AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான புகாரை விசாரிக்க எத்தனை நாட்கள் ஆகும்? சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Case Against Udhaynidhi Stalin: இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன், மனுதாரர் தாக்கல் செய்த புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள எத்தனை நாட்கள் ஆகும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான புகாரை விசாரிக்க எத்தனை நாட்கள் ஆகும்? சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 13 Oct 2026 17:00 PM IST

அக்டோபர் 13, 2026: தேர்தல் வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாகக் கூறி, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள எத்தனை நாட்கள் ஆகும் என்பதைத் தெரிவிக்குமாறு சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் சென்னை திருவல்லிக்கேணி–சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் உதயநிதி ஸ்டாலின்.

வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்த உதயநிதி ஸ்டாலின்:

இவர் தனது வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாகக் கூறி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தேனியைச் சேர்ந்த மிலானி என்பவர் புகார் அளித்துள்ளார். கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் இந்தப் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், மனு தாக்கல் செய்யப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகியும், அது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, தனது புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி மிலானி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

மேலும் படிக்க: ஆயுத பூஜை, விஜயதசமி தொடர் விடுமுறை: சென்னையில் இருந்து 15,659 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

சிறப்பு நீதிமன்றம் விரைவாக விசாரணை நடத்த வேண்டும்:

அந்த மனுவில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்காகவே சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், செப்டம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்ட புகார் மனு இதுவரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றும், செல்வாக்குமிக்க நபரான உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 15ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு:

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன், மனுதாரர் தாக்கல் செய்த புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள எத்தனை நாட்கள் ஆகும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும் படிக்க: ஆயுத பூஜை ஸ்பெஷல்.. பொரி, பூ, பழம் எல்லாம் ஒரே இடத்தில்.. கோயம்பேட்டில் சிறப்புச் சந்தை!

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவையடுத்து, உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட புகார் எப்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்பது குறித்த விவரங்கள் அடுத்தகட்ட விசாரணையில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான புகார் இன்னும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், அதற்கான காலக்கெடு குறித்து நீதிமன்றம் விளக்கம் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us