சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பது எப்படி? விதிகளும், நடைமுறைகளும்.. முழு விவரம்!!
ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் தங்களது எம்.எல்.ஏ-க்களுக்கு 'கொறடா உத்தரவு' பிறப்பிக்கும். இந்த உத்தரவை மீறி வாக்களித்தாலோ அல்லது அவைக்கு வராமல் இருந்தாலோ, சட்டமன்ற விதிகளின்படி அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இதற்கு முன்னதாக 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதே இதற்கு சான்றாகும்.
தமிழக அரசியல் சூழலில் ஒரு அரசு தனது பெரும்பான்மையை சட்டமன்றத்தில் எவ்வாறு நிரூபிக்க வேண்டும் என்பதற்கான நடைமுறைகள் குறித்து விரிவான தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக சட்டமன்ற விதிகளின்படி, ஒரு அரசு ஆட்சியில் தொடர கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து இக்கட்டுரையில் விரிவாக காணலாம். சட்டமன்றம் கூடியதும் சபாநாயகர் முறையான அறிவிப்பை வெளியிடுவார். முதலமைச்சர் தனது அரசின் மீது நம்பிக்கை கோரி ‘நம்பிக்கை தீர்மானம்’ கொண்டு வருவார். தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் தனது தொடக்க உரையை ஆற்றுவார்.
இதையும் படிக்க : உண்ட வீட்டுக்கே இரண்டகம் – சண்முகம் அணியை கண்டித்து அதிமுக பதிவு
வாக்கெடுப்பு நடைபெறும் முறை:
சாதாரண மசோதாக்களுக்கு ‘குரல் வாக்கெடுப்பு’ நடத்தப்படும். ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்கும் முக்கியமான தருணங்களில் ‘எண்ணிக்கணித்தல்’ முறை பின்பற்றப்படும். இதற்காக சட்டமன்றம் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்படும். வாக்கெடுப்பு நடைபெறும் நாளில் சட்டமன்றத்தின் அனைத்து வாயில்களும் மூடப்படும். திரைச்சீலைகள் இடப்பட்டு, மொபைல் போன் உள்ளிட்ட எந்த மின்னணு சாதனங்களும் உள்ளே அனுமதிக்கப்படாது. தீர்மானத்தை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் மற்றும் நடுநிலை வகிப்பவர்கள் என ஒவ்வொரு பிரிவாரியாக உறுப்பினர்கள் எழுந்து நிற்க, அவர்கள் எண்ணப்பட்டு சபாநாயகரால் குறிக்கப்படும்.
பெரும்பான்மைக்குத் தேவையான மேஜிக் எண்:
தமிழக சட்டமன்றத்தின் மொத்த இடங்களில், ஒரு அரசு வெற்றி பெற்று தொடர வேண்டுமெனில் குறைந்தபட்சம் 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு அவசியம். அவையில் இருப்பவர்களில் பாதி பேர் என்பது விதியல்ல; மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பெரும்பான்மை இருக்க வேண்டும் என்பது சட்டப்பேரவை விதியாகும்.
கொறடா உத்தரவு மற்றும் தகுதி நீக்கம்:
ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் தங்களது எம்.எல்.ஏ-க்களுக்கு ‘கொறடா உத்தரவு’ பிறப்பிக்கும். இந்த உத்தரவை மீறி வாக்களித்தாலோ அல்லது அவைக்கு வராமல் இருந்தாலோ, சட்டமன்ற விதிகளின்படி அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இதற்கு முன்னதாக 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதே இதற்கு சான்றாகும்.
இதையும் படிக்க : மக்களை பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்.. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்!
தற்போதைய நிலவரம்:
தற்போதைய சூழலில், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான விசிக, இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்டோரின் பலம் 118-ஐத் தொடுவதாகத் தெரிகிறது. மன்னார்குடி எம்.எல்.ஏ போன்றோரின் கூடுதல் ஆதரவுடன் இந்த எண்ணிக்கை 119 ஆகவும் உயர்ந்துள்ளது. இறுதியாக, வாக்கெடுப்பு முடிவுகளை அறிவிக்கும் சபாநாயகர், தீர்மானம் வெற்றி பெற்றதா அல்லது தோல்வியடைந்ததா என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.