் என்றால் பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி