தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்.. வானிலை அப்டேட் இதோ..
Weather Update: தொடர்ந்து, நாளை (மே 20) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்திலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில், பெரிய அளவு மாற்றம் இருக்காது.
Tamilnadu Weather Today: தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில், மேற்கு மத்திய பிரதேசம் முதல் தெற்கு உள் கர்நாடகம் வரை, மத்திய மராட்டியம், மராத்வாடா மற்றும் வட உள் கர்நாடகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. மேலும், தெற்கு கடலோர ஆந்திர பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் இருந்து தெற்கு கடலோர ஆந்திராவின் மேல் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
மேலும் படிக்க: அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு – தரமான உணவு கிடைக்க ஆணை
இன்று கனமழைக்கு வாய்ப்பு:
அந்தவகையில், தமிழகத்தில் இன்று (மே 19) நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்திலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும்.
வரும் நாட்களில் மழை நிலவரம்:
தொடர்ந்து, நாளை (மே 20) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்திலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும். நாளை மறுநாள் (மே 21) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும். மே 22 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்திலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும் என கணித்துள்ளது.
அதிகரிக்கும் வெப்பநிலை:
அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில், பெரிய அளவு மாற்றம் இருக்காது என்றும், ஒரு சில இடங்களில் மட்டும் இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் கூறியுள்ளது.
மேலும் படிக்க: 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது?.. தமிழக அரசு அறிவிப்பு!!
சென்னை வானிலை நிலவரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.