Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

’மாநிலம் அதிர மாநாட்டிற்கு தயாராகுவோம்’ தவெக தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு!

TVK Madurai Conference : மதுரையில் 2025 ஆகஸ்ட் 21ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெற உள்ளது. இதனையொட்டி, அவர் மாநாடடுக்கு தவெக தலைவர் விஜய் தொண்டர்ககளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதாவது, மாநிலம் அதிர மாநாட்டிற்கு தயாராகுவோம் என விஜய் தெரிவித்துள்ளார்.

’மாநிலம் அதிர மாநாட்டிற்கு தயாராகுவோம்’  தவெக தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு!
தவெக தலைவர் விஜய்Image Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 12 Aug 2025 12:29 PM

சென்னை, ஆகஸ்ட் 12 : மாநிலம் அதிர மாநாட்டிற்கு தயாராகுவோம் என தவெக தலைவர் விஜய்  (TVK Chief Vijay) தெரிவித்துள்ளது. மேலும், முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும்,  நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்த்து நிற்போம் என தொண்டர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். 2025 ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரையில் தமிழக வெற்றிக் கழக மாநாடு (TVK Madurai Conference) நடைபெற உள்ளது. இன்னும் இதற்கு சில நாட்களே இருப்பதால், அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படியான சூழலில், தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், மாநாடு குறித்து தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நம்மோட அரசியல் பயணத்துல அடுத்தடுத்த கட்டங்களத் தாண்டி வர்றோம்.

இடையில எத்தனை சவால்கள், நெருக்கடிகள் வந்தாலும் எல்லாத்தையும் மக்கள் சக்தியோட, அதாவது உங்க ஆதரவால கடவுளோட அருளால கடந்து வந்துகிட்டே இருக்கோம். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு நாம முழு வீச்சுல தயாராகிட்டு வர்றோம்… இந்தச் சூழல்ல நம்மோட இரண்டாவது மாநில மாநாட்ட ஆகஸ்ட் 21 (21/08/2025) வியாழக்கிழமை மதுரை, பாரப்பத்தியில நாம நடத்த இருக்கிறது உங்க எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்.

Also Read : தூய்மை பணியாளர்களின் நியாயமான கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் – சி.பி.ஐ.எம் மாநிலச் செயலாளர் சண்முகம்..

தவெக தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு

முத்தமிழையும் சங்கம் வச்சு வளர்த்த மதுரையில, நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்த்து நின்னு, ஜனநாயகப் போர்ல அவங்கள் வென்று தமிழ்நாட்டு மக்களுக்கான நல்லாட்சிய நிறுவுவதே நம்ம குறிக்கோள் என்ற நிலைப்பாட்டை உறுதி செய்யறதுதான் இந்த மாநாடு.

அதனாலதான் வைகை மண்ணில் நடக்கும் இந்த மாநாடு, ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு’ என்ற தேர்தல் அரசியல் மையக்கருத்த முன் வச்சி நடக்க இருக்குதுன்னு உங்களோட பகிர்ந்துக்கிறதுல ரொம்ப மகிழ்ச்சி. மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம். மாற்று சக்தி நாமன்று. முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம்” என கூறினார். 

Also Read : தூய்மை பணியை தனியாருக்கு வழங்கியதை எதிர்த்து வழக்கு.. உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

மதுரையில் தவெக மாநாடு

கட்சி தொடங்கிய வேகத்திலேயே விஜய், விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநாட்டை நடத்தினார். அதைத் தொடர்ந்து, தற்போது மதுரையில் 2025 ஆகஸ்ட் 21ஆம் தேதி தவெகவின் இரண்டாவது மாநாடு நடைபெற உள்ளது.  இதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்த கொள்ள உள்ளனர். இதனால், மாநாட்டிற்காக அத்தியாவசிய ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. கழிவறை, குடிநீர், நாற்காலிகள், பார்க்கிங் வசதி போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.