AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

6 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. சென்னையில் மழை இருக்குமா? நிலவரம் என்ன?

Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், நேற்று மாலை முதல் நகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் கணிசமாகக் குறைந்துள்ளது.

6 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. சென்னையில் மழை இருக்குமா? நிலவரம் என்ன?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 04 Sep 2026 06:25 AM IST

செப்டம்பர் 4, 2026: தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பாளையங்கோட்டையில் தொடர்ந்து அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பாளையங்கோட்டையில் அதிகபட்சமாக 40.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து திருச்சியில் 39.5, தஞ்சையில் 39, மதுரையில் 39, பரங்கிப்பேட்டையில் 38, ஈரோட்டில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை மீனம்பாக்கத்தில் 37, நுங்கம்பாக்கத்தில் 35.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

உள் தமிழகத்தில் அதிகரிக்கும் வெபபநிலை:

அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது எனவும், கடலோர தமிழகம் மற்றும் உள் தமிழகத்தில் வெப்பநிலை சற்று உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தூத்துக்குடியில் பயங்கரம்.. வீட்டிற்குள் புகுந்து புதுமாப்பிள்ளைக்கு சரமாரி அரிவாள் வெட்டு.. முன்விரோதமா? போலீசார் விசாரணை!

6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:

இதனிடையே, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழையும் பதிவாகி வருகிறது. செப்டம்பர் 4-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 5 முதல் 9-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மழைக்கு வாய்ப்பு:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், நேற்று மாலை முதல் நகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் கணிசமாகக் குறைந்துள்ளது.

மேலும் படிக்க: மோட்டோர் ஸ்போர்ட்ஸ் நகரம் – முதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன நடிகர் அஜித்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us