Tamil Nadu News Highlights: நலம்பெற்று பங்கேற்ற முதல் நிகழ்ச்சியே மனமகிழ்ச்சி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..!
Tamil Nadu Breaking news Today 31 July 2025, Live Updates: பாஜக கூட்டணியில் இருந்து விலகி விட்டோம் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் எனவும் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு பவானி சாகர் அணையில் இருந்து ஜூலை 31, 2025 அன்று தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை உடனுக்குடன் இந்த பகுதியில் தெரிந்துகொள்ளலாம். தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். தமிழக முஸ்லிம்களுக்கான ஹஜ் விண்ணப்பங்கள் மும்பை இந்திய ஹஜ் குழுவால் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பிக்க ஜூலை 31, 2025 அன்று கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. பயிர் காப்பீடு செய்ய ஜூலை 31, 2025 அன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சொந்த நிலம், குத்தகை நிலம் உள்ளவர்கள் இசேவை மையம் மூலம் காப்பீடு செய்யலாம். இதன் மூலம் இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விவசாயிகள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும். தமிழ்நாட்டில் கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 31, 2025 இன்று கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. கோவை குற்றாலம் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த சில நாட்களாக குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நிலைமை சீரானதையடுத்து ஜூலை 31, 2025 அன்று முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ் நாட்டில் சில பகுதிகளில் மின் தடை (PowerCut Today) அறிவிக்கப்பட்டிருக்கிறது. ராமநாதபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-26ம் கல்வியாண்டிற்கான கணினி இயக்குநர், உற்பத்தி பிரிவு, டெக்னிசியன், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக் ஆகிய பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை ஜூலை 31, 2025 அன்றுடன் நிறைவடைகிறது. அதுகுறித்து தெரிந்துகொள்ளலாம்.
மேலும் தமிழ்நாடு செய்திகளை தெரிந்துகொள்ள கிளிக் செய்க
LIVE NEWS & UPDATES
-
Tamil Nadu CM MK Stalin: நலம்பெற்று பங்கேற்ற முதல் நிகழ்ச்சியே மனமகிழ்ச்சி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..!
நலம்பெற்று பங்கேற்ற முதல் நிகழ்ச்சியே மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி. ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப்பள்ளிகளில் பயின்று, உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கினேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் போஸ்ட்:
நலம்பெற்றுப் பங்கேற்ற முதல் நிகழ்ச்சியே மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சியானது!
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயின்று, இன்று புகழ்பெற்ற உயர்கல்விநிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 136 மாணவ – மாணவியர்களுக்கு மடிக்கணினிகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கினேன்.
மிகவும்… pic.twitter.com/JCbQixs7BJ
— M.K.Stalin (@mkstalin) July 31, 2025
-
Chief Minister M.K. Stalin-OPS meeting: முதல்வர் மு.க.ஸ்டாலின்- ஓபிஎஸ் சந்திப்பு..!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர்
ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். அதன்பிறகு, செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், “முதலமைச்சரின் உடல்நலம் பற்றி விசாரிக்க, மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து மறைவுக்கு இரங்கல் தெரிவித்தேன். அரசியல் ரீதியாக எந்தப் பேச்சும் நடக்கவில்லை” என தெரிவித்தார். -
Haj Committee: ஹஜ் விண்ணப்பம் கால அவகாசம் நீட்டிப்பு..!
2026 ஆம் ஆண்டு ஹஜ் பயணம் செல்வோர் விண்ணப்பிக்க ஜூலை 30ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கூடுதலாக ஒரு வார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 2025 ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை இந்திய ஹஜ் அசோசியேசன் உறுதி செய்துள்ளது.
-
OPS meet CM Stalin: முதலமைச்சர் ஸ்டாலினை மீண்டும் சந்திக்கும் ஓபிஎஸ்..!
சென்னை ஆழ்வார்பேட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்னும் சற்று நேரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்கிறார். ஓ.பன்னீர்செல்வம் இன்று அதாவது 2025 ஜூலை 31ம் தேதி காலையில்தான் நடைப்பயணத்தின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Tamilnadu Weather Update: மாலை 7 மணிக்குள் எங்கெல்லாம் மழை..? வானிலை ஆய்வு மையம் தகவல்..!
தமிழ்நாட்டில் 2025 ஜூலை 31ம் தேதியான இன்று இரவு 7 மணிக்குள் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
Tirunelveli Honour Killing: ஆணவக் கொலைகளுக்கு தனிச் சட்டம்.. ஜெகன் மூர்த்தி கோரிக்கை..!
ஆணவக் கொலைகளுக்கு தனிச் சட்டம் இருந்திருந்தால் கவின் கொல்லப்பட்டிருக்க மாட்டார். கவின் கொலையில் காவல்துறை கட்டப் பஞ்சாயத்து செய்யாமல், உரிய விசாரணை நடத்தி சுர்ஜித் அவரது பெற்றோருக்கு தண்டனை கிடைக்கப்பட வேண்டும் என புரட்சிப் பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
-
Mettur Dam Water Level Today: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து நிலவரம் என்ன..?
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து, இன்று மாலை 4 மணி நிலவரப்படி விநாடிக்கு 30,500 கன அடியாக நீடிக்கிறது. அதேநேரத்தில், அணையில் இருந்து நீர் வெளியேற்றமும் விநாடிக்கு 30,500 கன அடியாகவும் உள்ளது.
-
Anbumani Meet Farmers: திருவள்ளூவர் விவசாயிகளை சந்தித்த அன்புமணி ராமதாஸ்..!
திருவள்ளூர் அடுத்த பெரியபாளையம் அருகே அறிவுசார் நகரம் அமைக்கும் திட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர் என்று விவசாய்யிகளை சந்தித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துரையாடி வருகிறார்.
-
Sathankulam Case: சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக இன்று மீண்டும் விசாரணை..!
சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், அப்ரூவராக மாற தாக்கல் செய்யப்பட்ட மனு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று அதாவது 2025 ஜூலை 31ம் தேதி மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
Tirunelveli Honour Killing: திருநெல்வேலி ஆணவக் கொலை.. கவின் குடும்பத்திற்கு திருமாவளவன் ஆறுதல்..!
திருநெல்வேலியில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷ் வீட்டிற்கு சென்று அவரது தாய், தந்தைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆறுதல் கூறினார்.
-
Tirunelveli Honour Killing: கவின் ஆணவக் கொலை வழக்கு.. ஆவணங்களை சிபிசிஐயிடம் ஒப்படைத்த காவல்துறை..!
ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை விவகாரம் தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடியிடம் காவல்துறை ஒப்படைத்தது. பறிமுதல் செய்யப்பட்ட செல்போன், இருசக்கர வாகனம், சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆவணங்களின் அடிப்படையில் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
-
Madurai Corporation: மதுரை மாநகராட்சி சொத்துவரி ஊழல் விவகாரம்.. சிபிஐக்கு மாற்ற கோரிக்கை..!
மதுரை மாநகராட்சி சொத்துவரி ஊழல் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிடக்கோரி மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தொடர்ந்துள்ளார். இந்த மனுவில் ரூ.3,000 கோடிக்கு ஊழல் நடைபெற்றுள்ள நிலையில் ரூ.200 கோடி மட்டுமே ஊழல் நடந்துள்ளதாக கூறவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Nalam Kakkum Stalin Scheme: முதல்வர் பெயர் பயன்படுத்தலாம்.. உயர்நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு..!
ஸ்டாலின் என்ற பெயருடன் இருக்கும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்ற மருத்துவ திட்டத்திற்கு தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அரசு திட்டத்தில் முதல்வரின் பெயரை பயன்படுத்தலாம் என்ற விளக்கத்தை ஏற்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Tirunelveli Honour Killing Case :கவின் கொலைக்கும் என் தாய், தந்தைக்கு சம்பந்தம் இல்லை – சுபாஷினி விளக்கம்
கவின் கொலைக்கும் எனது தாய் தந்தைக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனக்கும் கவினுக்கும் என்ன உறவு என்பது பற்றி எனக்கு மட்டும் தான் தெரியும். எனது உணர்வுக்கு மதிப்பளியுங்கள் என திருநெல்வேலியில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் காதலித்ததாக கூறப்படும் சுபாஷினி வீடியோ வெளியிட்டுள்ளார்.
-
IAS Transfer Order: தமிழ்நாட்டில் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..!
தமிழ்நாட்டில் 11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
-
Dengue Fever: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு பரவல்.. பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்..!
சென்னை, கடலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
Supreme Court Order: முல்லைப்பெரியாணு அணை விவகாரம்.. மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!
முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பு பணிகளுக்கு மரம் வெட்டுவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள உரிய அனுமதி வழங்க வேண்டும் எனவும், உரிய சுற்றுச்சூழல் அனுமதியை 4 வாரங்களில் வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Tamil Nadu Govt: கிராமங்களில் உள்ள சிறு, குறு கடைகளுக்கு உரிமம் தேவையில்லை – தமிழ்நாடு அரசு
கிராமப்புற சிறு, குறு வணிகர்களுக்கு தொழில் தொடங்க உரிமம் தேவையில்லை என்று வணிகர்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. முன்னதாக, பஞ்சாயத்து பகுதிகளில் கடைகள் நடத்த உரிமம் பெறுவதில் சிக்கல் நிலவுவதாக வணிகர்கள் மனு அளித்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
OPS meet CM MK Stalin: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்பு பற்றி ஓபிஎஸ் விளக்கம்..!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது குறித்து பதிலளித்த ஓபிஎஸ், “நான் நடைபயிற்சி செல்லும்போது முதலமைச்சரும் நடைபயிற்சியில் இருந்ததால் வணக்கம் தெரிவித்துவிட்டு சென்றேன்” என தெரிவித்தார்.
-
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க அதிக மயக்க மருந்து கொடுக்கப்பட்டதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
-
நெல்லை ஆணவக் கொலை – சிபிசிஐடி வழக்குப்பதிவு
திருநெல்வேலியில் ஐடி ஊழியர் கவின் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது. வழக்கு சம்பந்தமான செல்போன், சிசிடிவி Hard disk, இருசக்கர வாகனம் உட்பட ஆவணங்களும் சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
-
தவெக உடன் கூட்டணியா? ஓபிஎஸ் அணி அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணியா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த பண்ருட்டி ராமச்சந்திரன், எதிர்காலத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், ஓ.பன்னீர்செல்வம் விரைவில் சுற்றுப் பயணம் மேகொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.
-
அரசியல் இல்லை – பிரேமலதா விஜயகாந்த்
முதல்வர் சந்தித்ததில் 100 சதவீதம் அரசியல் காரணங்கள் இல்லை எனவும் நட்புரீதியாக, முதல்வரின் உடல்நிலை குறித்து கேட்டறிய மட்டுமே சந்தித்தோம் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்துள்ளார். 2025 ஜூலை 31ஆம் தேதியான இன்று ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில், முதல்வர் ஸ்டாலினை பிரேமலதா சந்தித்து நலம் விசாரித்தார்.
-
பாஜக கூட்டணியில் இருந்து விலகி விட்டோம் – ஓபிஎஸ் அணி அறிவிப்பு
பாஜக கூட்டணியில் இருந்து விலகி விட்டோம் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று மணி நேரமாக நடந்த ஆலோசனைக்கு பிறகு, இந்த முடிவை எடுத்துள்ளதாக பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
-
2026 தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பில்லை – திருமாவளவன்
1967, 1977ஆம் ஆண்டு தேர்தலை போல, 2026 சட்டப்பேரவை தேர்தல் இருக்கும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறியதற்கு, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். 1967, 1977ஆம் ஆண்டு நடந்த தேர்தலை போல, தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பில்லை என திருமாவளவன் கூறியுள்ளார்.
-
நட்புடன் நலம் விசாரித்தமைக்கு நன்றி – முதல்வர் ஸ்டாலின்
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலினை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 2025 ஜூலை 31ஆம் தேதியான இன்று சந்தித்தார். அப்போது, முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், நட்புடன் நலம் விசாரித்தமைக்கு நன்றி என பதிவிட்டு இருக்கிறார்.
நலம் விசாரித்தமைக்கு நன்றி
நட்புடன் நலம் விசாரித்தமைக்கு நன்றி!@PremallathaDmdk https://t.co/pAxATFTdLt
— M.K.Stalin (@mkstalin) July 31, 2025
-
முதல்வர் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் சந்திப்பு
முதல்வர் ஸ்டாலினுடன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் அடையாறு பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, அவரை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துள்ளார். அப்போது, முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
-
‘சாதிய கொலைகள் அதிகரித்துள்ளது’ – திருமாவளவன்
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் தொல் திருமாவளவன், சாதிப் பெருமை தான் ஆணவக் கொலைகளுக்கு காரணம் என தெரிவித்தார். மேலும், வட இந்திய மாநிலங்களில் நடக்கும் சாதிய படுகொலைகள் தென்னிந்திய மாநிலங்களிலும் அதிகரித்துள்ளது என்றும் ஆணவக் கொலைகளை தடுக்க மத்திய அரசு தேசிய அளவில் சட்டம் இயற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
-
ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை
சென்னையில் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அவருடைய ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். பாஜக கூட்டணியில் தங்களுக்கு முக்கியத்துவம் குறைகிறது என ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
-
விநாயகர் சதுர்த்தி – 1.50 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 1.50 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்படும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். விநாயக சதுர்த்தி 2025 ஆகஸ்ட் 27ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
-
முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிரேமலதா
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா சந்தித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் ஸ்டாலினை அவர் சந்தித்துள்ளார். அப்போது, முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும் படிக்க
-
10 நாட்களுக்கு பிறகு.. தலைமைச் செயலகம் செல்லும் முதல்வர்
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஸ்டாலின், 2025 ஜூலை 27ஆம் தேதி வீடு திரும்பினார். சில நாட்கள் தொடர் ஓய்வுக்கு பிறகு, 2025 ஜூலை 31ஆம் தேதியான இன்று தனது பணிகளை தொடங்கியுள்ளார். குறிப்பாக, 10 நாட்களுக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகம் செல்கிறார். அங்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மேலும் படிக்க
-
தேசிய அளவில் பொறுப்பு.. விஜயதரணி நம்பிக்கை
தற்போது வெளியாகி இருப்பது மாநில அளவிலான பட்டியல் மட்டுமே என்றும், தனக்கு தேசிய அளவில் பொறுப்பு கிடைக்கும் என்றும் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2025 ஜூரை 30ஆம் தேதியான நேற்று பாஜக புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில், விஜயதரணி இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
-
கவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல்
நெல்லையில் இளைஞர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்டார். இதில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர். அதோடு, குற்றம் செய்தவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுப்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார் என கவின் பெற்றோரிடம் எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். மேலும் படிக்க
-
மகன் உயிரிழந்ததால் மன உளைச்சல் – தம்பதி தற்கொலை
ஈரோடு மாவட்டத்தில் தனது மகன் உயிரிழந்த சோகத்தில் இருந்த பெற்றோர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். உறவினர்களுக்கு வாய்ஸ் நோட் அனுப்பிவிட்டு தம்பதி இருவரும் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க
-
சென்னையில் விபத்து – 2 பேர் பலி
சென்னையில் பூந்தமல்லியில் தாறுமாறாக ஓடிய தண்ணீர் லாரி, சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாலையில் நடந்து சென்றவர்கள் 2 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். லாரி ஓட்டுநர் மது போதையில் இருந்ததால், இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
-
பெண்களை அச்சுறுத்தினால் 3 ஆண்டு சிறை
பாதிக்கப்பட்ட பெண்களை அச்சுறுத்தினால் மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என திருநெல்வேலி எஸ்பி தெரிவித்துள்ளார். மேலும், ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டத்தின் புதிய பிரிவு 7(C) – பெண்கள் பாதுகாப்புக்கான ஒரு முக்கிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
-
ஆகஸ்ட் 4 மற்றும் 5 வானிலை நிலவரம்
ஆகஸ்ட் 4ஆம் தேதி தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், திருவாரூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது 2025 ஆகஸ்ட் 5ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், சிவகங்கை, ராமாநாபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Chennai Rains : சென்னை வானிலை நிலவரம்!
சென்னையை வானிலையை பொறுத்தவரை, 2025 ஜூலை 31ஆம் தேதியான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் னவும், நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Rain Update : எங்கெல்லாம் கனமழை பெய்யும்?
ஆகஸ்ட் 2ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும். தொடர்ந்து, 2025 ஆகஸ்ட் 3ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
Tamil Nadu Weather : மழை வெளுக்கும் மாவட்டங்கள் என்ன?
தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு திசை வேகமாறுபாடு காரணமாக, 2025 ஜூலை 31ஆம் தேதியான இன்று முதல் 2025 ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக் கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது
-
தவெகவுடன் கூட்டணியா? ஓபிஎஸ் பிளான் என்ன?
ஓ.பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனையும் நடத்தி வருவதாகவும், தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி சேர வேண்டும் என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறி வருவதாகவும் கூறப்படுகிறது.
-
ஓபிஎஸ் யார் பக்கம் – இன்று வெளியாகும் தகவல்
ஓபிஎஸ் யார் பக்கம் நிற்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒன்றுப்பட்ட அதிமுக இணைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு நிலையில், அதற்கு எடப்பாடி பழனிசாமி மறுத்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பில்லை என கூறி வருகிறார்.
-
O. Panneerselvam On Alliance : ஓ.பன்னீர்செல்வம் கூட்டணி அறிவிப்பு
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டணி தொடர்பாக இன்று 2025 ஜூலை 31ஆம் தேதி முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவித்துள்ளார். தமிழக தேர்தல் நெருங்கி வரும் நிலையில் என்னமாதிரியான நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது என்பதை அரசியல் விமர்சகர்களும், மற்ற கட்சியினர் உற்று நோக்கி வருகின்றனர்
-
ரூட் மாற்றம் இதுதான் – நோட் பண்ணுங்க
சென்னை மத்திய கைலாஷ் டூ டைடல் பூங்கா நோக்கி வரும் வாகனங்கள், எதிர் பாதையில் (டைடல் பூங்காவிலிருந்து மத்திய கைலாஷ் வரை) பயன்படுத்த அனுமதிக்கப்படும். ஒரு பாதையைப் பயன்படுத்தி வாகனங்கள் விஎச்எஸ் மருத்துவமனை அருகே உள்ள யு-டர்ன் வரை 300 மீட்டர் தூரம் செல்ல அனுமதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
-
போக்குவரத்து மாற்றம் – போலீசார் விளக்கம்
இந்த போக்குவரத்து மாற்றம் குறித்து தெரிவித்துள்ள காவல்துறை, ராஜீவ் காந்தி சாலையில் காலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால், 2025 ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் காலை 8.30 மணி முதல் நண்பகல் 11 மணி வரை மட்டும் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது என குறிப்பிட்டுள்ளது.
-
Chennai Traffic Alert : சென்னை ராஜீவ் காந்தி சாலையில் ரூட் மாற்றம்
சென்னையில் ராஜீவ் காந்தி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து மாற்றம் 2025 ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அமலாக உள்ளது. இது பீக் ஹவரான காலை நேரத்தில் அமலாகிறது. இதன் மூலம் காலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் குறையக் கூடும்.
Published On - Jul 31,2025 7:02 AM