AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நீலகிரி டூ நெல்லை.. பிச்சு உதறபோகும் கனமழை.. சென்னையில் எப்படி? வானிலை அப்டேட்

Tamil Nadu Weather Alert : தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், 2025 மே 31ஆம் தேதியான இன்று தமிழகத்திற்கு கனமழை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, நெல்லை, தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும்.

நீலகிரி டூ நெல்லை.. பிச்சு உதறபோகும் கனமழை.. சென்னையில் எப்படி? வானிலை அப்டேட்
மழைImage Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Published: 31 May 2025 06:16 AM IST

சென்னை, மே 31 : தமிழகத்தில் 2025 மே 31ஆம் தேதியான இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் (Tamil Nadu Weather update) தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் மே மாத தொடக்கத்தில் இருந்தே பலத்த மழை பெய்து வருகிறது. மே மாதத்தில் வெப்பமான சூழலே இல்லாத நிலை இருந்தது. மே மாதம் முழுவதுமே மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக, நீலகிரி, கோவை, நெல்லை, கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் மழையின் தாக்கம் தீவிரமாக இருந்தது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து, மழை பொழிவு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அதிகளவில் இருந்தது. சென்னையிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

பிச்சு உதறபோகும் கனமழை

இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம். மேற்கு வங்களா வங்கதேச கடலோரப் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வங்காளம் வங்கதேசம் கடற்கரை பகுதிகளில் சாகர் தீவுகளுக்கு கேபுபாராவிற்கும இடையே 2025 மே 30ஆம் தேதியான மதியம் கரையை கடந்தது.

2025 மே 31ஆம் தேதி முதல் ஜூன் 5ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், 2025 மே 31ஆம் தேதியான இன்று கோவை, திருநெல்வேலி, நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் எப்படி?


சென்னையை பொறுத்தவரை, 2025 மே 31ஆம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் க இருக்கும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மீனவர்கள் 2025 ஜூன் 3ஆம் தேதி வரை தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜூன் மாதத்தில் வழக்கத்தை விட அதிகளவு மழை பொழிவு இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. பருவமழை வலுவாக இருக்க நேரத்தில், மழை தாக்கம் தீவிரமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தற்போதே மழையின் தாக்கம் தீவிரமாக உள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் 2025 மே 24ஆம் தேதி தொடங்கியது. அப்போது முதலே மிக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us