Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வைகாசி விசாகத் திருவிழா: தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

Tuticorin District Holiday: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 2025 ஜூன் 9 ஆம் தேதி நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஜூன் 14 ஆம் தேதி மாற்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வைகாசி விசாகத் திருவிழா: தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
ஜூன் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்புImage Source: x
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 30 May 2025 20:15 PM

தூத்துக்குடி மே 30: தூத்துக்குடி மாவட்டம் (Thoothukudi District) திருச்செந்தூரில் 2025 ஜூன் 9ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழா (Vaikasi Visakha Festival) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை (Local Holiday) அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பல்வேறு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெறவுள்ளன. சுவாமி ஜெயந்திநாதர் சப்பரத்தில் எழுந்தருளி சண்முக விலாசம் மண்டபம் அடைவார். முனிக்குமாரர்களுக்கான சாபவிமோசன வைபவம், மகாதீபாராதனை நடைபெறும். மாற்று வேலை நாளாக ஜூன் 14 சனிக்கிழமை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஜூன் 9ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழா விமரிசையாக நடைபெற உள்ளது. இந்தத் திருவிழாவை ஒட்டி, மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைகாசி விசாகத் திருவிழா

வைகாசி மாதத்தில் விசாகம் நட்சத்திரத்தன்று முருகப்பெருமான் அவதரித்த நாளாக நம்பப்படும் இந்த நாளில், முருகனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் புண்ணியம் கிட்டும் என பக்தர்கள் நம்புகின்றனர். அதனை ஒட்டி, திருச்செந்தூர் கோயிலில் நாளை (2025 மே 31) தொடங்கி 10 நாட்கள் வசந்த விசாகத் திருவிழா நடைபெறுகிறது.

அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம்

உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனை

இதில் முக்கிய நிகழ்வாக, 2025 ஜூன் 9ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து, சுவாமி ஜெயந்திநாதர் சப்பரத்தில் எழுந்தருளி சண்முக விலாசம் மண்டபத்தை அடைவார். மாலை நேரத்தில் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது. இதுடன், முனிக்குமாரர்களுக்கு சாபவிமோசனம் அளிக்கும் வைபவம் மற்றும் மகா தீபாராதனையும் இடம்பெறுகின்றன.

ஜூன் 14ஆம் தேதி வேலை நாள்

இந்த விழாவை முன்னிட்டு, 2025 ஜூன் 9ஆம் தேதி (வைகாசி 26 – திங்கள்கிழமை) தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது. இது Negotiable Instruments Act, 1881 சட்டத்தின் கீழ் பொது விடுமுறை அன்று அல்ல என்றும், அவசர சேவை பணியாளர்கள் வழக்கம்போல பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறைக்கு மாற்றாக 2025 ஜூன் 14ஆம் தேதி (இரண்டாம் சனிக்கிழமை) அலுவலகங்கள் இயங்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து, திருவிழாவை ஆனந்தமாகக் கொண்டாடும் சூழல் உருவாகியுள்ளது.