வெயிலின் தாக்கத்தால் ஏசி கேட்ட மனைவி.. வாங்கி தர மறுத்த கணவன்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Thiruvallur Woman Suicide: திருவள்ளூர் மாவட்டத்தில் ஏசி வாங்கி தருவதற்கு கணவன் மறுப்பு தெரிவித்த காரணத்தால் மன வருத்தம் அடைந்த மனைவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வெயிலின் தாக்கத்தால் ஏசி கேட்ட மனைவி.. வாங்கி தர மறுத்த கணவன்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!

திருள்ளூரில் காதல் மனைவி தற்கொலை

Published: 

25 Apr 2026 15:12 PM

 IST

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஜெயராம் தெருவை சேர்ந்தவர் ஆகாஷ் ( 26 வயது). இவரது மனைவி புல்லரம்பாக்கத்தைச் சேர்ந்த மோனிகா ( 25 வயது). இவர்கள் இருவரும் பூண்டி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் போது காதலித்து வந்துள்ளனர். அதன்படி, இருவரும் இரு வீட்டார் சம்பந்தத்துடன் காதல் திருமணம் செய்துள்ளனர். தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. ஆகாஷ் திருவள்ளூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஜவுளி கடையில் பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி மோனிகா வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில், தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால், இரவு நேரங்களில் வீட்டில் வெப்பம் மற்றும் புழுக்கம் அதிகமாக காணப்படுகிறது. எனவே, ஆகாஷ் வீட்டிலும் வெப்பம் மற்றும் புழுக்கம் அதிகமாக இருப்பதன் காரணத்தால், வீட்டிற்கு ஏசி வாங்கி தருமாறு தனது கணவர் ஆகாசிடம், மனைவி மோனிகா கேட்டதாக கூறப்படுகிறது.

ஏசி வாங்கி தர மறுத்த கணவன்

அப்போது, தன்னிடம் ஏசி வாங்குவதற்கான பணம் இல்லை என ஆகாஷ் கூறியதாக தெரிகிறது. இதில், கணவன், மனைவி இடையே வாய் தகராறு ஏற்பட்டு பிரச்சனை உருவானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வெயிலின் தாக்கம் காரணமாக ஆகாஷ் மற்றும் அவரது சகோதரர் அவினாஷ், அவரது தந்தை மற்றும் தாய் ஆகிய 4 பேரும் நேற்று வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் மொட்டை மாடியில் தூங்கச் சென்றனர். பின்னர், மறுநாள் காலையில் ஆகாஷ் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து வீட்டிற்குள் சென்று பார்த்தார்.

மேலும் படிக்க: 2026 தேர்தல் களம்.. வாக்கு சதவீத உயர்வு யாருக்கு சாதகம்? அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் விவாதங்கள்!

தூக்கில் பிணமாக தொங்கிய மனைவி

அப்போது, அவரது மனைவி மோனிகா சேலையால் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து பிணமாக தொங்கி கொண்டிருந்ததை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார். அப்போது, அவரது சத்தம் கேட்டு மாடியில் தூங்கிக் கொண்டிருந்த அவரது தந்தை, தாய் மற்றும் சகோதரர் ஆகியோர் கீழே வந்தனர். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக புல்லரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மோனிகாவின் சடலத்தை மீட்டு உடல் கூராய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை விவகாரத்தில் கோட்டாட்சியர் விசாரணை

மேலும், இது தொடர்பாக ஆகாஷ் அளித்த புகாரின் பேரில், புல்லரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, ஆகாஷ் மற்றும் மோனிகாவுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகளே ஆவதால் ஆர். டி. ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.

தற்கொலை எண்ணத்தை தவிர்க்க

(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)

மேலும் படிக்க: தேர்தலை முடித்து ஊர் திரும்ப 14,508 சிறப்பு பேருந்துகள்.. போக்குவரத்து கழகம் அறிவிப்பு..

Follow Us
அதிகரிக்கும் ஈரபதத்துடன் கூடிய வெப்ப அலை - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
இந்த ரயில் நிலையம் செல்ல பாஸ்போர்ட் கட்டாயம்.. எங்கு தெரியுமா?
ஆதார் எண் இருந்தால் மட்டும் வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியுமா?
தொழிலதிபரின் வீட்டில் கொள்ளையடித்த 5 போலீஸ் அதிகாரிகள்