திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த விஜய்
CM Joseph Vijay : திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை முதல்வர் விஜய் ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை சட்டமன்ற செயலரிடம் அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கடரமணன் வழங்கினர். இதனையடுத்து திருச்சி கிழக்கில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை, மே 10 : திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை முதல்வர் விஜய் ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை சட்டமன்ற செயலரிடம் அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கடரமணன் வழங்கினர். கடந்த 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவரும் தற்போதைய முதல்வருமான விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த நிலையில் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வென்ற நிலையில் ஒரு தொகுதியில் மட்டுமே எம்எல்ஏவாக தொடர முடியும் என்ற விதி உள்ளது.
திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த விஜய்
இந்த நிலையில் 2 தொகுதிகளிலும் வென்ற நிலையில் விஜய் எந்த தொகுதியில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்தது. இந்த நிலையில மே 10, 2026 அன்று விஜய் முதல்வராக பதவியேற்றார். இதனையடுத்து தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதனையடுத்து ராஜினாமா கடிதத்தை அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் வெங்கட் ரமணன் ஆகியோர் சட்டமன்ற செயலரிடம் வழங்கினர்.
இதையும் படிக்க : பணம் இல்லை என பேசாதீங்க.. திசைதிருப்பாதீங்க – முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து கேள்விகளை அடுக்கிய முக ஸ்டாலின்!
தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய்
#WATCH | Chennai: Tamil Nadu Chief Minister Vijay leaves from Secretariat pic.twitter.com/QiAoGrV55f
— ANI (@ANI) May 10, 2026
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் விரைவில் அங்கு மறு தேர்தல் நடத்தப்படவிருக்கிறது. விஜய் போட்டியிட்டதால் அந்த தொகுதி அதிக கவனம் பெற்றது. தற்போது மீண்டும் அங்கு தேர்தல் நடைபெறவிருப்பதால் வேட்பாளர் அறிவிப்பு, பிரச்சாரம் என அந்த பகுதி மீண்டும் பரபரப்பாகவிருக்கிறது. இந்த முறை தவெக சார்பில் யார் நிறுத்தப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த பரபரப்பு மே 10, 2026 அன்றுடன் முடிவுக்கு வந்தது. ஆளுநரிடம் ஆட்சியமைக்க தேவையான எம்எல்ஏகளின் ஆதரவு கடிதத்தை விஜய் வழங்கிய நிலையில் அவரை ஆளுநர் முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து அவருடன் ஆதவ் அர்ஜூனா, என்.ஆனந்த், செங்கோட்டையன், ராஜ்மோகன், வெங்கடரமணன், கீர்த்தனா, பிரபு உள்ளிட்டோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இதையும் படிக்க : CM Vijay speech: நிதி எவ்வளவு? தமிழ்நாடு அரசின் நிலைமை என்ன? வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என உறுதியளித்த முதல்வர் விஜய்!
விஜய் முதல்வராக பொறுப்பேற்றாலும் வருகிற மே 13, 2026க்குள் அவர் தமிழக சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மைய நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் கெடு விதித்துள்ளார். இதற்கிடையில் புதிய அரச தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் மே 11, 2026 நாளை தமிழக சட்டமன்றம் கூடுகிறது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏகள் அனைவரும் பதவியேற்பு செய்யவுள்ளனர்.