நாளை தமிழகம் வரும் அமித் ஷா.. நெல்லையில் பூத் கமிட்டி மாநாடு.. பாஜக பிளான் என்ன?

Amit Shah Tamil Nadu Visit : மத்திய உள்துறை அமித் ஷா 2025 ஆகஸ்ட் 22ஆம் தேதி (நாளை) தமிழகத்திற்கு வருகை தருகிறார். திருநெல்வேலியில் நாளை நடைபெறும் பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். மேலும், தேர்தல் குறித்து முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

நாளை தமிழகம் வரும் அமித் ஷா.. நெல்லையில் பூத் கமிட்டி மாநாடு.. பாஜக பிளான் என்ன?

அமித் ஷா

Updated On: 

21 Aug 2025 08:38 AM

சென்னை, ஆகஸ்ட் 21 :  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2025 ஆகஸ்ட் 22ஆம் தேதியான நாளை தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். தமிழகத்திற்கு வரும் அவர், நெல்லையில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்கிறார். மேலும், தேர்தல் குறித்து முக்கிய தலைவர்களுடன் அவர் ஆலோசனையும் மேற்கொள்ள உள்ளார். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறது. திமுக கூட்டணி வலுவாக இருக்கும் நிலையில், அதிமுக பாஜக கூட்டணி அமைத்துள்ளது. மேலும்,  தங்கள் பக்கம் மற்ற கட்சிகளை இழுக்க திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி முயற்சித்து வருகிறது. இதில் குறிப்பாக, கட்சியை பலப்படுத்த பாஜக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.  குறிப்பாக, தென் மாவட்டங்கள், கொங்கு மாவட்டங்களில் கட்சியை வலுசேர்க்க  பாஜக களப்பணியாற்றி வருகிறது. 

இப்படியான சூழலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2025 ஆகஸ்ட் 22ஆம் தேதியான நாளை தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடர்ந்து தமிழகத்திற்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர். அதன்படி, 2025 ஆகஸ்ட் 22ஆம் தேதி (நாளை) தமிழகம் வருகிறார் அமித் ஷா. திருநெல்வேலியில் 2025 ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெறும் பூத் கமிட்டி மாநாட்டில் கலந்து கொள்கிறார். முன்னதாக, பாஜக பூத் கமிட்டி மாநாடு 2025 ஆகஸ்ட் 16ஆம் தேதி திட்டமிடப்பட்டது.

Also Read : துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணன்.. அன்புமணி ராமதாஸ் ஆதரவு..

நாளை தமிழகம் வரும் அமித் ஷா

ஆனால், அன்றைய தினம் பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன் காலமானார். இதனால், பாஜக பூத் கமிட்டி மாநாடு 2025 ஆகஸ்ட் 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, நாளை மாநாடு நடக்கிறது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் ஆகிய ஐந்து நாடாளுமன்ற தொகுதிகளில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான பூத் கமிட்டி மாநாடு னாளை மாலை தச்சநல்லூரியில் நடைபெற உள்ளது.

Also Read : ஆளுநரிடமிருந்து பட்டம் பெற மறுத்த மாணவி.. திமுகவின் தரங்கெட்ட நாடகம்.. அண்ணாமலை காட்டம்..

இதில் அனைத்து தொகுதிகளுக்கான பூத் கமிட்டி உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இதறக்ன ஏற்பாடுகளும நடந்து வருகிறது. மேலும்,  பாஜக  மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் அமித் ஷா ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  தேர்தல் குறித்து அவர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். பாஜகவின் பூத் கமிட்டி மாநாடு தமிழக அரசியலில் திருப்புமுனை ஏற்படுத்தும் என அக்கட்சியினர் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.