நெல்லையில் நடக்கும் பாஜக பூத் கமிட்டி மாநாடு.. தமிழகத்திற்கு வருகை தரும் அமித்ஷா..
Amit Shah Visit to Tamil Nadu: நெல்லை மாவட்டத்தில் ஆகஸ்ட் 17, 2025 அன்று நடைபெற இருந்த பூத் கமிட்டி மாநாடு வரும் ஆகஸ்ட் 22, 2025 அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வருகை தருகிறார்.

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கக் கூடிய நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பாஜகவை பொறுத்தவரை பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா தேசிய பொதுச் செயலாளர் பி எல் சந்தோஷ் உள்ளிட்ட பலரும் தமிழகத்திற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர், அந்த வகையில் 2025 ஆகஸ்ட் 22 ஆம் தேதி உள்துறை அமைச்சர் தமிழகத்திற்கு வருகை தருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து ஒன்றாக தேர்தலை சந்திக்கின்றனர். 2021 ஆம் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்து, பாஜக அதில் நான்கு இடங்களில் வெற்றி பெற்றது. சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக கைப்பற்றியது. அந்த வகையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக ஆயத்தமாக செயல்பட்டு வருகிறது.
2026 சட்டமன்ற தேர்தல்:
சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தை பொறுத்தவரையில் அதிமுக திமுக நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தின் மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.
மேலும் படிக்க: வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை..
இதில் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று தொகுதிவாரியாக மக்களை சந்தித்து மக்கள் மத்தியில் உரையாற்றினார். அதேபோல் பாஜக தரப்பிலும் நாளை முதல் அதாவது ஆகஸ்ட் 2025 17ஆம் தேதி முதல் மாநில மாநாடு நடத்தப்படும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார்.
பூத் கமிட்டி மாநாட்டில் கலந்துக்கொள்ளும் அமித்ஷா:
ஆனால் ஆகஸ்ட் 15 2025 தேதி ஆன நேற்று பாஜக மூத்த தலைவர் மற்றும் நாகாலாந்து ஆளுநரான இலகணேசன் காலமானார். இதனை தொடர்ந்து இந்த பூத் கமிட்டி மாநாடானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது இந்த மாநாடு வருகின்ற 2025 ஆகஸ்ட் 22 ஆம் தேதி நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பூத் கமிட்டி மாநாட்டில் மதிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: வதந்திகளை நம்ப வேண்டாம்.. திட்டமிட்டபடி பொதுக்குழு நடக்கும் – ராமதாஸ் அறிவிப்பு!
உள்துறை அமைச்சர் 2025 ஏப்ரல் மாதம் தமிழகத்திற்கு வருகை தந்த பொழுது அதிமுக பாஜக கூட்டணி அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஜூலை மாதம் மீண்டும் அவர் தமிழகத்திற்கு வருகை தந்து பாஜக தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அதனைத் தொடர்ந்து மீண்டும் அடுத்த வாரம் அதாவது 2025 ஆகஸ்ட் 22ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தந்து திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் பூத் கமிட்டி மாநாட்டில் கலந்து கொள்கிறார். தேர்தல் நெருங்கக் கூடிய நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்திற்கு கடந்த சில மாதங்களில் மட்டும் பலமுறை வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.