3 பிளேட் ஃபேன் vs 4 பிளேட் ஃபேன் – இந்த சம்மருக்கு எது சிறந்த காற்றை தரும்?
3 Blade Vs 4 Blade Ceiling Fan : ஃபேன் என்பது ஒவ்வொரு வீட்டிலும் இன்றியமையாததாக மாறியிருக்கிறது. வீட்டில் காற்றோட்டமாக இருப்பதற்கு சரியான ஃபேனை தேர்ந்தெடுப்பது மிகுவும் அவசியம். இந்த கட்டுரையில் 3 பிளேட்கள் கொண்ட ஃபேன் மற்றும் 4 பிளேட்கள் கொண்ட ஃபேனுக்கும் உள்ள வித்தியாசம் குறித்து பார்க்கலாம்.
இந்தியாவில் கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில் நாளுக்கு நாள் வெப்பம் கடுமையாக அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர். இந்த நிலையில் ஃபேன் என்பது ஒவ்வொரு வீட்டிலும் இன்றியமையாததாக மாறியிருக்கிறது. வீட்டில் காற்றோட்டமாக இருப்பதற்கு சரியான ஃபேனை தேர்ந்தெடுப்பது மிகுவும் அவசியம். பெரும்பாலான மக்கள் ஃபேன் வாங்கும்போது அதன் பிராண்ட் மற்றும் விலை ஆகியவற்றை மட்டுமே கருத்தில் கொள்கின்றனர். ஆனால் அவர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது நாம் வாங்கும் ஃபேன் 3 பிளேடா அல்லது 4 பிளேடா என்பது தான்.
காரணம் 3 பிளேட் மற்றும் 4 பிளேட்கள் கொண்ட ஃபேன் இரண்டிற்கும் செயல்திறனை பொறுத்தவரை வித்தியாசமானவை. காற்றோட்டம், சுழற்சி வேகம், மின் நுகர்வு ஆகியவற்ற இது நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும். கிராம்டன் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி இந்திய குடும்பங்களில் பெரும்பாலும் 3 பிளேட்கள் கொண்ட ஃபேன்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
இதையும் படிக்க : கூகுள் பேயின் ‘PocketMoney’ அம்சம்… ஆபத்தானதா? உண்மை என்ன..?




ஃபேனில் உள்ள பிளேட்கள் ஏன் முக்கியமானவை?
இது தொடர்பாக கிராம்டன் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி, ஃபேனில் உள்ள பிளேட்கள் மிக முக்கியமான பணியை செய்கின்றன. சுற்றியுள்ள பகுதிகளில் காற்றை ஒரே இடத்தில் குவிக்கும் பணியை இந்த ஃபேன்கள் செய்து வருகின்றன. ஃபேனில் உள்ள மிஷின் அதன் பிளேட்களை சுழல செய்கிறது. இதன் காரணமாக அறை முழுவதும் காற்று எளிதாக சென்றடைகிறது. ஆனால் பிளேட்களின் எண்ணிக்கை தான் காற்றின் வேகத்தை தீர்மானிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
3 பிளேட் ஃபேன்கள்
இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் 3 பிளேட்கள் கொண்ட ஃபேன்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இவை எடைகுறைவாக இருப்பதுடன் இது இயங்க குறைவான மின்சாரமே தேவைப்படும். மேலும் குறைவான எடை காரணமாக மிக வேகமாக சுழலும். இதனால் அறை முழுவதும் மிக வேகமாக காற்று சென்றடைய உதவும். இவை குறைந்த மின்சாரத்தை பயன்படுத்துவதால் மாதாந்திர மின் கட்டணம் பெரிய அளவில் உயராது. விலையைப் பொறுத்தவரை, சராசரி இந்தியர்களால் வாங்க முடிகிற விலையிலேயே இது கிடைக்கும்.
இதையும் படிக்க : சர்வீஸ் செய்த பிறகும் ஏசியில் கூலிங் கிடைக்கலையா? இந்த பிரச்னையாக இருக்கலாம் – எச்சரிக்கும் நிபுணர்கள்
4 பிளேட் ஃபேன்கள்
4 பிளேட்கள் கொண்ட ஃபேன்கள் வெப்பநிலையை ஒப்பீட்டளவில் குளிர்ச்சியான இருக்கும் சூழலுக்கு பெரிதும் உதவும். இவை அதிக எடகொண்டவை. குறைவான காற்று தேவைப்படும வெப்பம் குறைவாக இருக்கும் இடங்களுக்கு இந்த ஃபேன் ஏற்றது. குறிப்பாக ஏசி பயன்படுத்தும்போது அந்த அறையில் இந்த 4 பிளேட்கள் கொண்ட ஃபேனை பயன்படுத்தும்போது அது ஏசி காற்றை விரைவில் அறை முழுவதும் நிரப்பும். இதனால் நீண்ட நேரம் ஏசி பயன்படுத்த தேவை இருக்காது. ஆனால் இந்த வகை ஃபேன்கள் அதிக மின்சாரத்தை பயன்படுத்தும் என்பதால் மாதாந்திர மின் கட்டணம் உயரக்கூடும். மேலும் இதன் விலையும் சற்று அதிகமாக இருக்கலாம்.
இதனால் இந்திய காலநிலையை பொறுத்தவரை வழக்கமான வீட்டு பயன்பாடுகளுக்கு 3 பிளேடுகள் கொண்ட ஃபேன்கள் சிறப்பாக இருக்கும். குளிர்ந்த பகுதியிலோ அல்லது ஏசி பயன்படுத்தும் அறைகளுக்கு 4 பிளேடுகள் கொண்ட ஃபேன்கள் சிறப்பாக இருக்கும். எனவே, ஃபேன் வாங்குவதற்கு முன், அதன் தேவை, அறையின் அளவு மற்றும் மின் நுகர்வு ஆகியவற்றைத் தவறாமல் கருத்தில் கொள்ளுங்கள்.