AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் உச்சவரம்பு உயர்வு: ஒரு கிராமுக்கு ரூ.10,000 வரை கடன்..

Gold Loan In Cooperative Bank: கூட்டுறவு வங்கிகளின் நகைக்கடன் உச்சவரம்பு ரூ.7,000-ல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டிருப்பது, கூட்டுறவு நிறுவனங்களில் நகைக்கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் நிதி வசதியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தனியார் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுடன் போட்டியிட கூட்டுறவு நிறுவனங்களுக்கு இது உதவும் என கூறப்படுகிறது.

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் உச்சவரம்பு உயர்வு: ஒரு கிராமுக்கு ரூ.10,000 வரை கடன்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 05 Oct 2026 17:49 PM IST

அக்டோபர் 5, 2026: தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் தங்க நகைக்கடனுக்கான உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை ஒரு கிராம் தங்கத்திற்கு அதிகபட்சமாக ரூ.7,000 வரை கடன் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த வரம்பு ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்கத்தை அடமானம் வைத்து கடன் பெறும் பொதுமக்களுக்கு கூடுதல் நிதி கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு கிராமுக்கு ரூ.10,000 வரை கடன்

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் தங்க நகைகளை அடமானம் வைத்து பொதுமக்கள் கடன் பெற்று வருகின்றனர். இதுவரை ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.7,000 மட்டுமே அதிகபட்சமாக கடன் வழங்கப்பட்டு வந்தது. தற்போது பிற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வழங்கப்படும் கடன் அளவை கருத்தில் கொண்டு, கூட்டுறவு நிறுவனங்களிலும் ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் வழங்கும் வகையில் உச்சவரம்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: நெல்லை அருகே சம்பவம்.. கட்டிலில் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்த தொழிலாளி.. நள்ளிரவில் மர்ம நபர்கள் வெறிச்செயல்!

மேலும், தங்க நகையின் சந்தை மதிப்புக்கு ஏற்ப ஒரு கிராமுக்கு ரூ.10,000 அல்லது நகையின் மதிப்பில் 75 சதவீதம் என்ற அடிப்படையில் கடன் வழங்கும் வகையிலும் விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் விலை உயர்வு எதிரொலி?

சர்வதேச பொருளாதார சூழல், போர் பதற்றங்கள், பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. 2025 டிசம்பர் மாதத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை கடந்த நிலையில், அதன்பிறகு தங்கம் விலை தொடர்ந்து அதிக அளவிலேயே நீடித்து வருகிறது.

மேலும் படிக்க: திருச்சியில் துணிகரம்.. வெளிமாநிலத்திலிருந்து ரூ.25 லட்சம் போதை இலை கடத்தல்.. மாணவர்களுக்கு குறி வைத்த 5 பேர்!

தற்போது தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், பொதுமக்கள் தங்களது அவசர தேவைகளுக்காக தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெறும் நிலையும் அதிகரித்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பயன்

கூட்டுறவு வங்கிகளின் நகைக்கடன் உச்சவரம்பு ரூ.7,000-ல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டிருப்பது, கூட்டுறவு நிறுவனங்களில் நகைக்கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் நிதி வசதியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தனியார் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுடன் போட்டியிட கூட்டுறவு நிறுவனங்களுக்கு இது உதவும் என கூறப்படுகிறது.

Follow Us