Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இந்தியாவில் ஸ்டார்லிங் கட்டணம் அதுவல்ல.. விளக்கம் அளித்த எலான் மஸ்க் நிறுவனம்!

Starlink Clarifies Internet Service Price Details | எலான் மஸ்கின் ஸ்டார்லிங் நிறுவனத்தின் சேவையை இந்தியாவில் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஸ்டார்லிங்கின் சேவை கட்டணம் குறித்து தகவல் வெளியான நிலையில், அந்த நிறுவனம் அது குறித்து விளக்கமளித்துள்ளது.

இந்தியாவில் ஸ்டார்லிங் கட்டணம் அதுவல்ல.. விளக்கம் அளித்த எலான் மஸ்க் நிறுவனம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 10 Dec 2025 23:57 PM IST

உலக பணக்காரரும், டெஸ்லா (Tesla) நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மக்ஸ் (Elon Musk) தொழில்நுட்ப துறையில் பல்வேறு சாதனைகளை மேற்கொண்டு வருகிறார். மனித ரோபோக்கள் முதல் செயற்கை கோல்கள் வரை எலான் மஸ்கின் நிறுவனங்கள் பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், ஸ்டார்லிங்க் (Starlink) என்ற நிறுவனத்தை தொடங்கி உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அதிவேக இணைய வசதியை வழங்குவதற்காக ஸ்டார்லிங் என்ற நிறுவனத்தை தொடங்கி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

ஸ்டார்லிங்க் சேவையை இந்தியாவில் வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் எலான் மஸ்க்

எலான் மஸ்க், ஸ்டார்லிங்க் சேவையை இந்தியாவில் வழங்குவதற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, விரைவில் இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை  வழங்கப்படும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், டிசம்பர் 08, 2025 அன்று ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் கட்டணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதில், இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையில் ஒரு மாத கட்டணம் ரூ.8,600 எனவும், ஸ்டார்லிங் சேவையை நிறுவுவதற்கான கட்டணம் ரூ.34,000 என்று கூறப்பட்டு இருந்தது. ஸ்டார்லிங்க் சேவையின் கட்டணம் மிக அதிகமாக இருந்த நிலையில், அது கடும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க : WhatsApp : வாட்ஸ்அப்பில் Reminder செட் செய்வது எப்படி?.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!

கட்டணம் குறித்து ஸ்டார்லிங்க் நிறுவனம் விளக்கம்

ஸ்டார்லிங் நிறுவனத்தின் கட்டணம் தொடர்பான தகவல்கள் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அது குறித்து அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது இந்தியாவில் ஸ்டாலிங்க் சேவையின் கட்டணம் குறித்து வெளியான விவரங்கள் தொழில்நுட்ப கோளாறால் ஏற்பட்டது என்றும், இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவைக்கான கட்டணத்தை இதுவரை நிர்ணயம் செய்யவில்லை என்றும் ஸ்டார்லிங் நிறுவனம் அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது.

இதையும் படிங்க : பிளிப்கார்ட் Buy Buy சேல்.. நத்திங் ஸ்மார்ட்போன்கள், வாட்ச் மற்றும் இயர்பட்ஸ்களுக்கு அசத்தல் தள்ளுபடி!

தற்போதைய சூழலில் இந்தியாவில் ஒரு மாதத்திற்கு ரூ.500-க்குள் இணைய சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் சேவை கட்டணம் மிக அதிகமாக இருந்தது கடும் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது அது குறித்து ஸ்டார்லிங்க் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.