ஜெர்மனி சென்றடைந்த முதல்வர் ஸ்டாலின்.. வரவேற்ற தமிழர்கள்.. நெகிழ்ச்சி பதிவு!
CM MK Stalin Germany Visit : தமிழக முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 7 நாட்கள் பயணமாக ஜெர்மனி சென்றடைந்துள்ளார். ஜெர்மனி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழ் குடும்பத்தினரின் என்னை பாசத்துடன் வரவேற்றதாக முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

சென்னை, ஆகஸ்ட் 31 : முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் (CM MK Stalin Germany Visit) 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதியான இன்று ஜெர்மனி சென்றடைந்தார். 2025 ஆகஸ்ட் 30ஆம் தேதியான காலை 10 மணியளவில் சென்னையில் இருந்து புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின், 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதியான இன்று ஜெர்மனிக்கு சென்றடைந்துள்ளார். தமிழக பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலர் அளவில் உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முதலீட்டாளர்கள், முதலீட்டாளர் சந்திப்பு என முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறது. அவ்வப்போது வெளிநாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டு வருகிறது. 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததில் இருந்தே நான்கு முறை வெளிநாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.
கடந்த 2022ஆம் ஆண்டு துபாய், ஐக்கிய அரபு நாடுகளுக்கும், அதே ஆண்டில் சிங்கப்பூர், ஜப்பான், 2024ஆம் ஆண்டு ஸ்பெயின், அதே ஆண்டில் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு, முதலீடுகளை மேற்கொண்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக, தற்போது, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதியான நேற்று காலை 10 மணியளவில் சென்னையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டார். இந்த நிலையில், 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதியான இன்று ஜெர்மனிக்கு சென்றுள்ளார்.




Also Read : முதலீடுகளை ஈர்க்க 7 நாள் பயணம்.. ஜெர்மனி, இங்கிலாந்து புறப்படும் முதல்வர் ஸ்டாலின்!
ஜெர்மனி சென்றடைந்த முதல்வர் ஸ்டாலின்
Hallo #Deutschland! 🇩🇪
Embraced by the affection of my Tamil family here, I step forward with pride to showcase Tamil Nadu’s strengths, attract investments, and forge partnerships for a brighter future.@TRBRajaa @eoiberlin #CMStalinInEurope pic.twitter.com/cyNMcannRB
— M.K.Stalin (@mkstalin) August 31, 2025
இவருடன் தலைமை செயலர், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜ, மனைவி துர்கா, பாதுகாப்பு அதிகாரிகளும் உடன் சென்றுள்ளனர். ஜெர்மனி சென்றுள்ள அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்குள்ள தமிழகர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேப்பு அளித்தனர். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், “வணக்கம் ஜெர்மனி. இங்கே உள்ள எனது தமிழ் குடும்பத்தினரின் பாசத்தால் தழுவப்பட்டு, தமிழ்நாட்டின் பலங்களை வெளிப்படுத்தவும், முதலீடுகளை ஈர்க்கவும், பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கவும் உறுதி செய்வோம்” என பதிவிட்டுள்ளார்.
திட்டம் என்ன?
2025 ஆகஸ்ட் 31ஆம் தேதி ஜெர்மனியி ஐரோப்பாவில் மாபெரும் தமிழ் கனவு 2025 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதி ஐரோப்பா முழுவதும் உள்ள தமிழர்களை சந்தித்து உரையாடுகிறார். தொடர்ந்து, 2025 செப்டம்பர் 1ஆம் தேதி ஜெர்மனியில் இருந்து லண்டன் புறப்பட்டு செல்கிறார். 2025 செட்படம்பர் 2ஆம் தேதி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.
2025 செப்டம்பர் 3ஆம் தேதி லண்டனில் உள்ள தொழில் அதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்துள்ளார். 2025 செப்டம்பர் 4ஆம் தேதி ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அயலக தமிழர் நலவாரியம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுளளது. செப்டம்பர் 6ஆம் தேதி லண்டனில் உள்ள தமிழர் நலவாரிய நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகிறார். 2025 செப்டம்பர் 7ஆம் தேதி மாலை லண்டனில் இருந்து புறப்பட்டு, 2025 செப்டம்பர் 8ஆம் தேதி சென்னை வந்தடைகிறார்.