AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நீலகிரி டூ நெல்லை.. வெளுக்கப்போகும் கனமழை.. வானிலை மையம் அலர்ட்

Tamil Nadu Weather Update : தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும். சென்னையில் இரண்டு நாட்களுக்கு ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதோடு, நீலகிரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி டூ நெல்லை.. வெளுக்கப்போகும் கனமழை.. வானிலை மையம் அலர்ட்
மழைImage Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 23 Jul 2025 16:33 PM IST

சென்னை, ஜூலை 23 : சென்னை அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் (IMD Tamil Nadu Weather) தெரிவித்துள்ளது.  குறிப்பாக, நெல்லை, தேனி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை (Tamil Nadu Rains) பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வருகிறது. 2025 ஜூலை மாதம் தொடக்கத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் கடந்த மூன்று தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் முற்றிலுமாக தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம்.

அதன்படி, மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 2025 ஜூலை 23ஆம் தேதி முதல்  29ஆம் தேதி வரை   மிதமான மழையும், ஒருசில மாவட்டங்களில் கனமழையும் பெய்யக் கூடும். 2025 ஜூலை 23ஆம் தேதியான இன்று நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Also Read : குறையும் மழை.. அடுத்த சில நாட்களுக்கு மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்பு..

வெளுக்கப்போகும் கனமழை


மேலும், 2025 ஜூலை 24ஆம் தேதி நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தொடர்ந்து, 2025 ஜூலை 25ஆம் தேதி நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, 2025 ஜூலை 26ஆம் தேதி நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 2025 ஜூலை 27ஆம் தேதி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : சில்லென மாறிய சென்னை.. 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

சென்னையை பொறுத்தவரை, 2025 ஜூலை 23,24ஆம் தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Follow Us