AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வேலூர் தவெக தலைவர் விஜய்யின் பொதுக்கூட்டம் – கடைசி நேரத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு

Vijay’s Vellore Meeting ச தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வேலூரில் பிப்ரவரி 23, 2026 அன்று நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த நிலையில் தவெக சார்பில் நிர்வாகிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

வேலூர் தவெக தலைவர் விஜய்யின்  பொதுக்கூட்டம் – கடைசி நேரத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு
விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 22 Feb 2026 20:07 PM IST

சென்னை, பிப்ரவரி 22 : தவெக தலைவர் விஜய் வேலூரில் பிப்ரவரி 23, 2026 அன்று நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். இதற்கு காவல்துறை அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தவெக சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து தவெகவின் எக்ஸ் பக்கத்தில் வெளியான அறிவிப்பில், தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய் கலந்து கொள்ளும் கழக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை பிப்ரவரி 23, 2026 அன்று திங்கள்கிழமை வேலூர் மாவட்டம் ள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொல்லமங்கலம் பகுதியில் மதியம் 12 மணி முதல் 3 மணிக்குள்ளாக நடைபெறவிருக்கிறது.

தவெக நிர்வாகிகளுக்கு முக்கிய அறிவிப்பு

காவல்துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின் படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க அனுமதி பெற்றவர்களுக்காக சந்திப்பு நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கியூஆர் கோடுடன் கூடிய நுழைவு சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4900 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு நபர்களுக்கு அனுமதி கண்டிப்பாக கிடையாது.

இதையும் படிக்க : நாளை வேலூரில் தவெக நிர்வாகிகள் கூட்டம்.. போலீசார் விதித்த 20 நிபந்தனைகள்.. பயிற்சியுடன் தயாராகும் நிர்வாகிகள்..

தவெக வெளியிட்ட அறிவிப்பு


தவெக கழக நிர்வாகிகளுக்கு மட்டுமே கியூஆர் கோடுடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாதுகாப்பு நலன் கருதி கர்ப்பிணி பெண்கள், சிறுவர், சிறுமியர் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், உடல் நலம் குன்றியவர்கள் ஆகியோருக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதர்கான அனுமதி சீட்டு வழங்கப்படவில்லை. மேலே குறிப்பிட்டவர்கள் யாரும் நிகழ்ச்சியில் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கூரைகள் அமைப்பு

மேலும் தவெகவின் பதிவில், விஜய்யின் பிரசார வாகனத்தை பைக்கில் பின் தொடர்ந்து வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காவல்துறையின் வழிகாட்டுதலின்படி ஊடகவியலாளர்களுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. நேரலை இணைப்பு வழங்கப்படும் என்பதால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஊடகங்கள் மற்றும் தனி நபர்களின் டிரோன்கலுக்கு அனுமதி இல்லை.

இதையும் படிக்க : தொகுதி பங்கீடு பேச்சு.. திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள்.. முதல்வர் பிறந்தநாளில் பட்டியல் வெளியீடு!

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நிர்வாகிகளுக்கு தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்ட நிர்வாகிகளின் வசதிக்காக நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் நிழல் தரும் வகையில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சேலம் நிர்வாகிகள் சந்திப்பில் வடமாநில இளைஞர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் இந்த முறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.