Tamil Nadu News Highlights : முதலமைச்சர் விரைவில் குணமடைய வேண்டும் – இபிஎஸ்

Tamil Nadu Breaking news Today 21 July 2025, Live Highlights: உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் சுற்றுப்பயணத்தின் போது தெரிவித்துள்ளார்.

Tamil Nadu News Highlights : முதலமைச்சர் விரைவில் குணமடைய வேண்டும் - இபிஎஸ்

தமிழ்நாடு செய்திகள்

Updated On: 

21 Jul 2025 19:08 PM

தமிழக வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri Kazhagam)  மாநில அளவிலான கொள்கை விளக்க பொதுக் கூட்டம் ஜூலை, 21, 2025 திங்கள்கிழமை மாலை 4 மணி அளவில் சேலம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. கழகப் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் நடைபெற உள்ள இந்தப் பொதுக்கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு கட்சியின் கொள்கை குறித்து விளக்கமளிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை இயந்திரங்கள், கருவிகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு குறித்த முகாம் ஜூலை 21, 2025 அன்று நடைபெறுகிறது. பருவமழைக்கு விவசாயிகள் தயாராகும் வகையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை பராமரிப்பது குறித்து செயல் விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தமிழகம் முழுவதும் மாதாந்திர பராமரிப்பு காரணமாக எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படவிருக்கிறது என்பது குறித்து இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம். அரக்கோணம், ஜோலார்பேட்டை பிரிவுகளில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக, ஜூலை 21, 2025 அன்று காட்பாடி – ஜோலார்பேட்டை மற்றும் ஜோலார்பேட்டை – காட்பாடி ரூட்டில் செல்லும் 2 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதுகுறித்து மேலும் தகவல்களை இந்தப் பகுதியில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவஸ்தவா வருகற ஜூலை 21, 2025 அன்று பதவியேற்கவிருக்கிறார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி (R.N.Ravi) பதவிபிரமாணம் செய்து வைக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அப்டேட்டுகளை இந்தப் பகுதியில் பார்க்கலாம். அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பி.எட் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பபிக்க ஜூலை 21 கடைசி நாள். அதுகுறித்த தகவல்களையும் உடனுக்குடன் இந்தப் பகுதியில் பார்க்கலாம்.

மேலும் தமிழ்நாடு செய்திகளை உடனுக்குடன் விளக்கமாக படிக்க க்ளிக் செய்க

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 21 Jul 2025 07:06 PM (IST)

    முதலமைச்சர் ஸ்டாலின் குணமடைய இபிஎஸ் வாழ்த்து

    உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் முதலமைச்சர் ஸ்டாலின் விரைந்து குணமடைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தேர்தல் சுற்றுப்பயணத்தின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

  • 21 Jul 2025 06:40 PM (IST)

    ஆட்டோ ஓட்டுநரை செருப்பால் தாக்கிய மநீம மகளிர் நிர்வாகி சினேகா மோகன்தாஸ்

    சென்னை சைதாப்பேட்டையில் இருந்து மயிலாப்பூருக்கு ஆட்டோவில் பயணம் செய்த மநீம மகளிர் நிர்வாகி சினேகா மோகன் தாஸ் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் இடையே தகராறு ஏற்பட்டது. ஆட்டோ ஓட்டுநர் தன்னை தாக்கியதாக கூறி, சினேகா மோகன் தாஸ் அவரை செருப்பால் அடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

  • 21 Jul 2025 06:19 PM (IST)

    24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 10 கொலைகள்.. நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

    கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 10 கொலைகள் நடந்துள்ளது. கொலைகளின் பின்னணியில் போதைப் பொருள் இருப்பது திமுக ஆட்சியின் அவலச்சான்று என தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

  • 21 Jul 2025 06:05 PM (IST)

    சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து.. 3 பேர் பலி

    சிவகாசி ஆண்டியபுரத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் காயமடைந்த மூன்று பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  • 21 Jul 2025 05:50 PM (IST)

    சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு

    சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

  • 21 Jul 2025 05:34 PM (IST)

    VS Achuthanandan: கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் காலமானார்..

    கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதலமைச்சருமான வி.எஸ். அச்சுதானந்தன் தனது 102வது வயதில் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவுக் காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் படிக்க

  • 21 Jul 2025 05:17 PM (IST)

    கும்மிடிப்பூண்டி சிறுமி விவகாரம்.. பொதுமக்கள் ஒத்துழைப்பை நாடும் காவல்துறை

    திருவள்ளூரில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக சந்தேகப்படும் நபரின் தெளிவான புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டது. மேலும் தகவல் தெரிந்தவர்கள் 99520 60948 என்ற எண்ணுக்கு அழைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் படிக்க

  • 21 Jul 2025 05:00 PM (IST)

    மருத்துவமனையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. நலம் விசாரித்த ரஜினிகாந்த்

    உடல்நலக்குறைபாடு காரணமாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் முதலமைச்சரிடம் நலம் விசாரித்துள்ளார்.

  • 21 Jul 2025 04:40 PM (IST)

    பெண்கள் கல்லூரிக்குள் புகுந்து மாணவிகளை கடித்த தெரு நாய்கள்

    மதுரை மாவட்டத்தில் செயல்படும் மீனாட்சி கல்லூரிக்குள் 30க்கும் மேற்பட்ட நாய்கள் புகுந்து மாணவிகளை கடித்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 5 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நாய்களை பிடிக்க மாநகராட்சியில் இருந்து அதிகாரிகள், பணியாளர்கள் விரைந்துள்ளனர்.

  • 21 Jul 2025 04:20 PM (IST)

    கொடுமுடி காவிரி ஆற்றின் கரையோரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி காவிரி ஆற்றின் கரையோரத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 40 வீடுகள், பரிகார மண்டபம் இடித்து அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  • 21 Jul 2025 04:00 PM (IST)

    AIADMK: அதிமுக உட்கட்சி விவகாரம்.. உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி

    அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது விசாரணை நடத்தி முடிக்க காலக்கெடு தேவையில்லை. விரைவில் இந்த வழக்கு விசாரித்து முடிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது. இதுதொடர்பான வழக்கை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்திருந்தார்.

  • 21 Jul 2025 03:45 PM (IST)

    சீமானுடனான வழக்கில் சமரசம் இல்லை – விஜயலட்சுமி தரப்பு திட்டவட்டம்

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடரப்பட்ட வழக்கில் சமரசம் வேண்டாம், நீதி வேண்டும் என விஜயலட்சுமி தரப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மேலும் சீமான் வழக்கை ரத்து செய்யக்கோரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்த நிலையில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டுள்ளது.

  • 21 Jul 2025 03:20 PM (IST)

    தவெக தலைவர் விஜய் மற்றும் தொண்டர்கள் மீது வைஷ்ணவி புகார்

    தவெக தலைவர் விஜய் மற்றும் தொண்டர்கள் மீது அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்த வைஷ்ணவி புகார் அளித்துள்ளார். தன்னை பற்றி சமூக வலைதளங்களில் தவெக தொண்டர்கள் கேலிசித்திரம் பதிவிடுவதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

  • 21 Jul 2025 03:10 PM (IST)

    மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வருவார்- அன்வர் ராஜா

    அதிமுக அமைப்பு செயலாளராக இருந்த முன்னாள் எம்.பி., அன்வர் ராஜா திடீரென இன்று திமுகவில் இ ணைந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2026ல் முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வருவார் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் படிக்க

  • 21 Jul 2025 02:55 PM (IST)

    முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – அமைச்சர் துரைமுருகன்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை நேரில் சந்தித்த மூத்த அமைச்சரான துரை முருகன், “முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார்” எனவும் தெரிவித்துள்ளார்.

  • 21 Jul 2025 02:35 PM (IST)

    காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு.. நெல்லையில் பதற்றம்

    திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை அருகே கடந்த ஜூலை 19ம் தேதி காணாமல் போன 10ம் வகுப்பு மாணவி சடலமாக கிணற்றில் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • 21 Jul 2025 02:15 PM (IST)

    கடந்தை வண்டு கடித்து கணவன், மனைவி பலி.. தென்காசியில் சோகம்

    தென்காசி அருகே சீவநல்லூர் பகுதியில் கடந்தை வண்டு கடித்து கணவன், மனைவி என 2 பேர் உயிரிழந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தென்னை மரத்தில் உள்ள கடந்தை வண்டு கூட்டை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

  • 21 Jul 2025 01:55 PM (IST)

    CM MK Stalin Hospitalized: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி..

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர். வழக்கமான காலை நடைபயிற்சியின் போது ஏற்பட்ட தலைச்சுற்றல் காரணமாக மருத்துவமனை சென்ற அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். மேலும் படிக்க

  • 21 Jul 2025 01:40 PM (IST)

    சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. தேடுதல் பணியில் போலீசார்..

    திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளியைக் கண்டறிய போலீசார் தீவிர தேடுதல் நடத்தி வருகின்றனர். சந்தேக நபரின் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் ஒத்துழைப்பை போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் படிக்க

  • 21 Jul 2025 01:20 PM (IST)

    NEET UG 2025 Counselling: நீட் கலந்தாய்வு.. 12.36 லட்சம் மாணவர்கள் கலந்துக்கொள்கின்றனர்..

    இந்த ஆண்டு, நாடு முழுவதும் உள்ள 780 மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மத்திய அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் என அனைத்திலும் உள்ள சுமார் 1.18 லட்சம் மருத்துவப் படிப்பு இடங்களுக்கு, நீட் தேர்வில் தகுதி பெற்ற சுமார் 12.36 லட்சம் மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள். மேலும் படிக்க.. 

  • 21 Jul 2025 01:05 PM (IST)

    NEET UG 2025 Counselling: மருத்துவ படிப்பிற்கான நீட் 2025 கலந்தாய்வு தொடங்கியது..

    2025-ஆம் ஆண்டுக்கான NEET UG கலந்தாய்வு இன்று 2025 ஜூலை 21 முதல் தொடங்குகிறது. இந்தக் கவுன்சிலிங் மூலம் MBBS, BDS, BSc நர்சிங் படிப்புகளில் சேர்க்கை நடைபெறும். நாடு முழுவதும் உள்ள 1.18 லட்சம் இடங்களுக்கு 12.36 லட்சம் பேர் போட்டியிடுகின்றனர்.

  • 21 Jul 2025 12:45 PM (IST)

    தமிழக மருத்துவ கல்லூரி.. 50 மருத்துவ இடங்கள் குறைப்பு.. என்ன காரணம்?

    தமிழகத்தில் ஒரகடம் பிஎஸ்பி மருத்துவக் கல்லூரியில், கடந்த ஆண்டில் இருந்த 150 எம்பிபிஎஸ் இடங்களில் 50 இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இது தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளை பின்பற்றாததினால் ஏற்பட்டது என கூறப்படுகிறது. முன்னதாக, இந்த கல்லூரி 250 இடங்களுக்கு உயர்வு கோரியிருந்தும் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மேலும் படிக்க.. 

  • 21 Jul 2025 12:30 PM (IST)

    Dowry Case: வரதட்சணை கொடுக்காததால் திருமனத்தை நிறுத்திய காதலன்.. புகார் கொடுத்த காதலி..

    பிரவீன் குமாரின் தாயார் கஜலட்சுமி கூடுதலாக தங்க நகை ரொக்க பணம் கேட்பதாகவும் அதன் காரணமாக குறிப்பிட்ட தேதியில் திருமணத்தை நடக்க விடாமல் தடுத்து ஏமாற்றுவதாகவும் தெரிவித்துள்ளார். இளம் பெண்ணின் இந்த புகாரின் அடிப்படையில் பிரவீன் குமார் மற்றும் அவரது பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் படிக்க

  • 21 Jul 2025 12:10 PM (IST)

    தலைத்தூக்கும் வரதட்சணை கொடுமை.. காவல் நிலையத்தில் காதலி புகார்..

    கோவில்பட்டியில் இளம் பெண் ஒருவரை காதலித்து வனத இளைஞர், தங்கள இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில், துபாபில் இருந்து ஊருக்கு வராமல் ஏமாற்றியுள்ளார். வரதட்சணை காரணமாக மாப்பிள்ளை வீட்டார் இவ்வாறு திருமணத்தை நடத்தவிடாமல் அலைக்கழித்து வந்த நிலையில், அது குறித்து பாதிக்கப்பட்ட இளம் பெண் புகார் அளித்துள்ளார்.

  • 21 Jul 2025 11:50 AM (IST)

    வடகிழக்கு பருவமழை.. சென்னை மாநகராட்சி தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை..

    சென்னை மாநகரில் தென்மேற்குப் பருவமழை அவ்வப்போது பெய்து வரும் நிலையில், அக்டோபரில் தொடங்கவுள்ள வடகிழக்குப் பருவமழையைக் கணக்கில் கொண்டு, முன்னெச்சரிக்கையாக 1,034 கி.மீ. வடிகால் தூர்வாரப்பட்டுள்ளது. 87 இடங்களில் புதிய வடிகால்கள், மின்மோட்டார்கள் அமைக்கப்பட்டுள்ளன. 169 இடங்கள் தற்காலிக தங்குமிடங்களாக தயார் நிலையில் உள்ளன. மேலும் படிக்க.. 

  • 21 Jul 2025 11:35 AM (IST)

    No Parking Fee: பார்க்கிங் வசதி.. சென்னை மாநகராட்சி தரப்பில் மறு ஒப்பந்தம் செய்ய நடவடிக்கை..

    பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் வாகன நிறுத்துவதற்கான ஒப்பந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கட்டணமின்றி வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக புகார்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியின் ஒன்று ஒன்பது ஒன்று மூன்று என்ற தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  • 21 Jul 2025 11:20 AM (IST)

    சென்னையில் வாகனம் நிறுத்த கட்டணம் தேவையில்லை..

    சென்னை மாநகராட்சி தரப்பில் பல்வேறு இடங்களில் வாகனம் நிறுத்துவதற்காக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த ஒப்பந்தங்கள் நேற்றுடன் அதாவது 2025 ஜூலை 20ஆம் தேதி உடன் முடிவடைந்த நிலையில், மறு ஒப்பந்தம் செய்யும்வரையில் வாகனம் நிறுத்துவதற்கு கட்டணம் செலுத்த தேவையில்லை என சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க.. 

  • 21 Jul 2025 11:00 AM (IST)

    திருட்டு சம்பவத்தில் எம்.பி.ஏ பட்டதாரி.. 100 சொகுசு கார்கள் விற்று ஆடம்பர வாழ்க்கை..

    எம்.பி.ஏ. பட்டதாரியான சட்டேந்திரசிங் கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் சொகுசு கார்களை நோட்டமிட்டு, அதனை நவீன கருவிகளைப் பயன்படுத்தி திருடியுள்ளார். இதுவரை அவர் 100-க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை திருடி, அந்த பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார். தற்போது சென்னை போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

  • 21 Jul 2025 10:45 AM (IST)

    Chennai Crime: சொகுசு காரை திருடி.. சொகுசு வாழ்க்கை வாழ்ந்த நபர்..

    ராஜஸ்தானைச் சேர்ந்த சட்டேந்திரசிங் ஷெகாவத் , கடந்த 20 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை திருடியுள்ளார். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் நவீன கருவிகள் மூலம் கார்களை திருடி, சாலையில் ஓட்டிச் சென்று ராஜஸ்தான் மற்றும் நேபாளத்தில் விற்றுள்ளார். மேலும் படிக்க.. 

  • 21 Jul 2025 10:30 AM (IST)

    திருவாரூரில் கிடைத்த அம்மன் சிலைகள்.. தொல்லியல் துறை ஆராய்ச்சி..

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா வேலங்குடி ஊராட்சி வடகரை மாத்தூரில் கோயில் பணிக்காக நிலத்தை தோண்டிய போது, 1½ அடி மற்றும் 1 அடி உயரமுள்ள இரண்டு அம்மன் சிலைகள் கிடைத்ததை தொடர்ந்து உடனடியாக கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சிலைகளை தொல்லியல் துறை அதிகார்கள் ஆய்வு மேற்கொண்டு சிலை குறித்து மேலும் தலவல்கள் தெரிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  • 21 Jul 2025 10:15 AM (IST)

    கோயில் பணியின் போது கிடைத்த அம்மன் சிலைகள்..

    திருவாரூர் மாவட்டம், மாத்தூரில் பழைய கோவில் இடத்தில் அகழ்வாராய்ச்சிப் பணியின் போது, 1½ அடி மற்றும் 1 அடி உயரமுள்ள இரண்டு அம்மன் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை உலோகத்தால் செய்யப்பட்டவை எனக் கூறப்படுகிறது. சம்பவ இடம் கிராம நிர்வாக அலுவலருக்கும், தொல்லியல் துறைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க.. 

  • 21 Jul 2025 10:03 AM (IST)

    TVK : பொதுக்கூட்டம் அறிவிப்பு – குறிக்கோள் இதுதான்

    இது தொடர்பான அறிவிப்பில், தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்றுச் சிறப்புரையாற்ற உள்ளனர். இதில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், சார்பு அணிகளின் அனைத்து நிலை நிர்வாகிகள் கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவரும் கலந்துகொண்டு, கழகத்தின் கொள்கைகள் மற்றும் குறிக்கோள்களைப் பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது

  • 21 Jul 2025 09:37 AM (IST)

    TVK Meeting : சிறப்புத் தீர்மானத்தின்படி பொதுக்கூட்டம்

    தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள்கள் மற்றும் கொள்கைகளை மக்களிடையே கொண்டு செல்லும் வகையில், 5 கழக மண்டலங்கள், 120 கழக மாவட்டங்கள் மற்றும் 12,500 கிளைக் கழகங்கள் ஆகியவற்றில் கழகக் கொள்கை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று கழகச் செயற்குழுக் கூட்டத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி இன்று முதல் பொதுக்கூட்டம் தொடங்கவுள்ளது

    Read More

  • 21 Jul 2025 09:10 AM (IST)

    கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம் ஏன்?

    தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம் 2025 ஜூலை 21 தேதியான இன்று மாலை 4 மணி அளவில் சேலத்தில் நடக்கவுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள்கள் மற்றும் கொள்கைகளை மக்களிடையே கொண்டு செல்லும் வகையில் இந்த மீட்டிங் நடக்கவுள்ளது.

  • 21 Jul 2025 08:56 AM (IST)

    செயலி மூலம் என்னவெல்லாம் தெரிந்துகொள்ளலாம்?

    இந்த செல்போன் செயலி மூலம், டிஜிட்டல் முறையில் காப்பீட்டு அட்டையை பெறுதல், அருகிலுள்ள மருத்துவமனை விபரங்கள், சிகிச்சை வகைகள் மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை பற்றிய தகவல்களை அறிதல் உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொள்ள முடியும்.

    Read More

  • 21 Jul 2025 08:40 AM (IST)

    மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் – புகார் என்ன?

    முதல்வர் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தற்போது 1.48 கோடி குடும்பங்கள் உள்ளன. ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான சிகிச்சைகள் வழங்கப்படுவதுடன், 8 உயர் சிகிச்சைகளுக்காக கூடுதல் ரூ.22 லட்சம் வரை செலவிடப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் உயர் சிகிச்சைகள் மறுக்கப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்தன

  • 21 Jul 2025 08:21 AM (IST)

    Chief Minister Health Insurance : முதல்வர் காப்பீட்டுத் திட்ட செயலி!

    முதல்வர் காப்பீட்டுத் திட்ட சிகிச்சை விவரங்களை அறியும் புதிய செயலி விரைவில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் வழங்கும் சிகிச்சைகள் குறித்து பொதுமக்கள் தெளிவாக அறிந்து கொள்ள ஏதுவாகவும், வெளிப்படைத்தன்மை ஏற்படுத்தும் விதத்திலும் இந்த செயலி இருக்கும் என்றும், காப்பீட்டுத் திட்டம் குறித்து முழுமையான தகவலை வழங்கும் என்றும் கூறப்படுகிறது

  • 21 Jul 2025 08:00 AM (IST)

    நீலகிரி, கோவையில் கனமழை

    கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி நடுவட்டத்தில் 10 சென்டிமீட்டர் மழை பதிவானது.   கோவை மாவட்டம் சின்னகல்லாரில் 8 சென்டிமீட்டர் மழை பதிவானது. இது ஒரு பக்கம் இருக்க தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூர் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இன்றும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் மழை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

    Read More

  • 21 Jul 2025 07:58 AM (IST)

    Chennai Rains: சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் அதிகபட்ச வெப்பநிலை என்பது 35 டிகிரி செல்சியஸ் ஆக இருக்க கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • 21 Jul 2025 07:34 AM (IST)

    Weather Today : ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும்

    வளிமண்டல மேலடுக்க சுழற்சி  காரணமாக ஜூலை 21 2025 தேதியான இன்று தமிழகத்தில் நீலகிரி, தென்காசி, தேனி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

  • 21 Jul 2025 07:31 AM (IST)

    வாக்கு சதவீதம் தெரியுமே – அண்ணாமலை

    ஒரு கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்குமா என்றால் தெரியாது என்று குறிப்பிட்ட அண்ணாமலை, 2024 மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கு எத்தனை வாக்கு சதவீதம் இருந்தது என்பதை நன்றாக அறிவார்கள் எனக் குறிப்பிட்டார்.

    Read More

  • 21 Jul 2025 07:08 AM (IST)

    எடப்பாடி பழனிசாமிக்கு பதில் கொடுத்த அண்ணாமலை

    முன்னதாக, பிரசாரத்தின்போது பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி “ அதிமுக யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கும், கூட்டணி ஆட்சியா என கேட்கிறீர்கள், நாங்கள் ஏமாளிகள் கிடையாது. எங்களுக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை” என தெரிவித்தார். இதற்குத்தான் தற்போது முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

  • 21 Jul 2025 07:02 AM (IST)

    Annamalai Speech : மாநிலத் தலைவர் பதவி என்பது வெங்காயம் போன்றது – அண்ணாமலை

    செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, பாஜக யாரையும் ஏமாற்றும் கட்சி அல்ல, ஏமாறும் கட்சியும் அல்ல என  தெரிவித்தார். மேலும் மாநில தலைவர் குறித்து பேசிய அவர், மாநிலத் தலைவர் பதவி என்பது வெங்காயம் போன்றது அது உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது பதவிக்கு பின்னால் செல்பவன் நான் அல்ல என்றார்.