Tamil Nadu News Highlights: நடைபயணம் தொடங்கிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
Tamil Nadu Breaking news Today 25 July 2025, Highlights: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக மக்களின் உரிமைகளை மீட்க 100 நாட்கள் சுற்றுப்பயணம் அறிவித்துள்ளார். அதன் முதல் நாள் இன்று திருப்போரூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

தமிழகத்தில் அடுத்த ஆறு நாட்களுக்கு மிதமான மழை (Rain Update) பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதில் குறிப்பாக, நீலகிரி தேனி தென்காசி கன்னியாகுமரி திருநெல்வேலி இந்த மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும் எனவும் கணித்துள்ளது. எனவே வானிலை நிலவரம் குறித்த தகவல்களை இந்த பகுதியில் தெரிந்து கொள்ளலாம். மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் (MK Stalin) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 2025 ஜூலை 21ஆம் தேதி தலை சுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு, பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பான அப்டேட்டுகளை இங்கு பார்ப்போம். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் (Kamalhaasan) இன்று (2025, ஜூலை 25) மாநிலங்களவை எம்.பி ஆக பதிவியேற்க உள்ளார். மேலும் அவர் நாடாளுமன்றத்தில் முதல்முறையாக உரையாற்றவும் இருக்கிறார். பிரதமர் மோடி நாளை (2025, ஜூலை 26) தமிழகம் வர உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கூட்டணி ஆட்சி தொடர்பாக அதிமுக பாஜக கூட்டணியில் சலசலப்புகள் இருந்து வருகிறது. அதோடு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைபயணத்தை 2025 ஜூலை 25ஆம் தேதியான இன்று தொடங்கும் நிலையில், அது தொடர்பான அப்டேட்டுகளை இங்கு பார்ப்போம்.
மேலும் தமிழ்நாடு செய்திகள் உடனுக்குடன்
LIVE NEWS & UPDATES
-
நடைபயணம் தொடங்கிய அன்புமணி… வழியெங்கும் தொண்டர்கள் வரவேற்பு!
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். 100 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வின் முதல் நாள் திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தொடங்கியது. அவருக்கு வழியெங்கும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
-
Chennai Power Cut 26 July: சென்னையில் நாளை இங்கெல்லாம் மின்தடை!
சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக வளசரவாக்கம், விருகம்பாக்கம், ஆழ்வார் திருநகர் உள்ளிட்ட பகுதிகளை சுற்றியுள்ள இடங்களில் மின்சாரம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இருக்காது என தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ் மிகவும் அற்புதமான மொழி.. புகழாரம் சூட்டிய வெங்கையா நாயுடு
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, தமிழ் மிகவும் பழமையான, அற்புதமான மொழி. எப்போதும் தாய்மொழியில் பேசுங்கள். அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள்” என தெரிவித்துள்ளார். மேலும் கடவுள் என்னிடம் வரம் கேட்டால் குழந்தை பருவத்தை கேட்பேன் எனவும் கூறியுள்ளார்.
-
கும்மிடிப்பூண்டி சிறுமி விவகாரம்.. உண்மை குற்றவாளி சிக்கினாரா?
கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் உண்மையான குற்றவாளி சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பிடிப்பட்ட 2 பேரின் புகைப்படத்தை சிறுமியிடம் காட்டி உண்மையான குற்றவாளி அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவினரால் தாங்கி கொள்ள முடியவில்லை: அமைச்சர் கே.என்.நேரு
முதலமைச்சரின் திட்டத்துக்கு மக்கள் கொடுக்கும் ஆதரவை அதிமுகவினரால் தாங்கி கொள்ள முடியவில்லை. உறுப்பினர் சேர்க்கையை கூட ஏற்க முடியவில்லை என அமைச்சர் கே.என்.நேரு சரமாரியாக விமர்சித்துள்ளார். திமுக ஆட்சி மீதான ரிப்போர்டை கார்டை அதிமுக கொடுத்தால் நாங்கள் பதில் சொல்ல தயாராக இருக்கிறோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
-
பைக்கில் ஆபத்தான முறையில் மனைவியுடன் ரீல்ஸ் – சிக்கிய இளைஞர்கள்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ரீல்ஸ் செய்வதற்கான ஆபத்தான முறையில் தங்களது மனைவியை இருசக்கர வாகனத்தில் முன்பக்கம் அமர வைத்து ஓட்டிய இளைஞர்களின் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மாநில நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
மடப்புரம் அஜித்குமார் வழக்கு.. தாயாரிடம் சிபிஐ தீவிர விசாரணை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறையினரால் விசாரணையின்போது உயிரிழந்த அஜித்குமாரின் தாயாரிடம் சிபிஐ போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் 12வது நாளாக மடப்புரம் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.
-
புழல் அருகே குழந்தைகளை விற்க முயற்சித்த 3 பெண்கள் கைது
திருவள்ளூர் மாவட்டம் புழல் அருகே குழந்தைகளை விற்க முயற்சித்த 3 பெண்களை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட பெண்களிடம் இருந்த 2 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பிரதமர் மோடி தூத்துக்குடி வருகை.. பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள்
பிரதமர் மோடி தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள முனையத்தை ஜூலை 26ம் தேதி திறந்து வைக்கவுள்ளார். இதனை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் விழா நடக்கும் நேரத்தில் அமலில் இருக்கும் போக்குவரத்து மாற்றங்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
-
டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும் அண்ணாசாலை மேம்பாலம்!
சென்னை அண்ணாசாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை கட்டப்பட்டு வரும் நான்கு வழி உயர்மட்ட மேம்பால பணிகள் டிசம்பரில் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
-
சிறுவன் கடத்தல் வழக்கு.. டென்ஷனான சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற சிறுவன் கடத்தல் வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இந்த வழக்கு சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டாலும் விசாரணை நம்பிக்கையளிக்கும்படி இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
-
நாட்டை பிரிவினைவாத ஆபத்தில் இருந்து மீட்க வேண்டும்: கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை எம்பியாக இன்று பதவியேற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளப் பக்கத்தில், “நமது நாட்டை பிரிவினைவாத ஆபத்தில் இருந்து மீட்க வேண்டும். அதற்காக இந்த அத்தியாயத்தை முடிவாக அல்ல, தொடக்கமாகவே தொடங்குகிறேன்” என தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவின் முக்கிய திட்டங்களை நிறுத்திய திமுக அரசு.. இபிஎஸ் குற்றச்சாட்டு
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முக்கிய திட்டங்களை திமுக ஆட்சியில் நிறுத்தி விட்டதாக புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் அமித்ஷாவை தான் சந்தித்தது தொடர்பாக விமர்சனம் செய்த திமுகவுக்கு சரமாரியாக பதிலடி கொடுத்தார்.
-
ரிதன்யா வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் ஜாமின் கோரி மனுத்தாக்கல்
திருப்பூர் மாவட்டத்தில் வரதட்சணை பிரச்னையால் தற்கொலை செய்துக்கொண்ட ரிதன்யா வழக்கில் கைது செய்யப்பட்ட கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர். இவ்வழக்கில் ஜூலை 30ம் தேதிக்குள் பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
திருவண்ணாமலைக்கு வந்த நேபாள பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!
திருவண்ணாமலைக்கு கிரிவலத்திற்காக வந்த நேபாள பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தனிப்படை போலீசார் திருவண்ணாமலையை சேர்ந்த சேட்டு என்பவரை கைது செய்தனர்.
-
திட்டமிட்டபடி தொடங்குகிறது அன்புமணியின் நடைபயணம்!
100 நாட்கள் மக்களை சந்திக்க அன்புமணி அறிவித்துள்ள “தமிழக மக்களின் உரிமைகளை மீட்க, தலைமுறை காக்க” நடைபயணம் திட்டமிட்டபடி இன்று மாலை 5 மணிக்கு திருப்போரூரில் தொடங்குகிறது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் ஆட்சேபம் தெரிவித்திருந்தார்.
-
புதிய முறையில் இபிஎஸ் பிரச்சாரம்
உருட்டுகளும், திருட்டுகளும் என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதிய பிரச்சார முன்னெடுப்பை தொடங்கி வைத்தார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, இந்த பிரச்சாரத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கி இருக்கிறார்.
-
ராமதாஸ் பிறந்தநாள் – இபிஎஸ் வாழ்த்து
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸுக்கு தொலைபேசி வாயிலாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னதாக, தமிழக முதல்வர் ஸ்டாலின், ராமதாஸுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
-
பிரதமர் மோடியை நேரில் சந்திக்கிறார் ஓபிஎஸ்?
தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கோரி ஓ.பன்னீர்செல்வம் 2025 ஜூலை 24ஆம் தேதி கடிதம் எழுதி இருந்த நிலையில், தற்போது சந்திப்பிற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
சென்னை மத்திய கைலாஷ் மேம்பால பணிகள் – அமைச்சர் கொடுத்த அப்டேட்
சென்னை சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை நடைபெற்று வரும் மேம்பாலம் பணிகள் 2025 டிசம்பர் மாதத்தில் முடிவடையும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். இந்த பாலத்தை 2026 ஜனவரி மாதம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பதாகவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
-
அரசு மருத்துவர் வீட்டில் 152 சவரன் கொள்ளை
கடலூர் மாவட்டம் புதுபிள்ளையார்குப்பத்தில் மருத்துவர் ராஜா என்பவரது வீட்டில் 152 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.10 லட்சத்தையும் கொள்ளை கும்பல் திருடி சென்றது தெரியவந்துள்ளது. வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில், கொள்ளை கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்றுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
-
மல்லை சத்யா உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு எதிராக மல்லை சத்யா உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளார். மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு 2025 ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி காவல்துறையில் மல்லை சத்யா மனு அளித்துள்ளார்.
-
பிரதமருடன் சந்திப்பு உறுதியாகவில்லை – இபிஎஸ்
பிரதமர் மோடியை சந்திக்கும் நேரம் இன்னும் உறுதியாகவில்லை எனவும் தமிழகத்திற்கு வரும் பிரதமரின் பயணத்திட்டம் இன்னும் முழுமையாக தெரியவில்லை எனவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2025 ஜூலை 26ஆம் தேதியான நாளை மாலை பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தருகிறார். இவரை எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்போது விளக்கம்
-
ஆகஸ்ட் 9ல் இருந்து வைகோ பரப்புரை
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதி பிரச்சார பயணத்தை தொடங்குகிறார். 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதி தூத்துக்குடியில் இருந்து பரப்புரை தொடங்கும் வைகோ, 2025 ஆகஸ்ட் 19ஆம் தேதி திருவான்மியூரில் நிறைவு செய்கிறார். தமிழகத்தில் 8 இடங்களில் வைகோ பிரச்சார பயணம் மேற்கொள்கிறார்.
-
ராஜேந்திர சோழனுக்கு சிலை – ராமதாஸ் கோரிக்கை
முதலாம் ராஜேந்திர சோழனுக்கு சிலை வைக்க வேண்டும் என ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடியிடம் அவர் கோரிக்கை வைத்துள்ளார். 2025 ஜூலை 27ஆம் தேதி பிரதமர் மோடி அரியலூர் மாவட்டத்திற்கு வருக தருகிறார்.
-
திமுக எம்.பிக்கள் பதவியேற்பு
மாநிலங்களவை எம்.பியாக திமுக எம்.பிக்கள் சிவலிங்கம், சல்மா, வில்சன் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக, திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் எம்.பியாக பதவியேற்றுக் கொண்டார்.
-
நாடாளுமன்றத்தில் எம்.பியாக பதவியேற்ற கமல்ஹாசன்!
ராஜ்யசபா எம்.பியாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பதவியேற்றுள்ளார். நாடாளுமன்றத்தில் எம்.பியாக கமல்ஹாசன் தமிழில் பதவியேற்றார். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2024ஆம் ஆண்டு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தற்போது கமல்ஹாசன் எம்.பியாக பதவியேற்றுள்ளார்.
எம்.பியாக பதவியேற்ற கமல்ஹாசன்
VIDEO | Parliament Monsoon Session: Makkal Needhi Maiam (MNM) founder and actor-turned-politician Kamal Haasan (@ikamalhaasan) takes oath as Rajya Sabha Member.#ParliamentMonsoonSession
(Source: Third Party)
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/5dYyPkFMb4
— Press Trust of India (@PTI_News) July 25, 2025
-
மருத்துவ படிப்புகள் – தரவரிசை பட்டியல் வெளியீடு
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். 2024ஆம் ஆண்டைப் போலவே 2025ஆம் ஆண்டிலும் 11,350 மருத்துவ இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது என தெரிவித்துள்ளார்.
-
மருத்துவ கலந்தாய்வு எப்போது? அமைச்சர் விளக்கம்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியான நிலையில், தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு 2025 ஜூலை 30ஆம் தேதி தொடங்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், 11,350 மருத்துவ இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் மோடி தமிழகம் வருகை.. 5 அடுக்கு பாதுகாப்பு
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, தூத்துக்குடி, திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மூன்று மாவட்டங்களில் 5 அடுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாலத்தீவு பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி, 2025 ஜூலை 26ஆம் தேதியான நாளை தூத்துக்குடி வருகிறார். தொடர்ந்து, 2025 ஜூலை 27ஆம் தேதி திருச்சி, அரியலூர் செல்கிறார். மேலும் படிக்க
-
பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் – விஜய உத்தரவு
முறையாக பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமனம் செய்யாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். 2 வாரங்களுக்கு ஒரு முறை நிர்வாகிகளின் நடவடிக்கைகளை தொகுத்து கட்சி தலைமைக்கு வழங்க வேண்டும், பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனத்தை விரைவில் முடித்தே ஆக வேண்டும் எனவும் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
-
கிருஷ்ணகிரியில் விபத்து – 2 பேர் பலி
கிருஷ்ணகிரி அருகே டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாலையோரம் நின்றி இருந்த பெண் உள்பட இரண்டு பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். லாரி கவிழ்ந்ததால், அதில் இருந்த ஜல்லி கற்கள் மற்றும் எம் சாண்ட் கலவை கொட்டியில் இரண்டு பேர் பலியாகினர்.
-
ராமதாஸுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், நீண்ட ஆயுளோடு தங்களது பொது வாழ்க்கைப் பயணம் தொடர வேண்டும் எனவும் வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யா @drramadoss அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
நீண்ட ஆயுளோடு, தங்களது பொதுவாழ்க்கைப் பயணம் தொடர வேண்டுமென விழைகிறேன். pic.twitter.com/wcLVWPgHb1
— M.K.Stalin (@mkstalin) July 25, 2025
-
அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டு கொலை
சகோதரர்களான இரண்டு பேரும் அங்குள்ள திருமண மண்டபம் அருகே 2025 ஜூலை 24ஆம் தேதியான நேற்று இரவு மர்ம நபர்களால் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே, ஆவுடையார்கோவில் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
-
Pudukkottai Crime : முன் விரோதம் – இருவர் கொலை
புதுக்கோட்டையில் முன்விரோதம் காரணமாக, சகோதரர்கள் இரண்டு பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர். கொலையாளிகளை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றனர்.
-
அதிக ஜூஸால் ஆபத்து -மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலி
கடந்த மூன்று மாதங்களாக திட உணவுகளை சாப்பிடாமல் இருந்து வந்த மாணவர், வெறும் பழச்சாறுகளை மட்டுமே குடித்து உடற்பயிற்சி மேற்கொண்டுள்ளார். பழச்சாறு மட்டுமே குடித்து வந்ததால் சளி தொல்லைக்கு ஆளாகி மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து இருந்தது தெரியவந்தது. இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது
-
யூடியூப் பார்த்து டயட் – மாணவர் பலி
கன்னியாகுமரியில் உடல் எடையை குறைக்க முயற்சி செய்த மாணவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். யூடியூப் பார்த்து டயட் மற்றும் உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். இதற்காக கடந்த மூன்று மாதங்களாக திட உணவுகளை சாப்பிடாமல் இருந்து வந்த மாணவர், வெறும் பழச்சாறுகளை மட்டுமே குடித்து வந்ததாக தெரிகிறது.
-
தக்காளி விலை உயர்வு ஏன்?
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், காய்கறிகள் விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் தக்காளி விலை உயர்வதாக கூறப்படுகிறது
-
தக்காளி விலை உயர்வு
தமிழ்நாடு முழுவதும் பரவலாக தக்காளி விலை உயர்ந்துள்ளது. 2025 ஜூன் மாதத்தில் ரூ.20 முதல் 30 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி, தற்போது 40 முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது
-
தனி மரியாதை மற்றும் பாக்கியம் – ஓபிஎஸ்
பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டு குறிப்பிட்ட ஓபிஎஸ், முக்கியமான சந்தர்ப்பத்தில் தூத்துக்குடி விமான நிலையத்தில் உங்களை வரவேற்கவும், வழியனுப்பவும் எனக்கு அனுமதி கிடைத்தால் அது ஒரு தனி மரியாதை மற்றும் பாக்கியம். உங்கள் அன்பான பாராட்டு மிகவும் மதிக்கப்படும், நன்றியுடன் நினைவுகூரப்படும்” என குறிப்பிட்டு இருக்கிறார்
-
பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த ஓபிஎஸ்
ஓபிஎஸ் எழுதியுள்ள கடிதத்தில் “ மதுரை-போடிநாயக்கனூர் மின் மயமாக்கப்பட்ட ரயில் பாதைக்காக உங்கள் தொலைநோக்குத் தலைமைக்கும் நீண்டகால விருப்பத்தை நிறைவேற்றியதற்கும் தனிப்பட்ட முறையிலும் எனது தொகுதி மக்கள் சார்பாகவும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்
-
PM Modi Tamil Nadu Visit : பிரதமர் மோடியை சந்திப்பாரா ஓபிஎஸ்?
நாளை தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கோரி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி விமான நிலையத்தில் உங்களை வரவேற்பதற்கோ அல்லது வழி அனுப்பவோ அனுமதி தர வேண்டுமென அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது
-
Rain Today : சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு
சென்னையில் இன்றைய மழை நிலவரத்தை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளிலும், புறநகர்ப்பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
Chennai Rains : லேசான மழையால் ஜில்லாகும் சென்னை
சென்னையை பொறுத்தவரை, சில நாட்களாகவே பகல் நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. பெரிய அளவில் வெயிலின் தாக்கம் இல்லை. மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
-
Weather Today : கனமழைக்கு வாய்ப்புள்ள இடங்கள்!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, ஜூலை 25ஆம் தேதியான இன்று 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேனி, திருநெல்வேலி, கோவை, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Published On - Jul 25,2025 6:58 AM