AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மகளிர் கவனத்திற்கு.. ‘வெற்றி பயண’ திட்டம் எந்தெந்த பேருந்துகளில் செல்லாது?.. அரசு வெளியிட்ட முழு பட்டியல்!!

Vetri Payanam Scheme Travel Rules: தமிழகத்தில் பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டமான 'வெற்றி பயண' திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயணிக்கலாம் மற்றும் எந்தெந்த பேருந்துகளுக்கு இத்திட்டம் பொருந்தாது என்பது குறித்த தெளிவான விளக்கங்கள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

மகளிர் கவனத்திற்கு.. ‘வெற்றி பயண’ திட்டம் எந்தெந்த பேருந்துகளில் செல்லாது?.. அரசு வெளியிட்ட முழு பட்டியல்!!
முதல்வர் விஜய்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 03 Oct 2026 10:04 AM IST

சென்னை, அக்.03: தமிழகத்தில் மகளிரின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு, அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கும் ‘வெற்றி பயண’ திட்டத்தை தமிழக அரசு தொடங்கி தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கான பெண் பயணிகள், பணிக்குச் செல்பவர்கள் மற்றும் மாணவிகள் பெரும் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், இத்திட்டத்தின் பயன் மேலும் பலருக்குச் சென்றடையும் வகையில் இலவசப் பயண வசதி கூடுதல் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், எந்தெந்த வகையான பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்க முடியும் மற்றும் எந்தெந்தப் பேருந்துகளில் வழக்கம்போல் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறித்துப் பொதுமக்களிடையே சில சந்தேகங்கள் நிலவி வந்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், போக்குவரத்துத் துறை சார்பில் இதற்கான தெளிவான விளக்கங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இதையும் படிக்க : வாக்காளர்களுக்கு தங்க நாணயமா? ரூ.3.5 கோடி மதிப்பிலான 2.5 கிலோ தங்கம் பறிமுதல்.. இடைத்தேர்தல் தொகுதியில் பரபரப்பு!

இலவசமாகப் பயணிக்கக்கூடிய பேருந்து வகைகள்:

வெளியிடப்பட்டுள்ள புதிய விளக்கத்தின்படி, நகர்ப்புறங்களில் இயக்கப்படும் சாதாரணக் கட்டணப் பேருந்துகள் மட்டுமின்றி, மாநகர மற்றும் நகர் பகுதிகளில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் (Express), எல்.எஸ்.எஸ் (LSS) மற்றும் டீலக்ஸ் (Deluxe) வகை பேருந்துகளிலும் பெண்கள் அனைவரும் கட்டணமின்றி பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புறநகர் பகுதிகளில் இயக்கப்படும் சாதாரணப் பேருந்துகளிலும், மலைப்பகுதிகளில் 40 கிலோ மீட்டருக்கு மேல் இயக்கப்படக்கூடிய சாதாரணப் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாகவே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாகச் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மட்டும் 1,720 சாதாரணப் பேருந்துகள் மற்றும் 1,913 டீலக்ஸ், எக்ஸ்பிரஸ் பேருந்துகள் என மொத்தம் 3,633 பேருந்துகளில் இந்த வெற்றி பயணத் திட்டம் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கட்டணம் செலுத்த வேண்டிய பேருந்துகள் எவை?:

அதே வேளையில், எந்தெந்தப் பேருந்துகளுக்கு இத்திட்டம் பொருந்தாது என்பதையும் அரசு மிகத் தெளிவாக விளக்கியுள்ளது. அதன்படி, குளிரூட்டப்பட்ட ஏசி (AC) பேருந்துகள், புதிய மின்சாரப் பேருந்துகள் (Electric Buses) மற்றும் தொலைதூரம் செல்லும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளான அல்ட்ரா டீலக்ஸ் (UD), வால்வோ (Volvo), ஸ்லீப்பர் (Sleeper) மற்றும் புஷ்பேக் (Pushback) வசதி கொண்ட பேருந்துகளுக்கு வெற்றி பயணத் திட்டம் பொருந்தாது. மேலும், மண்டலங்களுக்கு இடையே (Inter-district) இயக்கப்படும் தொலைதூரப் பேருந்துகளிலும் பெண்கள் வழக்கம்போல் பயணக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : தமிழகத்தில் எஸ்.ஐ. காலிப்பணியிடங்கள் எவ்வளவு? அறிக்கை கேட்கும் டிஜிபி.. விரைவில் SI தேர்வு?

பொதுமக்களுக்கான வழிகாட்டுதல்:

பெண்கள் பயணத்தின்போது தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்கும் பொருட்டு, தாங்கள் ஏறும் பேருந்து எந்த வகையைச் சேர்ந்தது என்பதை உறுதிசெய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். சாதாரண, டீலக்ஸ் மற்றும் எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் ‘வெற்றி பயணத் திட்டம்’ மூலம் இலவசமாகப் பயணித்து, தொலைதூர மற்றும் ஏசி பேருந்துகளில் பயணச் சீட்டு பெற்றுப் பயணிப்பதன் மூலம் போக்குவரத்துச் சேவையைத் தடங்கலின்றிப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

Follow Us