AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் கோடை மழை கொட்டப்போகுது.. எங்கெல்லாம் தெரியுமா?.. வானிலை அப்டேட் இதோ!!

Weather Update: ஏப்ரல் 17ம் தேதி வரை உள் தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.

தமிழகத்தில் கோடை மழை கொட்டப்போகுது.. எங்கெல்லாம் தெரியுமா?.. வானிலை அப்டேட் இதோ!!
கோப்புப் படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 14 Apr 2026 06:35 AM IST

Tamilnadu Weather Today: தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில், சுமார் 0.9 கிமீ உயரத்தில், வடகிழக்கு பீகார் முதல் தென் தமிழகம் வரை ஜார்க்கண்ட், வடக்கு சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், விதர்பா, மரத்வாடா மற்றும் உள் கர்நாடகா வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் வரும் நாட்களில் பரவலாக கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் உச்சமடைந்த பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டி சதமடித்து வருகிறது. இதனால், வெயிலில் இருந்து தப்பித்து ஆறுதல் தரும் விதமாக கோடை மழை பெய்யுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவுகிறது.

மேலும் படிக்க: சென்னையில் தபால் வாக்குப்பதிவு.. ஏப்ரல் 16, 17 மற்றும் 18 நடக்கும் என அறிவிப்பு..

மழை நிலவரம்:

அந்தவகையல், வரும் ஏப்.19ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகள் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

வெப்பநிலை மாற்றம் குறித்த விவரம்:

ஏப்ரல் 17ம் தேதி வரை உள் தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.

மேலும், உள் தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசௌகரியம் ஏற்படலாம் என கூறியுள்ளது.

மேலும் படிக்க: சேலத்தில் கொடூரம்.. அரசு பள்ளியில் புகுந்து ஆசிரியையை வெட்டிக்கொன்ற அதிர்ச்சி சம்பவம்..

சென்னை வானிலை நிலவரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று (ஏப்ரல் 14) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசானது மழை பெய்யக்கூடும். நகரில் அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். வரும் நாள்களில் சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி சதமடிக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us