அரசு பள்ளியில் பயங்கரம் – 12 ஆம் வகுப்பு மாணவருக்கு கத்திக்குத்து – அதிர்ச்சி சம்பவம்
: சிவகங்கை அருகே அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மாணவனுக்கு கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கத்தியால் குத்திய மாணவன் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார். இந்த நிலையில் கத்தியால் குத்தப்பட்ட மாணவனை மீட்ட ஆசிரியர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிவகங்கை, ஜூலை 15 : சிவகங்கை அருகே அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மாணவனுக்கு கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சிவகங்கை மாவட்டம் சாத்தரசன் கோட்டை அருகே மல்லல் பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் அந்த பகுதியை சுற்றியுள்ள ஊர்களில் இருந்து மாணவர்கள் படிக்க வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த வாரம் அந்த பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படும் நிலையில் ஆசிரியர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மதிய உணவு இடைவேளையில் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் இருந்தபோது, 2 மாணவர்களுக்குள் இடையே மீண்டும் வாக்கு வாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது மாணவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சக மாணவரை குத்தியுள்ளார்.
இதையும் படிக்க : ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெறும் தவெக நிர்வாகி?.. இணையத்தில் வைரலாகும் வீடியோ.. அதிரடி விளக்கம்!!




இதில் சக மாணவனுக்கு முதுகு, இடுப்பு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்துள்ளது. இதனையடுத்து கத்தியால் குத்திய மாணவன் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார். இந்த நிலையில் கத்தியால் குத்தப்பட்ட மாணவனை மீட்ட ஆசிரியர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு இடையே அதிகரித்து வரும் வன்முறை கலாச்சாரம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
அதிகரித்து வரும் அரசு பள்ளி மாணவர்களிடையே வன்முறை
இதே போல கடந்த சில மாதங்களுக்கு தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் அறிஞர் அண்ணா அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் இருதரப்பினர் இடையே பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் பிளஸ் 1 மாணவர் ஒருவர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதனையடுத்து இரு தரப்பு பெற்றோர்களையும் அழைத்து காவல்துறையினர் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
இதையும் படிக்க : விசாரணைக் கைதி மரணம் – சக கைதிகள் 8 பேர் மீது வழக்கு – என்ன நடந்தது?
அடுத்த சில நாட்களிலேயே மாணவர்கள் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து கவியரசன் என்ற மாணவர் நண்பர்களுடன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பட்டீஸ்வரம் அருகே பிளஸ் 1 மாணவர்கள் கவியரசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது இருதரப்பினரும் மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது பிளஸ் 1 மாணவர்கள் மரக்கட்டையால் தாக்கியதில் கவியரசன் படுகாயமடைந்திருக்கிறார். உடனடியாக அருகே வசிப்பவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர் உயிரிழந்திருக்கிறார்.