AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை.. எங்கெல்லாம் தெரியுமா..? வானிலை நிலவரம் இதோ..

Weather Update: வெப்பநிலை மாற்றத்தைப் பொறுத்தவரை, இன்று (மார்ச் 27) முதல் மார்ச் 30 வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். இந்த காலக்கட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பிலிருந்து 2 டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக இருக்கக்கூடும்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை.. எங்கெல்லாம் தெரியுமா..?  வானிலை நிலவரம் இதோ..
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 27 Mar 2026 06:34 AM IST

Tamilnadu Weather: தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதோடு, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் எனவும் முன்னறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காகங்கே லேசான மழை பெய்து வந்த நிலையில், 2 நாட்களாக வறண்ட வானிலை நீடித்து வருகிறது. குறிப்பாக, வெயிலின் தாக்கம் தற்போதே கடுமையாக இருப்பதால், ஏப்ரல், மே மாத தாக்கத்தை நினைத்தாலே கவலை கொள்ள வைப்பதாக மக்கள் தவிக்கின்றனர். இந்த சூழ்நிலையில், வரும் நாட்களில் மீண்டும் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது மக்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது.

இதையும் படிக்க: சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. ஏப்ரல் 2ஆம் தேதி முதல் பிரச்சார பயணத்தை தொடங்கும் முதல்வர் ஸ்டாலின்..

அடுத்த 5 நாட்களுக்கு வானிலை நிலவரம்:

அந்தவகையில், இன்று (மார்ச் 27) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தொடர்ந்து, மார்ச் 28 (நாளை) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதேபோல், மார்ச் 29 மற்றும் 30ம் தேதிகளில் முதல் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தொடர்ந்து, மார்ச் 31 மற்றும் ஏப்.1 ஆகிய தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனக் கூறியுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை நிலவரம்:

வெப்பநிலை மாற்றத்தைப் பொறுத்தவரை, இன்று (மார்ச் 27) முதல் மார்ச் 30 வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். இந்த காலக்கட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பிலிருந்து 2 டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக இருக்கக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதையும் படிக்க: கோடம்பாக்கம் ஏரியா பாட்டுக்கு டான்ஸ் – தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் – என்ன நடந்தது?

சென்னை வானிலை நிலவரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரியை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 78 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியும் இருக்கக் கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us