AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழகம் முழுவதும் மகளிருக்கு இலவச பேருந்து பயணம்! ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்..

Vetri Payanam Scheme: சென்னை கோயம்பேட்டில் உள்ள பேருந்து நிலையத்தில் காலை 10 மணியளவில் முதலமைச்சர் விஜய் இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இதையடுத்து, தமிழகம் முழுவதும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இந்த திட்டத்தில் பயண எண்ணிக்கை மற்றும் வருமான உச்சவரம்பு போன்ற கட்டுப்பாடுகள் எதுவும் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் மகளிருக்கு இலவச பேருந்து பயணம்! ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 02 Oct 2026 07:20 AM IST

அக்டோபர் 2, 2026: தமிழகம் முழுவதும் மகளிர் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ளும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ள ‘வெற்றிப் பயணம்’ திட்டம் இன்று (அக்டோபர் 2) தொடங்கப்படுகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள பேருந்து நிலையத்தில் காலை 10 மணியளவில் முதலமைச்சர் விஜய் இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இதையடுத்து, தமிழகம் முழுவதும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது.

மகளிருக்கான கட்டணமில்லா பயணம்:

தமிழகத்தில் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்து வருகிறது. இதன் கீழ் மாநகர மற்றும் நகர்ப்புறங்களில் இயக்கப்படும் சாதாரண அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், அரசு பேருந்துகளின் பல்வேறு சேவைகளையும் உள்ளடக்கும் வகையில் இத்திட்டத்தை விரிவுபடுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் படிக்க: “ஆதவ் அர்ஜுனா 2 மணி நேரம் ‘பிரைன்வாஷ்’ பண்ணார்.. துணை முதல்வர் பதவி ஆசை காமித்தார்!”.. ரகசியத்தை உடைத்த திருமாவளவன்!!

‘வெற்றிப் பயணம்’ திட்டம்:

கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பேசிய முதலமைச்சர் விஜய், பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்தார். இந்தத் திட்டத்தின் கீழ் வருமான உச்சவரம்போ அல்லது பயண எண்ணிக்கைக்கான கட்டுப்பாடோ இருக்காது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

புதிய விரிவாக்கத்தின் கீழ், மாநகரங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், LSS மற்றும் டீலக்ஸ் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.

மேலும், மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படும் புறநகர் சாதாரண அரசு பேருந்துகள் மற்றும் 40 கிலோமீட்டருக்கு மேல் இயக்கப்படும் மலைப்பகுதி வழித்தடங்களின் சாதாரண பேருந்துகளும் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

84.32 லட்சம் மகளிர் பயண்:

தமிழகத்தில் உள்ள ஏழு அரசு போக்குவரத்துக் கழகங்களின் கீழ் இயக்கப்படும் மொத்தம் 18,413 திட்டமிடப்பட்ட பேருந்துகளில் 12,692 பேருந்துகள், அதாவது சுமார் 69 சதவீத பேருந்துகள் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுகின்றன. மொத்தம் உள்ள 1,94,649 திட்டமிடப்பட்ட தனிப்பயணங்களில் 1,65,312 பயணங்கள் இத்திட்டத்தின் கீழ் இயக்கப்பட உள்ளன. இதன் மூலம் நாளொன்றுக்கு சுமார் 84.32 லட்சம் பெண்கள் பயனடைவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: அக்டோபர் 6ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு.. வெப்பநிலை எப்படி இருக்கும்? வானிலை நிலவரம்..

திட்டத்தின் கீழ் இயக்கப்பட உள்ள பேருந்துகளில் பயன்படுத்தப்படும் மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களுடன் தேவையான இணைப்புப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இதற்கான சோதனை மற்றும் சரிபார்ப்புப் பணிகளும், தொடர்ந்து சோதனை ஓட்டமும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் கீழ் பெண்கள் மட்டுமின்றி திருநங்கைகளும் கட்டணமின்றி அரசு பேருந்துகளில் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயண எண்ணிக்கை மற்றும் வருமான உச்சவரம்பு போன்ற கட்டுப்பாடுகள் எதுவும் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிப் பயணத்திட்டத்தை தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்:

இந்த விரிவுபடுத்தப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தை செயல்படுத்த ஆண்டுக்கு சுமார் ரூ.6,000 கோடி செலவாகும் என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள பேருந்து நிலையத்தில் காலை 10 மணியளவில் முதலமைச்சர் விஜய் இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இதையடுத்து, தமிழகம் முழுவதும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது.

இதன் மூலம் சாதாரண பேருந்துகளுக்காக காத்திருக்க வேண்டிய நிலை குறைந்து, பெண்கள் தங்களுக்கு தேவையான நேரத்தில் கூடுதல் அரசு பேருந்து சேவைகளைப் பயன்படுத்தி வேலை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக பயணம் மேற்கொள்ள முடியும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று தொடங்கப்படும் ‘வெற்றிப் பயணம்’ திட்டம், தமிழகம் முழுவதும் பெண்களுக்கான கட்டணமில்லா அரசு பேருந்து பயணத்தின் அடுத்தகட்ட விரிவாக்கமாக அமலுக்கு வருகிறது.

Follow Us