AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மாணவர்கள் கவனத்திற்கு.. செப். 16ஆம் தேதி முதல் காலாண்டு தேர்வு தொடக்கம்.. அட்டவணை இதோ..

காலாண்டு தேர்வுகள் வரும் செப்டம்பர் 16ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 16ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை குறிப்பிட்ட நாட்களில் தேர்வுகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் கவனத்திற்கு.. செப். 16ஆம் தேதி முதல் காலாண்டு தேர்வு தொடக்கம்.. அட்டவணை இதோ..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 10 Sep 2026 07:05 AM IST

செப்டம்பர் 10, 2026: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான 2026–27ஆம் கல்வியாண்டு காலாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை இயக்ககம் வெளியிட்டுள்ளது. இதில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை இடம்பெற்றுள்ளது.

காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு:

காலாண்டு தேர்வுகள் வரும் செப்டம்பர் 16ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 16ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை குறிப்பிட்ட நாட்களில் தேர்வுகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும் தேர்வுகள் நடைபெறும். 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும் தேர்வுகள் நடைபெறும்.

மேலும் படிக்க: 4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களில்? வெப்பநிலை எப்படி இருக்கும்?

தேர்வு விவரங்கள்:

1 முதல் 5ஆம் வகுப்பு

  • செப்டம்பர் 16: தமிழ்
  • செப்டம்பர் 17: தமிழ் மற்றும் ஆங்கிலம்
  • செப்டம்பர் 21: ஆங்கிலம், கணக்கு
  • செப்டம்பர் 22: விருப்ப மொழி
  • செப்டம்பர் 23: கணக்கு, அறிவியல்
  • செப்டம்பர் 24: சூழ்நிலையியல், சமூக அறிவியல்

6 முதல் 8ஆம் வகுப்பு

  • செப்டம்பர் 16: தமிழ்
  • செப்டம்பர் 17: ஆங்கிலம், கணக்கு
  • செப்டம்பர் 18: விருப்ப மொழி
  • செப்டம்பர் 21: கணக்கு, ஆங்கிலம்
  • செப்டம்பர் 22: உடற்கல்வி
  • செப்டம்பர் 23: அறிவியல், சமூக அறிவியல்
  • செப்டம்பர் 24: சமூக அறிவியல்

9ஆம் வகுப்பு

  • செப்டம்பர் 16: தமிழ்
  • செப்டம்பர் 17: ஆங்கிலம்
  • செப்டம்பர் 18: விருப்பப்பாடம்
  • செப்டம்பர் 21: கணக்கு
  • செப்டம்பர் 22: உடற்கல்வி
  • செப்டம்பர் 23: அறிவியல்
    செப்டம்பர் 24: சமூக அறிவியல்

11 மற்றும் 12ஆம் வகுப்பு

  • செப்டம்பர் 16: தமிழ்
  • செப்டம்பர் 17: ஆங்கிலம்
  • செப்டம்பர் 18: இயற்பியல், பொருளியல், வேலைவாய்ப்புத் தொடர்கள்
  • செப்டம்பர் 21: கணக்கு, விலங்கியல், வணிகவியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, வேளாண்மை, நர்சிங்
  • செப்டம்பர் 22: தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாச்சாரம் மற்றும் கொள்கைகள், கணினி அறிவியல், உயிரியியல், சிறப்புத் தமிழ், உளவியல், புள்ளியியல், நர்சிங் அடிப்படை, எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்
  • செப்டம்பர் 23: உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை மின்னணுவியல், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை இயந்திரப் பொறியியல், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், ஜவுளித் தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் செயலாக்கம்
  • செப்டம்பர் 25: வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல்

மேலும் படிக்க: தாராபுரம் (தனி) தொகுதி இடைத்தேர்தல்.. முக்கோணப் போட்டியில் ஜெயிக்கப்போவது யார்?.. கள நிலவரம் என்ன?

காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் 25ஆம் தேதி நிறைவடைந்த பிறகு, செப்டம்பர் 26ஆம் தேதி முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட பிறகு அரையாண்டு தேர்வுக்கான பாட வகுப்புகள் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Follow Us