AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

புகை மண்டலமாக மாறிய சென்னை.. தரை இறங்க முடியாமல் தவித்த விமானங்கள்!

Chennai Airport Flights Diverted | நேற்று தீபாவளி பண்டிகையின் போது வெடித்த பட்டாசுகளால் வானம் மிகவும் புகை மூட்டம் மிகுந்ததாக காணப்படுகிறது. இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் தரை இறங்க முடியாமல் சில விமானங்கள் கடும் சிக்கல்களை சந்தித்தன.

புகை மண்டலமாக மாறிய சென்னை.. தரை இறங்க முடியாமல் தவித்த விமானங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 09 Nov 2026 09:03 AM IST

சென்னை, நவம்பர் 09 : நேற்று (நவம்பர் 08, 2026) தமிழகத்தில் (Tamil Nadu) கோலாகலமாக தீபாவளி பண்டிகை (Diwali Festival) கொண்டாடப்பட்டது. இதன் காரணமாக நேற்று முதலே வானம் புகை மூட்டம் மிகுந்ததாக காணப்படுகிறது. இந்த நிலையில், பட்டாசு புகை காரணமாக இன்று (நவம்பர் 09, 2026) சென்னை விமான நிலையத்தில் (Chennai Airport) விமானங்கள் தரையிறங்க முடியாமல் கடும் சிரமங்களை சந்தித்தன. இந்த நிலையில், பட்டாசு புகை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவித்தது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கோலாகலமாக கொண்டாடப்பட்ட தீபாவளி : புகை மண்டலமாக மாறிய வானம்

நேற்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. குறிப்பாக தீபாவளி பண்டிகைக்கு முக்கிய அம்சமே பட்டாசு வெடிப்பது தான் என்பதால் ஏராளமான பொதுமக்கள், அதாவது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என பல்வேறு தரப்பினர் பட்டாசு வெடித்து உற்சாகமாக தீபாவளியை கொண்டாடினர். தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு ஏற்படும். இதன் காரணமாக தான், ஒவ்வொரு பகுதிகளுக்கும் நேர கட்டுப்பாடு விதிக்கப்படும். அந்த வகையில், சென்னைக்கும் ஒவ்வொரு ஆண்டும் நேர கட்டுப்பாடு விதிக்கப்படும். ஆனால், பொதுமக்கள் அதனை கருத்தில் கொள்ளாமல் பட்டாசு வெடித்து வருகின்றனர். அந்த வகையில், நேற்று ஒரு நாள் முழுவதும் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதன் காரணமாக வாகன் புகை மூட்டமாக மாறியது.

இதையும் படிங்க : நெல்லூர் அருகே கரை ஒதுங்கிய மேலும் 2 மீனவர்களின் உடல்கள் – சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்

தரை இறங்க முடியாமல் தவித்த விமானங்கள்

குறிப்பாக சென்னையில் நேற்று முதலே வானம் மிகவும் புகை மூட்டமாக காணப்படுகிறது. அதன் தாக்கம் இன்றும் குறையாமல் உள்ளது. அதாவது, தற்போது வரை வானம் புகை மூட்டம் மிகுந்ததாக உள்ளது. இந்த நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு வந்த விமானங்கள் தரை இறங்க முடியாமல் சவால்களை சந்தித்தன. குறிப்பாக மிக கடுமையான புகை மூட்டம் காரணமாக 11 விமானங்கள் தரை இறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன. இதேபோல புகை மூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து 15 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றுள்ளன.

இதையும் படிங்க : முதல்வர் விஜய்க்காக புனித மெக்காவில் மொட்டை அடித்த தவெக எம்எல்ஏ முஸ்தபா

Follow Us