AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அக்டோபர் 6ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு.. வெப்பநிலை எப்படி இருக்கும்? வானிலை நிலவரம்..

Tami Nadu Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 6ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு.. வெப்பநிலை எப்படி இருக்கும்? வானிலை நிலவரம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 02 Oct 2026 06:25 AM IST

அக்டோபர் 2, 2026: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பதிவாகி வருகிறது. அதே நேரத்தில், மாநிலத்தின் பல பகுதிகளில் வெப்பநிலையின் தாக்கமும் கணிசமாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரையில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தொடர்ந்து ஈரோட்டில் 37.6 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டையில் 37.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரையில், மீனம்பாக்கத்தில் 36.2 டிகிரி செல்சியஸ், நுங்கம்பாக்கத்தில் 34.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

அக்டோபர் 6 வரை மழைக்கு வாய்ப்பு:

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 2ஆம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 3ஆம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். இந்த மழை நிலை அக்டோபர் 6ஆம் தேதி வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 7ஆம் தேதி, தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: கூட்டணி ஆதரவின்றி திமுகவால் 10 தொகுதி ஜெயிக்க முடியுமா? மதுராந்தகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா காட்டம்!

வெப்பநிலை எப்படி இருக்கும்?

வெப்பநிலையைப் பொறுத்தவரையில், அடுத்த சில நாட்களில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும், பொதுவாக இயல்பான அளவை ஒட்டியே காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாகக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவிலும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஆசிய விளையாட்டு: வெண்கலம் வென்ற தமிழக வீரர்கள் – ரூ.30 லட்சம் பரிசு அறிவித்த முதல்வர்

தென்மேற்கு பருவமழை குறைவு

ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் பெரிய அளவில் மழைப்பொழிவு பதிவாகவில்லை. இந்த ஆண்டு தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாகவே பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, எல் நினோ தாக்கம் காரணமாக தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தமிழகத்தில் பெரிய அளவிலான பாதிப்புகள் இருக்காது என சிலர் தெரிவித்தாலும், எல் நினோ தாக்கம் 2027ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை நீடிக்கக்கூடும் என்றும், இதனால் அடுத்த ஆண்டு கடுமையான வெப்பநிலை தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

Follow Us