AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களில்? வெப்பநிலை எப்படி இருக்கும்?

Rainfall Alert: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் மட்டும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸையும் ஒட்டி இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களில்? வெப்பநிலை எப்படி இருக்கும்?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 10 Sep 2026 06:25 AM IST

செப்டம்பர் 10, 2026: தமிழகத்தில் ஒருபுறம் மழை பெய்து வரும் நிலையில், மறுபுறம் வெப்பநிலையின் தாக்கமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்த அளவுக்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 39.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தொடர்ந்து திருச்சியில் 39.7, தஞ்சையில் 39, கரூரில் 39, பாளையங்கோட்டையில் 39, வேலூரில் 38.9, மதுரையில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

உள் தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பநிலை:

சென்னையைப் பொறுத்தவரையில், அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 36.4 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாக்கத்தில் 36.1 டிகிரி செல்சியஸும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

வரும் நாட்களில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள் தமிழகத்தில் மட்டும் சில இடங்களில் இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக பதிவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மழைக்கு வாய்ப்பு:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் மட்டும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸையும் ஒட்டி இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: காஞ்சிபுரத்தில் பணத்துக்காக பிரசவம் தடுத்து நிறுத்தம்.. தாய்-சிசு பரிதாபமாக உயிரிழப்பு.. குழந்தை வெளியேறியநிலையில் கொடூரம்!

செப்டம்பர் 10: செப்டம்பர் 10ஆம் தேதியான இன்று, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 11: செப்டம்பர் 11ஆம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் படிக்க: விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை.. சொந்த ஊர் செல்ல திட்டமா.. தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

செப்டம்பர் 12: செப்டம்பர் 12ஆம் தேதி, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தென் கடலோர தமிழகத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 13, 14: செப்டம்பர் 13 மற்றும் 14ஆம் தேதிகளில் தமிழகத்தில் சில இடங்களில் மட்டும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 15: செப்டம்பர் 15ஆம் தேதியைப் பொறுத்தவரையில், வடகடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us