Year Ender 2025 : 2025-ல் சமூக வலைத்தளங்களை ஆட்சி செய்த ஏஐ டிரெண்டுகள்!
Artificial Intelligence Trends Of 2025 | தொழில்நுட்பத்தின் தற்போதைய அதிகபட்ச வளர்ச்சியாக செயற்கை நுண்ணறிவு அம்சம் உள்ளது. இந்த அம்சத்தை பயன்படுத்தி கடுமையான மற்றும் அசாதாரனமான வேலைகளை மிக சுலபமாக செய்ய முடியும். இந்த நிலையில், 2025-ல் சமூக வலைத்தளங்களை ஆட்சி செய்த சில ஏஐ டிரெண்டுகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) அம்சம் உலக அளவில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியின் (Technology Development) அசாதாரன இலக்காக இது உள்ள நிலையில், இந்த செயற்கை நுண்ணறிவு அம்சம் பல அசாதாரன செயல்களை செய்து பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. இவ்வாறு ஏராளமான அசத்தல் அம்சங்களை இந்த செயற்கை நுண்ணறிவு அம்சம் கொண்டுள்ள நிலையில், பொதுமக்கள் அதனை தங்களது அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
தங்களுக்கு எழும் சந்தேகங்கள் குறித்து விடை தெரிந்துக்கொள்வது, வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த ஆலோசனைகளை கேட்பது, மனநலன், உடல்நலன் குறித்த கேள்விகளை கேட்பது என தங்களது தனிப்பட்ட தேவைகளுக்கான அம்சமாகவே சிலர் இந்த செயற்கை நுண்ணறிவு அம்சத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இவ்வாறு பல அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ள செயற்கை நுண்ணறிவின் மூலம் 2025 ஆம் ஆண்டு அறிமுகமாகி, பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சில டிரெண்ட்டுகள் (Trends) குறித்து விரிவாக பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டை கலக்கிய செயற்கை நுண்ணறிவு டிரெண்டுகள்
ஜிப்லி (Ghibli), நானோ பனானா (Nano Banana), விண்டேஜ் புடவை (Vintage Saree) ஆகியவை 2025-ல் இணையத்தை கவர்ந்த சில அட்டகாசமான அம்சங்களாக உள்ளன.
ஜிப்லி டிரெண்ட்
2025 மார்ச் மாதத்தில் இணையத்தை ஆக்கிரமத்து இருந்த டிரெண்ட் தான் ஜிப்லி. இணையத்தில் எங்கு பார்த்தாலும் இந்த ஜிப்லி புகைப்படங்கள் தான் இருந்தன. பொதுமக்கள் தங்களது குடும்பம், உறவினர்கள், நண்பர்கள், செல்ல பிராணிகள் என தங்களுக்கு பிடித்தவர்களின் புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் மூலம் ஜிப்லி ஆர்டாக (Ghibli Art) மாற்றி அவற்றை தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து மகிழ்ந்தனர். இந்த டிரெண்டுக்கு பலர் வரவேற்பு தெரிவித்தாலும், சிலர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையும் படிங்க : Year Ender : 2025-ல் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகள்.. ஆப்பிள் வெளியிட்ட பட்டியல்!
காரணம் ஜப்பான் நாட்டில் 1985 ஆம் ஆண்டு ஹவாய் மியாசகி மற்றும் இசோவா தகாஹாட்டா ஆகியோரால் “ஸ்டூடியோ ஜிப்லி” என்ற பெயரில் அனிமேஷன் திரைப்பட தயாரிப்பு ஸ்டூடியோ ஒன்று திறக்கப்பட்டது. இங்கிருந்து தான் முதன் முதலில் ஜிப்லி கலை தொடங்கியது. ஸ்டூடியோ ஜிப்லியில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மிகவும் தனித்துவமானதாக இருக்கும். குறிப்பாக அந்த திரைப்படங்களை தயாரிக்க ஓவியர்கள் பல ஆண்டுகள் செலவழித்து ஓவியங்களை வரைந்துள்ளனர். இவ்வாறு கடின உழைப்பின் பலனாக உருவான ஒரு கலையை ஏஐ மதிப்பிழக்க செய்வதாகவும் பலரும் குற்றம் சாட்டினர்.
விண்டேஜ் புடவை டிரெண்ட்
ஜிப்லியை தொடந்து இணையத்தை கலக்கிய மற்றொரு செயற்கை நுண்ணறிவு அம்சம் தான் இந்த விண்டேக் புடவை டிரெண்ட் (Vintage Saree Trend). அதாவது ஒரு புகைப்படத்தை கொடுத்து அதனை 60 அல்லது 70களில் நடிகைகள் எவ்வாறு புடவை, மேக் அப் அணிந்திருப்பார்களோ அவ்வாறு மாற்றுவது தான் இந்த அம்சம். இந்த விண்டேஜ் அம்சம் பெண்களை அதிக அளவில் கவர்ந்தது. பெரும்பாலான பெண்கள் தங்களுக்கு பிடித்த நிறங்களில் தாங்கள் சேலை அணிந்திருப்பதை போல இந்த விண்டேஜ் அம்சத்தில் தங்களது புகைப்படங்களை எடிட் செய்து சமூக வளைத்தள பங்கங்களில் பதிவிட்டனர். இந்த அம்சமும் ஆதரவையும், எதிர்ப்பையும் பெற்றது.
இதையும் படிங்க : Year Ender 2025 : 2025-ல் இன்ஸ்டாகிராமில் அறிமுகமான அட்டகாசமான அம்சங்கள்!
நானோ பனானா டிரெண்ட்
ஜிப்லி, விண்டேஜ் புடவை இந்த டிரெண்டுகளுக்கு பிறகு இணையத்தை கலக்கிய டிரெண்ட் தான் இந்த நானோ பனானா டிரெண்ட். இந்த நானோ பனானா டிரெண்ட் மூலம் பொதுமக்கள் தங்களது புகைப்படங்களை 3டி வடிவில் மாற்றி அந்த புகைப்படங்களை தங்களது சமூக ஊடக கணக்குகளில் பதிவிட்டு வந்தனர். அதாவது, ஒரு புகைப்படத்தில் மேசை மீது இருக்கும் கம்ப்யூட்டரில் ஒரு 3டி வடிவிலான புகைப்படம் இருக்கும். அதற்கு அருகே மேசை மீது ஒரு அட்டை பெட்டிக்குள் 3டி பொம்மை இருப்பது போன்று இருக்கும். இந்த 3டி பொம்மை இருக்கும் இடத்தில் தங்களது புகைப்படம் இருப்பதை போல பலரும் தங்களது புகைப்படங்களை எடிட் செய்து பதிவிட்டனர்.
இதையும் படிங்க : Year Ender 2025 : 2025-ல் வாட்ஸ்அப்பில் அறிமுகமான அட்டகாசமான அம்சங்கள்!
ஏஐ புகைப்படங்களுக்கு எழுந்த கடும் எதிர்ப்புகள்
இவ்வாறு பல டிரெண்டுகளில் தொடர்ந்து ஏஐ புகைப்படங்கள் வெளியாகி வந்த நிலையில், அது குறித்து சில அதிர்ச்சியூட்டும் தகவல்களும் வெளியாகின. அதாவது, இலவசமாக கிடைக்கிறது என்பதால் பலரும் இந்த செயற்கை நுண்ணறிவு அம்சங்களை பயன்படுத்தி தங்களது புகைப்படங்களை எடிட் செய்து வந்த நிலையில், நிறுவனங்கள் தங்களது சோதனைகளுக்கு மனித முகங்களின் மாதிரிகள் தேவைப்படுவதால் பொதுமக்களின் புகைப்படங்களை பயன்படுத்திக்கொள்வதாக தகவல்கள் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.