2-ஆவது திருமணம் செய்த 3 மாதத்தில் சோகம்.. திருச்சியில் பெண் தீக்குளித்து தற்கொலை.. பரபரப்பு பின்னணி!
Trichy Young Woman Self Harm : திருச்சி மாவட்டத்தில் கணவனுடன் ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக துறையூர் போலீசார், ஆர்.டி.ஓ. விசாரித்து வருகின்றனர் .
திருச்சி மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக 2- ஆவது திருமணம் செய்து கொண்ட 3 மாதத்தில் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள இந்திரா நகர் பகுதியில் சிலவர் அபிநயா ( 36 வயது). இவர், முசிறி துணை நீதிமன்றத்தில் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்றிருந்த நிலையில் முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்தார். தொடர்ந்து, வயலூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவரை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 2- ஆவது திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார்.
கணவருடன் தகராறில் தீக்குளித்த மனைவி
இதில், கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், தம்பதி இடையே ஒருமித்த கருத்து இல்லாமல் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சம்பவத்தன்று வழக்கம் போல கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதமாக மாறி உள்ளது. இதில், கோபித்துக் கொண்ட அபிநயா வீட்டின் சமையல் அறைக்கு சென்று, அங்கு வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணையை தன் மீது ஊற்றி தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார்.
மேலும் படிக்க: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்.. ஆயுதப்படை காவலர் திடீர் மரணம்.. சோகத்தில் முடிந்த கதை!
திருச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த பெண்
இதில், நெருப்பின் வெப்பம் தாங்க முடியாமல் அபிநயா ஆலறிய நிலையில், அக்கம், பக்கத்தினர் திரண்டு வந்து அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், உடல் முழுவதும் கொழுந்து விட்டு எரிந்த தீயால் அவரை உடனடியாக மீட்க முடியவில்லை. பின்னர், சிறிது நேரம் போராட்டத்துக்கு பிறகு, பலத்த தீக் காயங்களுடன் அபிநயாவை மீட்ட பொதுமக்கள் அவசர ஆம்புலன்ஸ் மூலமாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலன் இன்றி அபிநயா பரிதாபமாக உயிரிழந்தார்.
வரதட்சணை கொடுமையா என தீவிர விசாரணை
தொடர்ந்து, அவரது சடலம் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக சவ கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக அபிநயாவின் தாய் ராஜம்மாள் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், பூசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, திருமணம் நடைபெற்று 3 மாதங்களே ஆகும் நிலையில் திருச்சி கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். அபிநயா வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க: ஜெம் வீரமணி நினைத்தாலும் தப்ப முடியாது.. அடுத்தடுத்து பாயும் பாலியல் புகார்கள்.. குண்டர் சட்டத்தில் அடைக்க திட்டம்!