AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. எத்தனை நாட்களுக்கு ?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. எத்தனை நாட்களுக்கு ?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 26 Jun 2026 06:25 AM IST

ஜூன் 26, 2026: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 40.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து வேலூரில் 39 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 39.1 டிகிரி செல்சியஸ், பரங்கிப்பேட்டையில் 38.2 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டையில் 38.4 டிகிரி செல்சியஸ், கரூரில் 38.5 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 38.6 டிகிரி செல்சியஸ் மற்றும் கடலூரில் 39.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவான வெப்பநிலை:

சென்னையைப் பொறுத்தவரை, நுங்கம்பாக்கத்தில் 39.6 டிகிரி செல்சியஸ் மற்றும் மீனம்பாக்கத்தில் 39.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக வெப்பநிலையின் தாக்கம் சற்று குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே, வரும் நாட்களிலும் வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றும், இதே நிலை நீடிக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை:

வெப்பநிலை அதிகரித்து வந்தாலும், பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 27-ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேசமயம், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?

ஜூன் 28-ஆம் தேதி விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

ஜூன் 29-ஆம் தேதி விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய் – வெளியான அறிவிப்பு

ஜூன் 30-ஆம் தேதி நீலகிரி, கோவை மற்றும் தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மட்டும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us