AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கோலாகலமாக கொண்டாடப்பட்ட தீபாவளி.. ஒரே நாளில் 650-க்கும் மேற்பட்டோர் காயம்!

Over 650 Fireworks Injuries Reported by TN Fire Services | தமிழகத்தில் நேற்று (நவம்பர் 08, 2026) தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் சுமார் 650-க்கும் மேற்பட்டவர்கள் பட்டாசு விபத்துகளில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோலாகலமாக கொண்டாடப்பட்ட தீபாவளி.. ஒரே நாளில் 650-க்கும் மேற்பட்டோர் காயம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 09 Nov 2026 08:58 AM IST

சென்னை, நவம்பர் 09 : தீபாவளி பண்டிகை (Diwali Festival) எவ்வளவு வண்ணமயமானதோ, மகிழ்ச்சி மிக்க, கோலாகலமானதோ அதே அளவுக்கு ஆபத்து மிக்க பண்டிகையாக உள்ளது. இந்த நிலையில் தான் தமிழகத்தில் (Tamil Nadu) நேற்று (நவம்பர் 08, 2026) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 650 பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை தமிழ்நாடு தீயணைப்பு துறை (TNFRS – Tamil Nadu Fire and Rescue Services) வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு தீயணைப்பு துறை வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட தீபாவளி

தமிழகத்தில் நேற்று (நவம்பர் 08, 2026) தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளியையும், பட்டாசையும் பிரிக்கவே முடியாது. அந்த வகையில், பொதுமக்கள் விதவிதமான பட்டாசுக்களை வெடித்து தீபாவளியை கொண்டாடினர். பட்டாசு வெடிக்கும்போது விபத்துகள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. அவ்வாறு விபத்துகள் ஏற்படாமல் பொதுமக்கள் பாதுகாப்பாக பட்டாசுக்களை வெடிக்க ஒவ்வொரு ஆண்டும் அரசும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டும் விபத்துகள் நடைபெற்றுள்ளன

இதையும் படிங்க : தவெகவில் இணைந்த 4 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் – வரும் 17 அன்று இறுதி விசாரணை?

ஒரே நாளில் 650-க்கும் மேற்பட்டோர் காயம்

இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தில் அதாவது நேற்று (நவம்பர் 08, 2026) ஒரே நாளில் சுமார் 679 பேர் காயமடைந்துள்ளனர். பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட விபத்துகள் காரணமாக நேற்று மொத்தம் 54 அவசர அழைப்புகள் வந்ததாகவும், இதர தீ விபத்துகள் தொடர்பாக 37 அவசர அழைப்புகள் என மொத்தம் 91 அவசர அழைப்புகள் நேற்று ஒரே நாளில் வந்ததாக தமிழ்நாடு தீயணைப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : நெல்லூர் அருகே கரை ஒதுங்கிய மேலும் 2 மீனவர்களின் உடல்கள் – சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்

679 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

இவ்வாறு பட்டாசு விபத்துகளில் சிக்கி சுமார் 679 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Follow Us