AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பெப்பர் ஸ்பிரே அடித்து பெண் துடிதுடிக்க வெட்டிக் கொலை.. சென்னையில் நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்!!

அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் ரேஷ்மாவின் தோழிகள் அளித்த தகவலின் பேரில், சங்கர் நகர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெப்பர் ஸ்பிரே அடித்து பெண் துடிதுடிக்க வெட்டிக் கொலை.. சென்னையில் நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்!!
மாதிரிப் புகைப்படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 26 Jun 2026 12:28 PM IST

சென்னை, ஜுன் 26: சென்னை அனகாபுத்தூரில் பெண் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தலைமறைவாக இருந்த கொலையாளியை காவல் துறையினர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் வைத்து கைது செய்துள்ளனர். இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் குறித்த விரிவான தகவல்களை இக்கட்டுரையில் காணலாம். பெங்களூரைச் சேர்ந்த ரேஷ்மா (29) என்ற பெண்ணிற்கு அசோக் என்பவருடன் திருமணமாகி, 8 வயதில் ஒரு மகளும், 9 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட குடும்பக் கருத்து வேறுபாடு காரணமாக, ரேஷ்மா அவரைப் பிரிந்து கடந்த இரண்டு மாதங்களாக சென்னை அனகாபுத்தூர் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தனது மகளோடு வசித்து வந்தார். இவர்களது மகன் தந்தை அசோக்குடன் வசித்து வருகிறார்.

மேலும் படிக்க: ‘Start Run, Stop Drugs’ ஓட்டம்.. மக்களுடன் இணைந்து மாரத்தானில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய்..

கொலைக்கான திடுக்கிடும் காரணம்:

கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த ரேஷ்மாவை, அவரது உறவினரான விஜி (என்ற) வெங்கடேசன் (30) என்பவர் அடிக்கடி நேரில் சந்தித்து, தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், வெங்கடேசனின் திருமண ஆசையை ரேஷ்மா திட்டவட்டமாக மறுத்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்திற்கு முந்தைய நாள் இரவும் இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, வெங்கடேசன் ரேஷ்மாவிற்கு கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளார்.

நள்ளிரவில் நடந்த கொடூரம்:

வெங்கடேசனின் மிரட்டலால் அச்சமடைந்த ரேஷ்மா, பாதுகாப்புக்காகத் தனது தோழிகளான மரியா மற்றும் ஜெனிபர் ஆகியோரைத் தனது வீட்டில் அன்றிரவு தங்குமாறு அழைத்துள்ளார். நள்ளிரவு சுமார் 3.30 மணியளவில், வெங்கடேசன் மீண்டும் ரேஷ்மாவின் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டியுள்ளார். உள்ளே இருந்த பெண்கள் கதவைத் திறக்க மறுத்ததால், வீட்டின் ஜன்னல் வழியாகக் கையை விட்டு கதவின் உள்பக்கப் பூட்டைத் திறந்து உள்ளே நுழைந்துள்ளார்.

அங்கு தூங்கிக் கொண்டிருந்த மூன்று பெண்களின் கண்களிலும் தான் மறைத்து வைத்திருந்த பெப்பர் ஸ்பிரேயை அடித்து நிலைகுலையச் செய்துள்ளார். கண்கள் எரியத் தொடங்கி அவர்கள் அலறிய நிலையில், தான் கொண்டு வந்திருந்த பெரிய கத்தியால் ரேஷ்மாவை மட்டற்ற கோபத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரேஷ்மா, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தனிப்படை விசாரணை மற்றும் கைது:

அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் ரேஷ்மாவின் தோழிகள் அளித்த தகவலின் பேரில், சங்கர் நகர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை வழக்கு குறித்து சங்கர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளியைப் பிடிக்கத் தனிப்படை அமைத்தனர். தலைமறைவாகி பெங்களூருக்குத் தப்பிச் சென்ற வெங்கடேசனைத் தனிப்படையினர் தீவிரமாகத் தேடி, அங்கு வைத்து மடக்கிப் பிடித்தனர்.

மேலும் படிக்க: சட்டப்பேரவையில் குட்டி கதை சொல்லி விமர்சித்த முதல்வர் விஜய்.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த ரியாக்ஷன்!!

தொடரும் விசாரணை:

கைது செய்யப்பட்ட வெங்கடேசன் தற்போது சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, சங்கர் நகர் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரிடம் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் இந்த கொடூரச் செயலுக்கு வேறு யாரும் உதவினார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இந்த சம்பவம் அனகாபுத்தூர் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Follow Us