AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பண மோசடி வழக்கு – விசாரிக்க சென்ற காவலர் மீது நாயை ஏவி விட்டு கடிக்க வைத்த கொடூரம்

கன்னியாகுமரி அருகே பணமோசடி வழக்கில் விசாரணைக்காக சென்ற காவலர் மீது நாயை வைத்து கடிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் படுகாயமடைந்த காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏர்படுத்தியுள்ளது. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

பண மோசடி வழக்கு – விசாரிக்க சென்ற காவலர் மீது நாயை ஏவி விட்டு கடிக்க வைத்த கொடூரம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 09 Jun 2026 22:07 PM IST

கன்னியாகுமரி, ஜூன் 9 : பண மோசடி வழக்கை விசாரிக்க சென்ற காவல்துறையினர் மீது, தன் வீட்டு நாயை விட்டு கடிக்க வைத்தாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் சிராயன்விளை என்ற பகுதியைச் சேர்ந்தவர் கிரேட் பிரின்ஸ் ராஜ். இவர் தனது தங்கை கிருஷ்ணவேணி மற்றும் அவரது கணவர் நாகசுமன் ஆகியோர் மீது ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் ஜூன் 9, 2026 இன்று தன்னிடம் பணம் மோசடி செய்ததாக புகார் அளித்தார்.

விசாரிக்க சென்ற காவலர் மீது நாயை ஏவி விட்டு கடிக்க வைத்த கொடூரம்

அந்த புகாரில் தனது மாமனார் வீட்டில் இருந்து சொத்துக்களை வாங்கி தருவதாக தனது தங்கை கிருஷ்ணவேணி தன்னிடம் கூறி வந்தார். அதனை நம்பி அவரது கணவர் நாகசுமன் மற்றும் கிருஷ்ணவேணி தன்னிடம் பணம் கேட்கும்போதெல்லாம் அளித்து வந்தேன். மேலும் என்னிடம் இருந்து ரூ.6 லட்சம் வரை என்னிடம் ஏமாற்றி வாங்கினர் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து பிரின்ஸ் ராஜ் அளித்த புகாரின் பெயரில் ஆரல்வாய்மொழில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையும் படிக்க : மது போதையில் அரக்கனாக மாறிய அண்ணன்.. சென்னையில் தூங்கிக்கொண்டிருந்த தம்பி அடித்து கொலை.. பதறவைக்கும் பின்னணி!

இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக காவல்துறையினர் நாகசுமன் மற்றும் கிருஷ்ணவேணி வீட்டுக்கு சென்றனர். இருவரும் விசாரணை நடத்திய போது , கிருஷ்ணவேணி காவல்துறையினரை பார்த்து தகாத வார்த்தைகளாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் தான் வளர்க்கும் நாயை காவல்துறையினர் மீது ஏவி விட்டுள்ளார். இந்த நிலையில் அந்த நாய் கடித்ததில் உதவி ஆய்வாளர் அனுஜன் என்பவருக்கு வயிற்றுப்பகுதியில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஆரல்வாய்மொழி போலீசார் நாகசுமன், கிருஷ்ணவேணி தம்பதியரை தேடி அவர்களது வீட்டிற்கு சென்றனர். ஆய்வாளர் பச்சைமால், உதவியாளர் அனுஜன் மற்றும் காவலர்கள் அங்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது கிருஷ்ணவேணி போலீசாரை பார்த்து ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

இதையும் படிக்க : கோவையில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த வடமாநில கும்பல்.. அதிரடியாக குழந்தைகளை மீட்ட இளைஞர்கள்!

இதனையடுத்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் நாகசுமன் மீது மதுரை தெப்பக்குளம், அண்ணாநகர், திருப்பூர் மடத்துக்குளம், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, நீலகிரி மாவட்டம் நடுவட்டம் ஆகிய காவல்நிலையங்களில் வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. இதற்கிடையில் விசாரணைக்கு சென்ற இடத்தில் நாயை ஏவி விட்டு கடிக்க வைத்தது மற்றும் பணி செய்ய விடாமல் தடுத்தது ஆகிய பரிவுகளின் கீழ் உதவி ஆய்வாளர் அனுஜன் புகார் கொடுத்துள்ளார்.

Follow Us