நாமக்கல், கரூரில் விஜய் பரப்புரை.. தவெக தொண்டர்கள் முக்கிய அறிவுறுத்தல்
TVK Leader Vijay Campaign : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூர், நாமக்கல் மாவட்டங்களில் 2025 செப்டம்பர் 26 (நாளை) பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில், தவெக தொண்டர்களுக்கு அக்கட்சி தலைவர் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.

சென்னை, செப்டம்பர் 26 : கரூர், நாமக்கல் மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 2025 செப்டம்பர் 27ஆம் தேதியான நாளை பரப்புரை மேற்கொள்கிறார். இதனையொட்டி, தவெக தொண்டர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதனால், அனைத்து கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, அரசியல் களத்திற்கு புதிதாக வந்துள்ள, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு என்ற பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். வாரத்தின் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். தனது முதல் மக்கள் சந்திப்பு பரப்புரையை 2025 செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சியில் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து, 2025 செப்டம்பர் 20ஆம் தேதி நாகப்பட்டினம், திருவாரூரில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
நாமக்கல், கரூரில் விஜய் பரப்புரை
இந்த நிலையில், மூன்றாம் கட்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி 2025 செப்டம்பர் 27ஆம் தேதியான நாளை மேற்கொள்கிறார். கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் நாளை (செப்டம்பர் 26) பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இன்று வரை பிரச்சாரம் செய்யும் இடம் தேர்வு செய்யப்படாத நிலையில், தற்போடு கடும் நிபந்தனைகளுடன் கரூர், நாமக்கல்லில் விஜய் பிரச்சாரம் செய்யும் இடத்திற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர். அதன்படி, ஈரோடு ரோடு வேலுசாமிபுரம் பகுதியில் நின்று பேசுவதற்கு விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், நாமக்கல்லில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளவும் அனுமதி அளித்துள்ளனர். இந்த நிலையில், தவெக தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு அக்கட்சி தலைவர் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.




Also Read : விஜய் பற்றி பேச திமுக தலைவர்களுக்கு தடையா?
தவெக தொண்டர்களுக்கு அறிவுறுத்தல்
— TVK Party HQ (@TVKPartyHQ) September 26, 2025
இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில், “நம் தலைவர் அவர்கள், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும் போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும் போதும் அவரது வாகனத்தை யாரும் இருசக்கர வாகனங்களில் அல்லது வேறு வாகனங்களில் பின்தொடர வேண்டாம். மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், காம்பவுண்டு சுவர்கள், மரங்கள், மின்விளக்குக் கம்பங்கள், கொடிக் கம்பங்கள், சிலைகள் ஏதேனும் இருந்தால் அவற்றைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிரில் கம்பிகள் மற்றும் தடுப்புகள் ஆகியவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். உயரமான இடங்களின் மேலே கண்டிப்பாக ஏறக் கூடாது.
Also Read : விஜய் மேற்கொள்ளும் சுற்றுப்பயணத்தில் மீண்டும் மாற்றம்.. அக். 4ஆம் தேதி எந்த மாவட்டத்தில் சுற்றுப்பயணம்?
கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர், நம் தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் நேரில் வந்து கலந்துகொள்வதை தவிர்க்க வேண்டும். வாகனங்களை நிறுத்தும் பொழுது, பிறருக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் நிறுத்த வேண்டும். போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக வாகனங்களைக் கண்டிப்பாக நிறுத்தக் கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.