Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

உடல் எடையை குறைக்க யூடியூப் பார்த்து டயட்டில் இருந்த மாணவர் பலி .. சோக சம்பவம்!

Kanyakumari Student Dies | தற்போதைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் உடல் எடை குறைக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக உள்ளது. அந்த வகையில் கன்னியாகுமரியில் உடல் எடையை குறைக்க முயற்சி செய்த மாணவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடல் எடையை குறைக்க யூடியூப் பார்த்து டயட்டில் இருந்த மாணவர் பலி .. சோக சம்பவம்!
உயிரிழந்த மாணவர்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 25 Jul 2025 07:26 AM

கன்னியாகுமரி, ஜுலை 25 : கன்னியாகுமரியில் (Kanyakumari) யூடியூப் பார்த்து உடல் எடையை குறைக்க (Weight loss) முயற்சி செய்த மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எப்படியாவது உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக கடந்த மூன்று மாதங்களாக வெறும் பழச்சாறு மட்டுமே குடித்து உடற்பயிற்சி செய்து வந்த மாணவர், மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடல் எடையை குறைக்க யூடியூப் பார்த்து டயட்டில் இருந்த மாணவர் பலி

கன்னியாகுமரி மாவட்டம் பர்ணட்விளையை சேர்ந்தவர் சக்தீஷ்வர். 17 வயதாகும் இவர் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, பொறியியல் கல்லூரியில் சேருவதற்காக தயாராகி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று (ஜூலை 24, 2025) காலை வீட்டில் இருந்த மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மாணவரின் மரணம் குறித்து அவரது பெற்றோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலீசார் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளது.

இதையும் படிங்க : 2 குழந்தைகளை கொன்ற அபிராமி.. சாகும் வரை ஆயுள் தண்டனை.. நீதிமன்றம் தீர்ப்பு

மூன்று மாதங்களாக வெறும் பழச்சாறு மட்டுமே குடித்து வந்த மாணவர்

அதாவது மாணவருக்கு உடல் எடை அதிகம் இருந்த நிலையில் கல்லூரிக்கு சென்றால் சக மாணவர்கள் கேலி கிண்டல் செய்வார்கள் என நினைத்த அவர் உடல் எடையை குறைக்க முடிவு செய்துள்ளார். அதன்படி யூடியூப் பார்த்து டயட் மற்றும் உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். இதற்காக கடந்த மூன்று மாதங்களாக திட உணவுகளை சாப்பிடாமல் இருந்து வந்த மாணவர், வெறும் பழச்சாறுகளை மட்டுமே குடித்து உடற்பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் தொடர்ந்து பழச்சாறு மட்டுமே குடித்து வந்ததால் சளி தொல்லைக்கு ஆளாகி மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து இருந்தது தெரியவந்தது.

இதையும் படிங்க : தோழிகள் குளிப்பதை வீடியோ எடுத்து காதலனுக்கு அனுப்பிய மாணவி.. பகீர் சம்பவம்!

சோகத்தை ஏற்படுத்திய மாணவரின் மரணம்

தற்போதைய காலகட்டத்தில் உடல் எடையை குறைக்க வேண்டும், மெல்லிய தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உள்ளது. இதன் காரணமாக பலரும் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி உன்கிட்ட செயல்களை செய்து வருகின்றனர். அந்த வகையில் உடல் எடையை குறைப்பதற்காக டயட் மற்றும் உடற்பயிற்சி செய்து வந்த மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.