Crime: நடத்தையில் சந்தேகம்.. மனைவியை கொலை செய்த கணவன்!
Gummidipoondi Crime News: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட பெயிண்டர் சிலம்பரசன், அவரை கொலை செய்து டிரம்மில் அடைத்து புதைத்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த இச்சம்பவம், பிரியாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் வெளிச்சத்திற்கு வந்தது.

கும்மிடிப்பூண்டி, அக்டோபர் 22: திருவள்ளூர் மாவட்டத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவன் கொலை செய்து டிரம்மில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்துள்ள எளாவூர் என்ற பகுதிக்கு அருகே இருக்கும் துராபள்ளம் என்ற கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் என்பவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் பிரியாவின் நடத்தையில் சிலம்பரசனுக்கு கடந்த சில மாதங்களாக சந்தேகம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் கோபம் கொண்ட பிரியா அடிக்கடி பெரியபாளையம் அடுத்துள்ள புதுப்பாளையத்தில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு செல்வதும் பின்னர் சிலம்பரசன் சமாதானம் செய்து அழைத்து வந்து குடும்பம் நடத்துவதும் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக பிரியா தனது பெற்றோருடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளார். இதனால் அவரது பெற்றோர் என்ன நடக்கிறது என தெரியாமல் குழம்பியுள்ளனர். இதற்கிடையில் தீபாவளி நெருங்கி வந்ததால் பிரியாவின் தந்தை சீனிவாசன் மகளை பார்ப்பதற்காக துராப்பள்ளம் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார்.
Also Read: வாலாஜா அருகே அதிர்ச்சி சம்பவம்.. 6 வயது மகனை கொன்று தந்தை தற்கொலை!
அப்போது மகள் அங்கு இல்லை என தெரிய வந்தது. உடனடியாக மருமகன் சிலம்பரசனிடம் பிரியா எங்கே என்று கேட்டபோது அவர் வெளியில் சென்று விட்டதாக கூறி சமாளித்துள்ளார். இதற்கிடையில் வீட்டிலிருந்த இரண்டு பேரன்களும் அம்மா இரண்டு மாதங்களாக இங்கு இல்லை என தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த சீனிவாசன் தனது மகள் பிரியா காணாமல் போனது குறித்து ஆரம்பாக்கம் போலீசாரில் புகாரளித்தார்.
இதன் பெயரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிலம்பரசனை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது கடந்த 2025, ஆகஸ்ட் 14ஆம் தேதி இரவு மனைவி பிரியாவுடன் ஏற்பட்ட தகராறு அவரை கழுத்தை நெறித்துக் கொன்று விட்டதாக சிலம்பரசன் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Also Read: 4 பிள்ளைகளுடன் தற்கொலை செய்துக்கொண்ட தாய்.. அழுகிய நிலையில் உடல்கள் மீட்பு.. பகீர் சம்பவம்!
அதுமட்டுமல்லாமல் மனைவியின் உடலை ஒரு டிரம்மில் அடைத்து மோட்டார் சைக்கிள் கொண்டு சென்று சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ள 7 கண் பாலத்தை ஒட்டிய சுடுகாட்டுப் பகுதியில் புதைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சிலம்பரசனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதே சமயம் இந்த விவகாரத்தில் உயிரிழந்த பிரியாவின் உடலை ஒருவரால் மட்டுமே எடுத்துச் சென்று புதைக்க முடியுமா என போலீசார் சந்தேகத்துள்ளனர். இதனால் சிலம்பரசனுக்கு வேறு யாரேனும் உதவினார்களா என்று கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. பிரியா புதைக்கப்பட்ட இடத்தில் அவரது தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.