AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சென்னையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.. முக்கிய அறிவிப்பு!

CMRL Diwali Train Timings | தமிழக்த்தில் நேற்று (நவம்பர் 08, 2026) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், இன்று (நவம்பர் 09, 2026) பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.. முக்கிய அறிவிப்பு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 09 Nov 2026 07:31 AM IST

சென்னை, நவம்பர் 09 : தமிழகத்தில் (Tamil Nadu) நேற்று (நவம்பர் 08, 2026) தீபாவளி பண்டிகை (Diwali Festival) கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இன்று (நவம்பர் 09, 2026) ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் (CMRL – Chennai Metro Rail Limited) நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவது குறித்து வெளியான இந்த முக்கிய அறிவிப்பு என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தீபாவளிக்கு அடுத்த நாள் பொது விடுமுறை : தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் கொண்டாடும் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக உள்ளதுதான் தீபாவளி. கல்வி, பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பலரும் தங்களது சொந்த ஊர்களை விட்டுவிட்டு வெளியே உள்ள முக்கிய நகரங்களில் வசித்து வருகின்றன. எனவே, அவர்களில் பெரும்பாலானவர்கள் இத்தகைய பண்டிகைகளின் போதுதான் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லுவர். எனவே, ஒரு நாள் விடுமுறை போதுமானதாக இருக்காது என்பதால் திங்கள் கிழமை (நவம்பர் 09, 2026) அன்றும் தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அளித்து உத்தரவிட்டது.

இதையும் படிங்க : முதல்வர் விஜய்க்காக புனித மெக்காவில் மொட்டை அடித்த தவெக எம்எல்ஏ முஸ்தபா

ஞாயிறு அட்டவணை படி ரயில்கள் இயக்கப்படும்

தமிழகத்திற்கு இன்று பொது விடுமுறை என்பதால் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது, தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று மெட்ரோ ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும்.

இதையும் படிங்க : ரூ.200 கோடிக்கு மேல் கட்டுமான பணிகளுக்காக புதிய நிறுவனம் – தமிழக அரசு அரசாணை வெளியீடு

நீலம் மற்றும் பச்சை வழித்தடங்கள்

குறிப்பாக நீலம் மற்றும் பச்சை வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும். அதாவது, காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை என 10 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். இதுவே மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். மேலும் இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.

மஞ்சள் வழித்தடம்

மஞ்சள் வழித்தடத்தில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். எனவே, பயணிகள் இந்த அட்டவணைப்படி மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us