AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வசூல் தொடர்ந்து 3-வது மாதமாக சரிவு.. தவெக அரசை சுழன்றடிக்கும் புதிய சிக்கல்!!

Tamil Nadu GST revenue drop: இந்தியாவில் செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2.04 லட்சம் கோடியாக அதிகரித்து சாதனை படைத்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து 3-வது மாதமாகக் சரிவைக் கண்டுள்ளது. தவெக அரசின் நிதியமைப்பின் போதாமை மற்றும் பொருளாதாரத் தேக்கநிலையே இதற்குக் காரணம் என எதிர்க்கட்சிகள் மற்றும் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு சாடியுள்ளனர்.

தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வசூல் தொடர்ந்து 3-வது மாதமாக சரிவு.. தவெக அரசை சுழன்றடிக்கும் புதிய சிக்கல்!!
தங்கம் தென்னரசு
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 02 Oct 2026 07:42 AM IST

சென்னை, அக்.02: இந்திய அளவில் பொருட்கள் மற்றும் சேவைகள் வரி (GST) வசூல் செப்டம்பர் மாதத்தில் ரூ.2.04 லட்சம் கோடியைக் கடந்து 14.7 சதவீத வளர்ச்சியுடன் புதிய உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டின் உள்நாட்டு ஜிஎஸ்டி வசூல் தொடர்ந்து மூன்றாவது மாதமாகக் குறைந்து சரிவைப் பதிவு செய்திருப்பது அரசியல் மற்றும் நிதி வட்டாரங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. நாட்டின் பிற முக்கிய மாநிலங்கள் மற்றும் அண்டை மாநிலங்கள் வரி வசூலில் கணிசமான வளர்ச்சியைக் கண்டு வரும் சூழலில், தொழில்வளம் மிக்க தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி வசூல் -5 சதவீதம் வரை சரிவைச் சந்தித்திருப்பது, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் நிதி நிர்வாகச் சீர்கேட்டையே வெளிக்காட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இதையும் படிக்க: அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் அமைச்சர் செம்மலை பரபரப்பு விளக்கம்!

தொடர் சரிவில் மாநிலத்தின் வரி வருவாய்:

மத்திய அரசின் நிதி அமைச்சகம் வெளியிட்ட செப்டம்பர் மாத ஜிஎஸ்டி தரவுகளின்படி, உத்தரப் பிரதேசம், அசாம் போன்ற மாநிலங்கள் இரட்டை இலக்க வளர்ச்சியப் பதிவு செய்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் வரி வசூல் இறங்குமுகத்திலேயே பயணித்து வருகிறது. கடந்த மூன்று மாதங்களாகவே மாநிலத்தில் ஜிஎஸ்டி வசூலின் வளர்ச்சி விகிதம் குறைந்து, தற்போது எதிர்மறை (-5%) வளர்ச்சிக்குச் சென்றுள்ளது. இதன் மூலம் மாநில அரசிற்கு வர வேண்டிய பல நூறு கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இறக்குமதி வரி உயர்வால் நாட்டின் ஒட்டுமொத்த வருவாய் அதிகரித்திருந்தாலும், தமிழ்நாட்டின் உற்பத்திக் துறை மற்றும் உள்நாட்டு வணிகப் பரிவர்த்தனைகள் மந்தமடைந்துள்ளதையே இந்தத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அரசை சாடும் தங்கம் தென்னரசு:

தமிழ்நாட்டின் இந்தத் தொடர் ஜிஎஸ்டி வசூல் சரிவு குறித்துக் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தவெக அரசு மாநிலத்தின் பொருளாதாரத்தை முறையாக நிர்வாகிக்கத் தவறிவிட்டது எனக் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். “கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாட்டின் தொழில் வளம் மற்றும் வணிக நடவடிக்கைகளில் தேக்கநிலை நிலவி வருகிறது. முந்தைய ஆட்சியில் பொருளாதாரத்தில் முன்னணி மாநிலமாகத் திகழ்ந்த தமிழ்நாடு, தற்போதைய தவெக அரசின் தவறான திட்டமிடல் மற்றும் நிர்வாகக் குளறுபடிகளால் வரி வசூலில் பின்னடைவைச் சந்தித்துள்ளது” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், நாட்டின் பிற மாநிலங்கள் வேகமாக வளர்ச்சி அடையும் போது, தமிழ்நாட்டின் வருவாய் குறைந்து வருவதற்குக் ஆளும் அரசு என்ன பதில் சொல்லப்போகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிக்க : தவெக கூட்டணிக்கு பாமக வந்தால்… விசிக வெளியேறிவிடும்.. கட்சியின் பொருளாளர் தடாலடி!

பொருளாதார வல்லுநர்களின் கவலை:

தொழில்துறை தேக்கநிலை, புதிய முதலீடுகள் ஈர்ப்பதில் தாமதம் மற்றும் வர்த்தகர்களுக்கான தொழில் சூழலில் நிலவும் பின்னடைவுகளே இந்த வரி வசூல் சரிவுக்கு முக்கியக் காரணங்களாக வல்லுநர்களால் பார்க்கப்படுகின்றன. வரவிருக்கும் பண்டிகைக் காலத்திலாவது உள்நாட்டு வர்த்தகம் அதிகரித்து ஜிஎஸ்டி வசூல் மீளுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இருப்பினும், தொடர்ந்து 3 மாதங்களாக வரி வருவாய் சரிந்து வருவதால், மாநில அரசின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் நெருக்கடி ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Follow Us