AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரோஜா, டெடி பியர் எல்லாம் ஓல்டு ஃபேஷன்…. இப்போது காதலர் தின கிஃப்ட் என்ன தெரியுமா?

Valentine’s Day Trend : ரோஜா, டெடி பியர் போன்றவற்றை பரிசளிப்பது ஓல்டு டிரெண்டாக மாறிவருவது ஸ்விகியின் இன்ஸ்டாமார்ட் வெளியிட்ட தகவலில் வெளியாகியுள்ளது. இன்றைய இளைஞர்கள் தங்கள் இணைக்கு அவர்களுக்கு விருப்பமான பொருட்களை தேர்ந்தெடுத்து வழங்குவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுகுறித்து விரிவாக பார்ககலாம்.

ரோஜா, டெடி பியர் எல்லாம் ஓல்டு ஃபேஷன்…. இப்போது காதலர் தின கிஃப்ட் என்ன தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 08 Feb 2026 15:36 PM IST

2026 காதலர் தினத்தில் (Valentine day) இந்தியர்களின் காதலர் தின பரிசுகள் முழுமையாக மாறிக்கொண்டிருப்பதாக ஸ்விகி இன்ஸ்டாமார்ட் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. காரணம், காதலர் தினம் என்றாலே சட்டென நினைவுக்கு வருவது ரோஜா பூ, கிரீட்டிங் கார்டுகள், டெடி பியர்கள் தான். ஆனால் தற்போது ரோஜா மற்றும் டெடி பியர்கள் ஆகியவற்றை பரிசளிக்கும் டிரெண்ட் பழையதாகி விட்டது. மக்கள் தற்போது சாக்லேட், சிப்ஸ், புரோட்டீன் பார்கள், அழகு சாதன பொருட்கள் அடங்கிய கிட்கள், சுய பராமரிப்பு பொருட்கள் போன்றவற்றை பூக்கொத்து போல அலங்கரித்து பரிசளிக்கத் தொடங்கியுள்ளனர். இவ்வகையான ஸ்நாக் பூக்கொத்துகள் Gen Z மற்றும் மில்லேனியல் தலைமுறையினரிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறிவரும் காதலர் தின டிரெண்ட்

இதுகுறித்து இன்ஸ்டாமார்ட் வெளியிட்ட தரவின்படி, தற்போதைய இளம் தலைமுறையினர் பெரிய அளவில் ஆடம்பரமாக காதலை வெளிப்படுத்துவதை விட, தங்கள் ஜோடியை தாங்கள் எவ்வாறு புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை காட்டும் பரிசுகளை தேர்ந்தெடுக்கின்றனர் என்று தெரிவித்துள்ளது. குறிப்பாக தங்கள் இணைக்கு பிடித்த ஸ்நாக்ஸ், ஸ்கின் கேர் பொருட்கள், ஐஸ்கிரீம், உடல் நலன் சார்ந்த பொருட்கள் போன்றவை தான் இப்போது காதலின் அடையாளமாக மாறியுள்ளன.

இதையும் படிக்க : Valentine Week : ரோஜாவுடன் தொடங்கும் காதலர் தின வாரம்.. எந்த நாளில் என்ன கொண்டாட வேண்டும்?

இதன் காரணமாக, காதலர் தின வாரத்தில் மாலை மற்றும் நள்ளிரவு நேரங்களில் ஆர்டர்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக, மூவி நைட் அல்லது கடைசி நிமிட சர்ப்ரைஸ்களுக்கு ஏற்ற பொருட்களே அதிகமாக ஆர்டர் செய்யப்படுவதாக இன்ஸ்டாமார்ட் தெரிவித்துள்ளது. முன்பு காதல் கனவு உலகத்தில் இருப்பது போல ரொமாண்டிக்காக பரிசுகளை வழங்கினார்கள். தற்போது மிகவும் இயல்பாக நடைமுறையில் பலனளிக்கும் வகையிலான பரிசுகளையே அளிக்க விரும்புகின்றனர். இது காதலின் இயல்பு மாறிவருவதை உணர்த்துகிறது.

இதையும் படிக்க : Valentine’s Day: காதலை போற்றும் காதலர் தினம்.. எப்படி உருவானது..? இதன் வரலாறு என்ன?

ஒரு மணி நேரத்தில் 100 ரோஜாக்கள் ஆர்டர்

இதே நேரத்தில், சென்னை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் பூக்கொத்துகள், விருப்பமான ஸ்நாக்ஸ் அடங்கிய காம்போ பேக், மற்றும் செல்ஃப் கேர் காம்போக்கள் அதிகம் வாங்கப்படுகின்றன. ஆனால் நான்மெட்ரோ பகுதிகளில் இன்னும் பாரம்பரிய ரோஜா மலர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் தரவுகள் காட்டுகின்றன. இருந்தாலும், ரோஜாக்கள் பரிசளிப்பது முற்றிலும் மறையவில்லை. கடந்த காதலர் தினத்தில் ஒரு நிமிடத்திற்கு நூற்றுக்கணக்கான ரோஜாக்கள் ஆர்டர் செய்யப்பட்டதாக இன்ஸ்டாமார்ட் பதிவு செய்துள்ளது. இதனால், 2026-ல் காதல் கொண்டாட்டம் பாரம்பரியமும் நவீனமும் கலந்த ஒரு புதிய வடிவத்தை எடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

Follow Us