AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Tamilnadu Weather Forecast: தமிழகத்தில் இன்று இந்த 7 மாவட்டங்களில் கனமழை வெளுத்துவாங்கப்போகுது.. வானிலை மையம் அலர்ட்!!

Tamil Nadu Weather today: தொடர்ந்து, நாளை (நவ.10) தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 2 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, டெல்டா மாவட்டங்கள், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tamilnadu Weather Forecast: தமிழகத்தில் இன்று இந்த 7 மாவட்டங்களில் கனமழை வெளுத்துவாங்கப்போகுது.. வானிலை மையம் அலர்ட்!!
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 09 Nov 2026 06:28 AM IST

சென்னை, நவ.09: தமிழகத்தில் இன்று தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில் கூறியதாவது, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளா கடலரோ பகுதிகளின் மேல் சுமார் 0.9 கி மீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

இதையும் படிக்க : கலைஞர் நூற்றாண்டு நூலகத்திலும் முறைக்கேடு – ஆராய்ச்சி மாணவர்கள் குற்றச்சாட்டு

இன்று மழைக்கு வாய்ப்பு:

அந்தவகையில், இன்று (நவ.09) தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களிலும் புதுச்சேரியின் காரைக்காலிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தேனி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாக்குமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் நாட்களில் மழை வாய்ப்பு:

தொடர்ந்து, நாளை (நவ.10) தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 2 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, டெல்டா மாவட்டங்கள், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதோடு, நவ.11ம் தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் லேசான மழை பெய்யக்கூடும். நவ.12ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை மாற்றம்:

வரும் நவ.12ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. அதேபோல், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும் என கூறியுள்ளது.

இதையும் படிக்க : மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கக்கூடாது: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்

சென்னையில் வானிலை நிலவரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us