இந்திய சமையலறைகளில் எல்பிஜி சிலிண்டர் இல்லாமல், மின்சாரத்தில் எல்பிஜி ஸ்டவ் போல தீயைப் பயன்படுத்தி சமைக்க உதவும் புதிய தொழில்நுட்ப சாதனம் தற்போது கவனம் ஈர்த்துள்ளது. பிளாஸ்மா எலக்ட்ரிக் ஸ்டவ் எனப்படும் இந்த புதிய அடுப்பு, எல்பிஜி அடுப்பு போலவே சமைக்கும் அனுபவம் மற்றும், பாதுகாப்பான மற்றும் சுத்தமான சமையல் அனுபவத்தையும் வழங்கும் என கூறப்படுகிறது. இந்த புதிய வகை அடுப்பு குறித்து மத்திய அமைச்சர் பிரல்லட் ஜோஷி சமீபத்தில் குறிப்பிடப்பட்டதைத் தொடர்ந்து, இது குறித்து பொதுமக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.
பிளாஸ்மா எலக்ட்ரிக் ஸ்டவ் என்றால் என்ன?
APAPL நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஃபிளேம் பிளாஸ்மா ஸ்டவ் என்பது மின்சாரத்தை மட்டும் பயன்படுத்தி சமையல் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது புதிய தலைமுறை அடுப்பாக பார்க்கப்படுகிறது. இதற்கு எல்பிஜி, பிஎன்ஜி போன்ற எரிபொருள் தேவையில்லை. ஆனால் எல்பிஜி கேஸ் ஸ்டவ் போலவே தீயை உருவாக்கி சமையல் செய்ய உதவும்.
இந்த அடுப்பு எப்படி வேலை செய்கிறது?
இந்த அடுப்பு பிளாஸ்மா ஆர்க் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இதில் மின்சாரம் காற்றை அயனியாக மாற்றுகிறது. இதன் அதிக வெப்பமடையும் பிளாஸ்மா தீயை உருவாக்குகிறது. இதனால் எரிபொருள் இல்லாமல் தீ உருவாக்க முடியும். இதன் வெப்ப நிலை 1200 டிகிரி செல்சியஸ் முதல் 1300 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். எல்பிஜி அடுப்புகளை விட நம்மால் வேகமாக சமைக்க முடியும்.
இந்தி சமையலில் சப்பாத்தி, வறுவல், குழம்பு போன்ற உணவுகளை சமைக்க முடியும். இந்த அடுப்பின் மூலம் விரைவாக சமைக்க முடியும். தீயில் சமைக்கும் ஒரு உணர்வு கிடைக்கும். எனவே இது இந்திய சமையலுக்கு மிகவும் ஏற்றதாக பார்க்கப்படுகிறது.
இண்டக்ஷன் ஸ்டவ்விற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?
இண்டக்ஷன் ஸ்டவ்விற்கு மின்சாரம் தேவை. குறிப்பிட்ட பாத்திரங்கள் இருந்தால் மட்டுமே சமைக்க முடியும். எல்பிஜி போன்ற தீயில் சமைக்கும் உணர்வு கிடைக்காது.
அதே போல பிளாஸ்மா எலக்ட்ரிக் ஸ்டவ்வை பொறுத்தவரை மின்சாரம் தேவை, எல்பிஜி போல தீயில் சமைக்கும் உணர்வு கிடைக்கும். அதனைத்து விதமான பாத்திரங்களையும் வைத்து சமைக்கலாம். புகை, எரிபொருள் கசிவு போன்ற பிரச்சனைகள் இதில் இல்லை.
விலை மற்றும் தொழில்நுட்ப விவரங்கள்
பிளாஸ்மா எலக்ட்ரிக் ஸ்ட்வ் பவர் 2500 வாட்ஸ் முதல் 6000 வாட்ஸ் வரை கிடைக்கிறது. 220 ஏசி வோல்ட் மின்சாரம் யன்படுத்தும். இதன் எடை 10 கிலோ வரை இருக்கும். இதன் விலை ரூ.35000 முதல் தொடங்கும் என கூறப்படுகிறது. மேலும் சிங்கிள் பர்னர் மற்றும் டபுள் பர்னர் மாடல்கள் கிடைக்கின்றன.