முதலீடுகளை ஈர்க்க 7 நாள் பயணம்.. ஜெர்மனி, இங்கிலாந்து புறப்படும் முதல்வர் ஸ்டாலின்!
CM Stalin Germany London Visit : தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் 2025 ஆகஸ்ட் 30ஆம் தேதியான இன்று காலை ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு புறப்படுகிறார். முதற்கட்டமாக ஜெர்மனி செல்லும் முதல்வர் ஸ்டாலின், 2025 செப்டம்பர் 1ஆம் தேதி வாக்கில் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்கிறார்.

சென்னை, ஆகஸ்ட் 30 : தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் (CM Stalin Germany London Visit) 2025 ஆகஸ்ட் 30ஆம் தேதியான இன்று ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். 8 நாட்கள் பயணத்தில் பல்வேறு முதலீட்டாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்துவதே இலக்கு என்ற நோக்கில் முதல்வர் ஸ்டாலின் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அடுத்தடுத்து முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார். இதில் இந்திய தொழிலதிபர்களும், வெளிநாட்டு தொழிலதிபர்களும் கலந்து கொண்டார்கள். பல லட்சம் கோடி அளவுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. பல வாரங்களுக்கு முன்னர், முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடிக்கு சென்றார். அங்கும் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது.
இருஒரு புறம் இருக்க முதல்வர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு சென்றும் முதலீடுகளை ஈர்த்து வருகிறார். 2021ஆம் ஆண்டு ஆட்சி அமைந்ததில் இருந்தே நான்கு முறை வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார். துபாய், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அந்த வகையில், தற்போது ஜெர்மனி மற்றும் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்கிறார். முதற்கட்டமாக முதல்வர் ஸ்டாலின் 2025 ஆகஸ்ட் 30ஆம் தேதியான இன்று காலை 9.45 மணியளவில் அவர் விமானத்தில் ஜெர்மனி புறப்படுகிறார்.




Also Read : துணை ஜனாதிபதிக்கு சரியான தேர்வு சுதர்சன் ரெட்டி தான் – முதல்வர் ஸ்டாலின் உறுதி..
ஜெர்மனி, இங்கிலாந்து புறப்படும் முதல்வர் ஸ்டாலின்!
அதற்கு முன்னதாக விமான நிலையத்தில் பேட்டியும் அளிக்க உள்ளார். ஆகஸ்ட் 31ஆம் தேதி ஜெர்மனியில் உள்ள அயலக அணியின் நிர்வாகிகளை சந்திக்கிறார். 2025 செப்டம்பர் 1ஆம் தேதி ஜெர்மனியில் இருந்து இங்கிலாந்து செல்கிறார். பிறகு, லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு செல்கிறார். அதன் பிறகு, 2025 செப்டம்பர் 2,3ஆம் தேதிகளில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு தொழில் முனைவர்களை ச்நதித்து பேசுகிறார்.
2025 செப்டம்பர் 4ஆம் தேதி ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திற்கு சென்று அயலக தமிழர்கள் நலவாரியத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். செப்டம்பர் 6ஆம் தேதி லண்டனில் உள்ள தமிழர் நலவாரிய நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகிறார். செப்டம்பர் 7ஆம் தேதி மாலை லண்டனில் இருந்து புறப்பட்டு, 2025 செப்டம்பர் 8ஆம் தேதி சென்னை வந்தடைகிறார். முக்கியமாக இந்த பயணத்தில் பல்வேறு முதலீட்டாளர்களை சந்தித்து ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read : சண்டே ஷாப்பிங்.. வணிவளாகத்தில் முதல்வர் ஸ்டாலின்.. இணையத்தில் வைரலாகும் காட்சிகள்..
முன்னதாக, 2025 ஆகஸ்ட் 29ஆம் தேதியான நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ” ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுககு ஒரு வார கால பயணமாக மேற்கொள்ள இருக்கிறேன். நம்முடைய திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்திற்கு இது வரை சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழில்களை நாம் ஈர்த்திருக்கிறோம். இப்போது இந்த பயணத்தில் என்ன திட்டமிட்டிருக்கிறோம் என்பதை நாளைய தினம் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறுகிறேன்” என்றார்.