Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

1967, 1977, 2026.. கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் – விஜய்..

TVK Leader Vijay: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாவட்டம் தோறும் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், செப்டம்பர் 20, 2025 அன்று நாகை மற்றும் திருவாரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார், அதனை தொடர்ந்து தற்ப்போது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

1967, 1977, 2026.. கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் – விஜய்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 21 Sep 2025 13:48 PM IST

சென்னை, செப்டம்பர் 21, 2025: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், செப்டம்பர் 20, 2025 அன்று நாகை மற்றும் திருவாரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 21, 2025 அன்று தமிழக மக்களுக்கு தனது எக்ஸ் வலைதளம் மூலம் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “1967 மற்றும் 1977 தேர்தல்களின் வெற்றி விளைவை 2026 தேர்தலிலும் நிகழ்த்திக் காட்டுவோம்” என குறிப்பிட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் ஆளும் திமுக அரசு “ஓரணியல் தமிழ்நாடு – உங்களுடன் ஸ்டாலின்” போன்ற திட்டங்கள் மூலம் மக்களைச் சந்தித்து, மக்களுக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல், அதிமுக தரப்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரம்:

அந்த வரிசையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் செப்டம்பர் 13, 2025 அன்று திருச்சி மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 20, 2025 அன்று நாகை மற்றும் திருவாரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அந்தந்த தொகுதிகளில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டி, திமுக அரசை கடுமையாக விமர்சித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்.

மேலும் படிக்க: நாகையில் விஜய் பரப்புரை.. தவெக தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு!

கெட்ட உலகத்தை வேரோடு சாய்ப்போம் – விஜய் பதிவு:


இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இரண்டாவது வாரமாக மீனவ சமூகத்தினரையும், மும்மதங்களையும் போற்றி, மத நல்லிணக்கத்தை பேணிக் காக்கும் நம் நாகைப்பட்டினம் மாவட்ட மக்களையும், உலகுக்கு உணவு ஊட்டும் உழவர் பெருமக்களாகிய திருவாரூர் மாவட்ட மக்களையும் நேற்று சந்தித்தோம். நம் கொள்கைத் தலைவர்களின் வழியில் முதன்மை சக்தியாக உண்மையான மக்களாட்சியை அமைத்திட நம் பணியை இன்னும் தீவிரப்படுத்துவோம்.

மேலும் படிக்க: ஒரு மணி நேரம் மீட்டிங்.. எடப்பாடி பழனிசாமி – நயினார் நாகேந்திரன் சந்திப்பு.. என்ன மேட்டர்?

தமிழ்நாட்டு மக்களுக்கான முதன்மை சக்தியான நாம், அவர்களுக்காக எதிலும் சமரசம் செய்ய மாட்டோம். 1967 மற்றும் 1977 தேர்தல்களின் வெற்றி விளைவை 2026 தேர்தலிலும் நிகழ்த்திக் காட்டுவோம். புதியதோர் உலகை செய்வோம், கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.