பச்சிளம் குழந்தையை கொன்று தென்னந்தோப்பில் வீசிய நர்ஸ்.. அதிர்ச்சி சம்பவம்!
Young Woman Killed New Born Baby | கன்னியாகுமரியில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த நர்ஸ் ஒருவர். பச்சிளம் குழந்தையை கொலை செய்து தென்னந்தோப்பில் வீசியுள்ளார். இந்த சம்பவம் குறித்த திடுக்கிடும் தகவல்கள் போலீசார் விசாரணையில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி, ஆகஸ்ட் 03 : கன்னியாகுமரியில் (Kanyakumari), காதலனுடன் தவறான உறவில் இருந்ததால் பிறந்த ஆண் குழந்தையை, நர்ஸ் ஒருவர் கொடூரமாக கொலை செய்து தென்னந்தோப்பில் வீசிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தான் கர்ப்பமானதை அறிந்து காதலன் கைவிட்ட நிலையில், அந்த பெண் இந்த கொடூர செயலை செய்துள்ளார். இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொலை செய்த நர்ஸ்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் நாகராஜா கோயில் அருகே முதியோர் இல்லம் மற்றும் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த வளாகத்தின் அருகே ஒரு தென்னந்தோப்பும் அமைந்துள்ளது. அங்கு ஆகஸ்ட் 01, 2026 அன்று பச்சிளம் ஆண் குழந்தையின் சடலம் கிடந்துள்ளது. அந்த குழந்தை தொப்புள் கொடி கூட அறுபடாத நிலையில் கிடந்துள்ளது.
இதையும் படிங்க : பொள்ளாச்சி அருகே லாரி மீது கார் மோதி கோர விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மரணம்
போலீசார் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்
குழந்தையின் சடலத்தை கண்ட மருத்துவர் ஒருவர், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து அவர்கள் விசாரணை தொடங்கியுள்ளனர். அப்போது தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியே வந்துள்ளன.
இதையும் படிங்க : அரசியலை விட விவசாயிகளின் நலனே முக்கியம் – காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வர் உறுதி
குழந்தையை கொன்று தென்னந்தோப்பில் வீசிய நர்ஸ்
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 24 வயது இளம் பெண் ஒருவர் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்துள்ளார். அவர் தனது காதலனுடன் உறவில் இருந்த நிலையில், கர்ப்பமாகியுள்ளார். ஆனால், கர்ப்பத்தை அறிந்த காதலன் இளம் பெண்ணை கைவிட்டுள்ளார். இதனால் அந்த பெண் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.
எனவே அந்த குழந்தை தனக்கும், தனது குடும்பத்திற்கும் அவமானம் என கருதிய அவர், குழந்தை பிறந்த உடனேயே அதனை கொன்று தென்னந்தோப்பில் வீசியது தெரியவந்துள்ளது.